|
30/10/16
| |||
Nadesapillai Sivendran
இன்று கவனத்தை கவர்ந்த விடயத்தை வாசித்தேன்.பார்சிகளின் வேதநூலான
அவெஸ்தாவின் மொழியும் இந்து வேதங்களின் மொழியும் ஒரு பொது மொழியில்
இருந்து பிரிந்தவை என்ற ரொமிலா தாப்பரின் கருத்து.மொழியளவில்
மட்டுமல்லாமல் உள்ளடக்கத்திலும் அவெஸ்தாவும் இந்து வேதங்களும்
நெருங்கியுள்ளன என்று அக்கருத்து விரிவடைகின்றது.
அவெஸ்தாவில் 'ஹ' என்ற உச்சரிப்பு வேதத்தில் 'ச' என்பதாக மாறுகின்றது.ஹோம
,தாஹ,ஹெப்த ஹிந்து,அஹுர என அவெஸ்தாவில் வழங்கப்படும் சொற்கள் இந்து
வேதங்களில் சோம,தாச,சப்த சிந்து,அசுர என்றமைவது சுட்டிக்காட்டப்
பட்டிருந்தது.
அதை அடுத்து குறிப்பிடப்பட்ட
ிருந்த விடயம் துணுக்குறச்செய்
தது.இந்திரனும் தேவர்களும் தீயசக்திகளாகவும் அசுர என்பது வணங்கப்படும்
தெய்வமாகவும் அவெஸ்தாவில் குறிக்கப்பட அதற்கு மறுதலையாக இந்து வேதங்கள்
இந்திரனையும் தேவர்களையும் தெய்வங்களாகவும் அசுரர்களை தீயசக்திகளாகவும்
காட்டுகின்றன.
நன்மைக்கும் தீமைக்கும் இடையில்லான மோதலாக பிற்காலத்தில் வளர்ந்தெழுந்து
புராணங்களாக உருவெடுத்த தேவ அசுர மோதல் என்ற படிமத்தின் ஊற்றுக்கண்
ஈரானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த இரண்டு நெருங்கிய பழங்குடிகளின் மோதலாக
இருக்கக்கூடும்.
தேவ அசுர மோதல்களின் அடிப்படை ஆரிய திராவிட மோதல் என்பதாக கடந்தகாலத்தில்
சித்தரிக்கப்பட்டு இனவாத நோக்கில் அணுக்கப்பட்ட வேதங்களை இன்றைய வரலாறு
விடுதலை செய்கின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக