ஞாயிறு, 19 மார்ச், 2017

ராமன் கிருஷ்ணன் சிவபக்தர்கள் வேத சான்று ரிக் சைவம்

aathi tamil aathi1956@gmail.com

30/10/16
பெறுநர்: எனக்கு
Nadesapillai Sivendran, 2 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
காலத்துக்குக் காலம் ஈரானிய மொழி பேசும் மக்கள் குழுக்கள் இந்தியாவுக்கு
வந்தன என்பது உண்மை.அவர்கள் படையெடுத்து வந்தார்கள் என்பதோ ஏற்கனவே
இருந்தவர்களுடன் மோதலில் ஈடுபட்டார்கள் என்பதோ வெள்ளையர்களின் காலனித்துவ
பொய்கள் மட்டுமே.
அதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை.ரிக் வேதத்தில் எதிரிகளாகக்
காட்டப்பட்டிருப்பவர்கள் பார்சிகளின் அவெஸ்தா வேதத்தில் நாயகர்களாக
இருக்கின்றனர் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.எனவே ரிக் வேதத்தில் வரும்
முரண்பாடுகள் இரு வேறுபட்ட இந்தோ-ஈரானிய குழுக்களுக்கிடையில் நடந்தவையே
தவிர இந்தோ-ஈரானிய,திராவிட மொழி பேசிய மக்களுக்குள் நடந்த மோதல்கள் அல்ல.
சங்க இலக்கியங்களில் காணப்படும் பார்ப்பனர்கள் எளிய மனிதர்களாகவும்,
மற்றவர்களிற்கு எடுபிடிவேலை செய்பவர்களுமாகவ
ே காட்சியளிக்கின்றனர்.
அவர்கள் ஆதிக்க சக்திகளாகவோ,தந்
திரக்காரர்களாகவோ,சதி செய்பவர்களாகவோ சித்தரிக்கப்படவ
ில்லை.இந்தச் சூழ்நிலைதான் வட இந்தியாவிலும் இந்தோ-ஈரானிய மொழி பேசிய
மக்கள் கூட்டங்களுக்கும், திராவிட மொழி பேசும் மக்கள் கூட்டங்களுக்கும்
இருந்திருக்கும் வாய்ப்பே அதிகம்.
இந்திய மதங்கள் பண்பாடுகள் என்பன இந்த ஊடுபாவுகள் மூலம் உருவாகி
வந்தவையே.இதில் வெற்றி தோல்வி என்பது இல்லை.
ஆரம்பகட்ட வேதங்களை உள்ளூர் குடிகள் ஏற்றுக்கொண்டனர்.அதன் தொடர்ச்சியான
உருவாக்கமான மீதியில் உள்ளூர் மக்களிலிருந்து உருவாகிய ரிஷிகளும்
பங்களித்தார்கள்.
வேதங்களில் மிகப்பழமையான,ரிக் வேதத்தின் ஒரு பகுதி இந்திய நிலப்பரப்பில்
உருவாக்கப்பட்டுள்ளது என்று இன்றைய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.அதன்
பின்னர் உருவான வேதங்கள்,உபநிடதங்கள் அனைத்தும் வந்தவர்கள்,இருந்தவர்கள்
என்ற வேறுபாடின்றி அனைவரின் பங்களிப்பாலும் உருவாகியவை.
உள்ளூர் குடிகளின் தெய்வங்கள்,வழிபாடுகளை வந்தவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
சிவன்,சக்தி,விஷ்ணு போன்ற பெரும் தெய்வங்கள் இந்திய மண்ணில்
உருவாகியவர்கள்.வேதங்களில் இருக்கும் தேவர்களுடன் மிகுந்த முயற்சியால்
மட்டுமே அவர்களை இணைக்க முடியும்.அது தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது
போன்றதே.
இராமர்,கிருஷ்ணர் என்போர் வட இந்தியாவின் திராவிடக் குடிகளில் இருந்து
வந்த அரசர்களே.அவர்கள் கறுப்பர்கள்.அவர
்களை எந்த அடிப்படையிலும் ஆரியர்கள் எனப்படும் இந்தோ-ஈரானிய மக்கள்
கூட்டத்தின் கற்பனைப் படையெடுப்புடன் தொடர்புபடுத்தமுடியாது.
இராமர்,கிருஷ்ணர் போன்றோரை எதிரிகளாகக் கட்டமைக்கும் திராவிட அரசியலில்
இருந்து தமிழர்கள் முற்றாக வெளியேறவேண்டும்.
சைவர்களைப் பொறுத்தவரை அவர்கள் இருவருமே மிகச் சிறந்த
சிவபக்தர்கள்.சிவனடியார்களை இழிவுபடுத்துவது மிகமோசமான செயல்.
இராமர் சிவபக்தர்
*******************
“ராமம்…பஸ்மோத் தூளித சர்வாங்கம் ” -ராம ரஹஸ்ய உபநிஷத்
இதன் பொருள்,”இராமர் சர்வ அங்கங்களிலும் விபூதி தாரணமுடையார் ” என்பதாகும்.மேலும்,
“க்ருதாபிஷகஸ் ஸரராஜராமஸ் ஸீதாத்விதீயஸ் ஸஹலக்ஷ்மணேந க்ருதாபிஷேகஸ்த்
வகராஜ புத்ர்யா ருத்ரஸ்ஸ விஷ்ணுர் பகவாநி வேச : ” என்று கூறுகிறது
வால்மிகி ராமாயணம். இச்சுலோகத்தின் பொருள் :
“பகவானும் ஈசருமான உருத்திரர் பார்வதியாரோடு ஸ்நாநம் பண்ணி விஷ்ணு
தேவருடன் விளங்கினதுபோல, இராமர் சீதையோடு கோதாவரியில் மூழ்கி
இலக்குமணருடன் விளங்கினார் ”
இராமர் நீராடியபின் நீறும் பூசியிருந்தால் தான் சிவன் போல்
விளங்கியிருப்பார்,ஆதலால்,இராமர் திரு நீற்றை சின்னமாக தரித்த சிவ பக்தர்
என்பது உண்மையே .
அதர்வண வேதத்திலுள்ள பஸ்மஜாபால உபநிஷத், “பஸ்மதிக் தாங்கா ருத்திராக்ஷா
பரணா :தக்ஷிணாயாந் திகி விஷ்ணு ” என்று கூறுகிறது. “திருமால் ஸ்ரீ காசி
ஷேத்திரத்திலே தென்திசைக்கணிருந்து ,விபூதி ருத்திராக்ஷதாரணமுடியவராய்
உபாசிக்கின்றனர்” என்பது பொருள்.
“ஸ்வர்ண வர்ண ஜடாபாரம் ஸாஷாத் ருத்ர மிவாபரணம் பஸ்மோத் தூளித ஸ்ர்வாங்கம்
த்ருஷ்டுவா காம வசங்கதா ” என்று அத்தியாத்ம ராமாயணம் கூறுவதால்,ராமர்
விபூதி அணிந்தார் என்பது புலனாகிறது.
கிருஷ்ணர் சிவபக்தர்
**********************
மகாபாரதம் :
1.ஆதி பர்வம்,அத்தியாயம் 241 :
“கிருஷ்ணன்…மகாதேவ பூஜைக்காக முப்பத்து நான்கு தினம் இரவும் பகலும்
மஹோத்சவம் நடப்பதென்று சொல்லி, ‘எல்லா வருணத்தாரும் யாதவரனைவரும்
….கடலில் உள்ள தீவுக்குச் செல்ல கடவர்’ என்று நகரத்தில் பறை
அறிவித்தார்.”
2.வனப் பர்வம்:-
i) அத்தியாயம் 20 : “க்ருஷ்ணர் ‘நான் சிவபெருமானை தலையால் வணங்கினேன்’ என்றார் ”
ii) அத்தியாயம் 82 : ‘விஷ்ணு ருத்ரரை ஆதாரித்தார்’
3.துரோணப் பர்வம் :-
i)அத்தியாயம் 81 : ‘ க்ருஷ்ணரும் பார்த்தனும் … ஆசமனஞ் செய்து கைகளை
குவித்துக் கொண்டு…. ருத்ரரை நமஸ்கரித்து ‘
ii)அத்தியாயம் 202 :
‘நாராயணர் ருத்ரரைக் கண்டு நமஸ்கரித்தார்’
‘ருத்ரரை புண்டரிகக்ஷர் பக்தியுடன் நமஸ்கரித்து ஸ்தோத்திரம் செய்யலானார்’
4.கர்ணப் பர்வம் :-
i)அத்தியாயம் 21 : ‘அர்ஜுனனும் கேசவரும் பகலில் செய்யவேண்டிய வைதிக
கர்மாநுஷ்டானங்களை முடித்துக் கொண்டு,முறைப்படி பிரபுவான ருத்ரரைப் பூஜித்து’
ii)அத்தியாயம் 28 : ‘பரசுராமர் .. கடுந்தவம் புரிந்து ருத்ரரை
பிரஸன்னராகும்படி செய்தார் ‘
5.சாந்திப் பர்வம் ,அத்தியாயம் 110 :
‘இந்திரனும் விஷ்ணுவும் ருத்திரரும் ….பிரம்ம தேவரும்,தேவர்களின் தேவரான
எந்த மகேஸ்வரரை ….துதிக்கிறார்களோ ‘
குறிப்பு : பிறராலும்,விஷ்ண
ுவாலும் பூஜிக்கப்பட்டு,
வேதத்தில் முழுமுதல் பொருள் என்று வர்ணிக்கப்பட்ட ருத்திரன் என்பவர் சிவ
பிரான்…அவர் மஹா ருத்ரர்…அவரை வணங்கும் திரிமூர்த்திகளில்,அழிக்கும்
தொழிலை செய்பவருக்கும் ருத்திரர் என்று பெயர்…ஆனால்,மஹாருத்திரரான
சிவனும்,திரிமூர்த்திகளில் இருக்கும் ருத்திரரும் ஒருவர் அல்லர்…இந்த
சுலோகத்தில்,மஹே
ஸ்வரும் மஹாருத்ரரும் ஆன சிவ பெருமானை,திரிமூர்த்திகளில் ஒருவரான ருத்ரன்
வணங்குகிறார் என கூறப்பட்டிருக்கிறது. அழிக்கும் தொழிலை செய்யும் ருத்ரர்
முழுமுதல் பொருள் என்று கூறபடவில்லை.பிர
ம்மா,விஷ்ணு,ருத்ரர் எனும் திரிமூர்த்திகளுக்கும் மேலானவர் என்பதனை
உபநிடதம் கூறுகிறது.
“ப்ரஹ்ம விஷ்ணு ருத்ராதீதம் …சிவம் ” ( பிரம்ம விஷ்ணு உருத்திரர்களைக்
கடந்த சிவபிரான்) – பஸ்மஜாபால உபநிடதம்
“சிவம்..ஹரிஹர ஹிரண்ய கர்ப ஸ்ருஷ்டாரம் ” (சிவபிரான்,பிரம்ம விஷ்ணு
ருத்திரர்களை சிருஷ்டித்தவன் ) -பஸ்மஜாபால உபநிடதம்
6.அநுசாஸனப் பர்வம் ,அத்தியாயம் 45 :
‘ஒவ்வொரு யுகத்திலும் கிருஷ்ணர்,மகேஸ்வரரால் ஆராதிக்கப் பெற்றார்.’
மேலும் அநுசாஸனப் பர்வம்,அத்தியாயம் 45,46இல், கிருஷ்ணர்,உபமன்யு
மகாமுனிவரிடம் சிவ தீட்சை பெற்று ,சிவனை வேண்டி,கயிலையில் தவம்
இருந்து,பல வரங்களைப் பெற்றார் என்று கூறுகின்றன.இதனா
ல்,கிருஷ்ணர் விபூதி அணிந்தவர் என்பதும்,சைவர் என்பதும் தெளிவாம்.
(மேலுள்ள மேற்கோள் ஆதாரங்கள் திரிசூலம் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.)
12 மணிநேரம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக