|
1/11/15
![]() | ![]() ![]() | ||
Kathir Nilavan
தமிழர் தாயகம் பிறந்த நாள் 1.11.1956
பட்டம் தாணுப்பிள்ளைக்க
ு கறுப்புக் கொடி காட்டிய போராளி சந்திரபாபு
மதுரையில் பொதுவாழ்வில் அர்ப்பணிப்போடு வாழ்ந்தவரும் ஒரு ஆண்டுக்கு முன்
மறைந்தவருமாகிய ம.பொ.சி.யின் தொண்டர் சந்திரபாபுவை சற்று எளிதில்
யாராலும் மறக்க முடியாது.
ம.பொ.சி.யின் மீசைத் தோற்றத்தோடு கம்பீரமாக காட்சி தருபவர். தள்ளாடிய
படியே 74 அகவையிலும் மக்கள் நெருக்கம் மிகுந்த மதுரை மேலமாசி வீதிக்கு
வந்து விடுவார். அங்குள்ள தனது நண்பராகிய வழக்கறிஞர் அலுவலகத்திற்கு
நாள்தோறும் வருவதும், அங்கு வருவோரிடம் மணிக்கணக்கில் எல்லைப் போராட்ட
வரலாறு பேசுவதும் வாடிக்கையாக கொண்டிருப்பார். பழைய வரலாற்று நிகழ்வுகள்
எதைக் கேட்டாலும் நாள், மாதம், ஆண்டு, உள்பட அனைத்தையும் ஞாபகத்தோடு
கூறுவார்.
ம.பொ.சி. நடத்திய தெற்கெல்லை, வடக்கெல்லைப் போராட்டம், தமிழ்நாடு பெயர்
மாற்றப் போராட்டம், தமிழ் ஆட்சிமொழிப் போராட்டம் என அனைத்திலும்
பங்கேற்று சிறை சென்றவர் சந்திரபாபு. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நான்
தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தில் பணியாற்றிய போது அமைப்பு சார்பில்
எல்லைக்காப்பு போரில் பாடுபட்ட ஈகியருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
அதில் சந்திரபாபுவும் அழைக்கப்பட்டு சிறப்பிக்கப் பட்டார்.
அதன் பிறகு 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் "சமூகநீதித் தமிழ்த் தேசம்" மாத
ஏட்டிற்காக ஆசிரியர் குழுவில் இருந்த நான் அவரிடம் பேட்டி கேட்கச்
சென்றேன். அப்போது அவர் ம.பொ.சி. எழுதிய "எனது போராட்டம்" நூலை எனக்கு
அளித்து படித்து வரச் சொன்னார்.
அந்நூல் தான் என்னுள் பல மாற்றங்களை தோற்றுவித்தது. ம.பொ.சி.யை திராவிட
இயக்கத்தவர் பார்வையில் கடுமையாக விமர்சித்த வந்த நான் அந்நூலை முழுமையாக
படித்து முடித்த போது ம.பொ.சி. மீது மிகப்பெரும் மரியாதை எனக்கு
ஏற்பட்டது. அந்நூல் தந்துதவிய ஐயா சந்திரபாபுக்கு நன்றி தெரிவித்து
விட்டு பேட்டியைத் தொடங்கினேன். அதன் சில பகுதிகள் பின் வருமாறு:
ஐயா உங்களுடைய குடும்ப வாழ்க்கை குறித்துக் கூறுங்கள்?
நான் 1940ஆம் வருடம் சூன் மாதம் 9ஆம் தேதி பிறந்தேன். முத்துச்சாமி
பிள்ளை, தெய்வம்மாள் ஆகியோரே என் பெற்றோர்கள். எனக்கு அவர்கள் வைத்த
பெயர் சந்திரன். நான் சிறுவனாக இருந்த போது என்னுடைய அப்பா நாட்டுப்
புறப்பாடல் ஆசிரியரான பெருமாள் கோனார் பாடல்களை பாடி மகிழ்விப்பார். நான்
படித்தது 8ஆம் வகுப்புத்தான். எனக்கு உற்ற நண்பனாக இருந்த மனைவி சரசுவதி
காலமாகி விட்டார். எனக்கு இரண்டு மகன்கள். இருவருக்கும் திருமணம்
முடிந்து விட்டது.
தமிழரசுக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டது எப்போது?
எனக்கு 13 வயது இருக்கும் போதே ம.பொ.சி. பற்றி ஓரளவு அறிந்து இருந்தேன்.
அப்பொது தமிழரசுக் கழத்தில் டாக்டர் லயன் என். துரை, ஏ.கே.முருகையா,
பவுன் ராஜ் ஆகியோர் மதுரையில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களோடு
சேர்ந்து கூட்டங்களுக்குச் செல்வேன். சிம்மக்கல் பிள்ளையார் கோயில்
அருகிலுள்ள அரசமரத்தில் தமிழரசுக் கொடியும், காங்கிரசுக் கட்சிக்
கொடியும் கட்டச் சொன்னார்கள். கட்டினேன்.
அப்போது தமிழரசுக் கழக மேடைகளில் விசாலா ஆந்திரா கேட்டுத் தெலுங்கர்கள்
போராடி வருவதைப் போல, ம.பொ.சி. அவர்கள் தமிழ்நாடு மாநிலம் அமைக்கப்
போராடி வருகிறார். தமிழர்களே! அவருக்கு துணை நில்லுங்கள் என்று
வேண்டுகோள் விடுப்பார்கள். எந்தக் கூட்டம் நடந்தாலும் என்னைத் தான் கொடி
கட்ட அழைத்துப் போவார்கள். அப்போது தலைவர்களின் பேச்சுகள் என்னை
கவர்ந்திழுத்தன. அது முதலே தமிழரசுக் கழகத்தில் என்னை முழுமையாக
அர்ப்பணித்துக் கொண்டு விட்டேன்.
திருவிதாங்கூர் கொச்சி முதல்வர் பட்டம் தாணுப்பிள்ளைக்குக் கறுப்புக்கொடி
காட்டிக் கைதானது எதற்கு என்று கூற முடியுமா?
1953ஆம் வருடம் சூலை மாதம் மூன்றாம் நாள் வடக்கெல்லை மீட்புப்
போராட்டத்தைத் தலைவர் ம.பொ.சி. அவர்கள் திருத்தணியில் நடத்திய போது
கைதானார். அதைக் கண்டித்து மதுரையில் ரயில் மறியல் நடத்தினார்கள்.
தொண்டர்களுக்குக் கொடியும், கம்பும் கொடுக்கும் பணியை எனக்கு
அளித்தார்கள். அதற்கு அடுத்த மாதம் தெற்கெல்லையில் தமிழர்கள் சுட்டுக்
கொல்லப்பட்ட செய்தி பரவியது. சுட்டுக் கொலை செய்ய உத்தரவிட்டவர் தான்
இந்த பட்டம் தாணுப் பிள்ளை. இவர் எந்த குற்ற உணர்வுமின்றி திண்டுக்கல்
பிரஜா சோசலிஸ்ட் கட்சி மாநாட்டிற்கு 16.8.1954 அன்று வரப்போவதாக
அறிவித்தார்.
அதைக் கேள்விபட்டுக் கொதித்தெழுந்த ம.பொ.சி. தொண்டர்கள் பட்டம் தாணுப்
பிள்ளைக்குக் கறுப்புக் கொடி காட்ட அழைப்பு விடுத்தனர். கவிஞர்
கா.மு.செரிப், மதுரைப் போராட்டத் தளபதி கவி. மா.காளிதாஸ் ஆகியோர்
தலைமையில் 150 பேர் புறப்பட்டோம். அவர் வரும் பாதையில் எதிர்ப்பைக்
காட்டுவதற்காக நான் தான் மின்சாரக் கம்பத்தில் ஏறிக் கறுப்புக் கொடியைக்
கட்டினேன். அதைப் பார்த்துக் கொண்டிருந்த பிரஜா சோசலிஸ்ட் கட்சித்
தொண்டர்கள் கம்புகளோடு வந்து எம்மைத் தாக்கினார்கள். அப்போது
போராட்டத்தில் கலந்து கொண்ட லயன் துரை, திண்டுக்கல் கிருஷ்ணன் ஆகியோரின்
மண்டைகள் உடைந்தன. போராட்டத்தின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் பட்டம்
தாணுப்பிள்ளை மாநாட்டிற்கு வராமலே ஓடி விட்டார். இது எங்களுக்குக்
கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.
தமிழரசுக் கழகத்தில் என்ன பொறுப்பு வகித்தீர்கள்?
1960இல் சென்னையில் தமிழரசுக்கழகச் செயற்குழுவில் இருந்து பொதுக்குழு
உறுப்பினராக என்னை தேர்ந்தேடுத்தார்கள். என் பெயரை ஏ.பி.நாகராஜன்
முன்மொழிய கவிஞர் கு.சா.கிருஷ்ண மூர்த்தி, கு.மா. பாலசுப்பிரமணியம்
ஆகியோர் வழி மொழிந்தனர். 30.1.1961ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு பெயர்
மாற்றப் போராட்டத்திற்கு நான் மதுரை நகருக்குத் தளபதியாக
நியமிக்கப்பட்டேன். என்னுடைய தலைமையில் 70 தொண்டர்கள் 13 நாட்கள்
தொடர்ந்து போராட்டம் நடத்தினர். 1960 முதல் 1965 வரை மதுரை நகரத் துணைச்
செயலாளராகவும், 1965 முதல் 1975 வரை 10 ஆண்டுகள் மதுரை நகரச்
செயலாளராகவும் இருந்து வந்துள்ளேன்."
தமிழக எல்லைப் போராளி ஐயா சந்திரபாபு அவர்களுக்கு தமிழர் தாயகத்
திருநாளில் வீரவணக்கம் செலுத்திடுவோம்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக