ஞாயிறு, 19 மார்ச், 2017

ஆலயநுழைவு தோள்கொடுத்த பார்ப்பனர் மீனாட்சி கோயில் தேவர் ஐயர்

aathi tamil aathi1956@gmail.com

26/12/16
பெறுநர்: எனக்கு
பெரியசாமி சான்றோர் பெரியசாமி நாடார்
ஆலய பிரவேசத்துக்காக அய்யர்., என்.எம்.ஆர்., சுப்புராமன், டாக்டர் ஜி.
ராமச்சந்திரன், நாவலர் சோமசுந்தர பாரதி, முனகாலா பட்டாபிராமய்யா, சிவராம
கிருஷ்ணய்யர், சோழவந்தான் சின்னசாமி பிள்ளை, மட்டப்பாரை வெங்கட்ராமய்யர்
முதலானோரும் என் போன்றவர்களும் மதுரை வீதிகளில் வீடுவீடாகச் சென்று ஆலய
பிரவேசம் அவசியம் என பிரசாரம் செய்தார்கள் இந்தப் பிரச்சாரம் ஒன்றிரண்டு
நாட்களில்லை. ஐந்து ஆண்டுகள் தொடர்ந்தது. கடைசியில் 1939 சூலை 8- ம் தேதி
ஆலய பிரவேசம் என அய்யர் திடீர் என அறிவித்தார்."
1939 சூலை 8- ம் தேதி ஆலய பிரவேசம் என வைதியலிங்கஅய்யர் திடீர் என அறிவித்தார்."
"மீனாட்சிக் கோவிலுக்குள் நுழைந்தால் என்ன நடக்கும் பார் என்று வைதீகச்
சண்டியர்கள் நோட்டீஸ் வெளியிட்டாங்க. அதற்கு பசும்பொன்முத்துராமலிங்கத்
தேவர், " நாங்களும் வருவோம். முடிந்தால் தடுத்துப் பாருங்கள்" என
எதிர்சவால் விட்டார்."
"ஆலயப் பிரவேசத்தன்றைக்கு வைத்தியநாதய்யர் தனது வீட்டிலிருந்து பூஜை
சாமான்களுடன் தனது காரில் கக்கன் உள்ளிட்டோருடன் மீனாட்சி கோயில் தெற்கு
வாசலுக்கு வந்தார். கோயில் வாசலில் தேவரின் ஆட்கள் குவிந்திருந்தாங்க.
எதிர்பாளர்களைக் காணவில்லை. கோயிலின் அறங்காவலர் குழு தலைவராக இருந்த
ஆர்.எஸ். நாயுடு எல்லோரையும் வரவேற்று அழைத்துச் சென்றார். மீனாட்சி
அம்மன் சன்னதி சென்று ஆலயப்பிரவேசம் நடந்துவிட்டது எனப் பிரகடனம் செய்து
தரையில் படுத்துக் கிடந்து கும்பிட்டார்கள்."
"ஆனால் தீண்டாமையை ஆதரிக்கும் சனாதன வைதீக்கக் குடுக்கைகளுக்கு இது
பொறுக்கவில்லை. கோபம்னா கோபம் அவ்வளவு கோபம். அன்று இரவே கோயில்
பட்டர்கள் கோயிலை பூட்டி சாவியை எடுத்துட்டுப் போயிட்டாங்க.
அறங்காவலர்குழு தலைவர் நாயுடு பூட்டை உடைத்து கோயிலை திறந்துவிட்டார்.
ஆனால் வைதீக குடுக்கைகளோ கோயிலை விட்டு மீனாட்சி அம்மன் போயிடுச்சு..
நடேச ஐயரின் வீட்டுக்கு அம்மன் வந்துவிட்டதுன்ன
ு சொல்லி அங்கு பூஜைகள் செய்தாங்க."
"சட்டத்தை மீறி ஆலயப்பிரவேசம் செய்ததாக அய்யர் மற்றும் பிற தலைவர் மீது
வழக்கு கொடுத்தாங்க. ஆனால் ஆலய பிரவேசம் தொடர்பாக அவசரச் சட்டத்தை ராஜாஜி
பிரகடனப்படுத்தி ஆலயப்பிரவேசத்தை செல்லுபடி ஆக்கினார். மீனாட்சி கோயில்
பட்டர்களை பூஜை செய்யவிடாமல் தடுத்தாதால் பல ஊர்களுக்கு ஆள் அனுப்பி
சொந்தச் செலவில் பட்டர்களை வரவழைத்து வைத்தியநாதய்யர் பூஜைக்கு ஏற்பாடு
செய்தார்."
"மீனாட்சி அம்மன் கோயிலைத் தொடர்ந்து அழகர்கோவில், திருப்பரங்குன்றம்,
திருமோகூர், பழனி திருவரங்கம், திருவில்லிப்புத்தூர் போன்ற கோயில்களிலும்
அரிசனங்கள் நுழைய வாய்ப்பேற்பட்டது. ஆயிரமாண்டு தீமை மாண்டு போக அய்யர்
உழைத்தார். ." என்றார் மாயாண்டி பாரதி. மேலும் வைத்தியநாதய்யர் செய்த
தியாகம் பற்றியும் அவரது மனைவி உட்பட குடும்பத்தினர் அனைவரும் சுதந்திரப்
போராட்டத்தில் சிறைக்குச் சென்றதையும் சொல்லிவிட்டு "இன்னைக்கு யாருங்க
அய்யரை நினைக்கிறாங்க..
?" என வேதனைப்பட்டார். மதுரை மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்
தும்பைப்பட்டி கக்கன் (பின்னாளில் தமிழக அமைச்சராக இருந்தவர்), ஆலம்பட்டி
முருகானந்தம், மதிச்சியம் சின்னையா, விராட்டிபத்து பூவலிங்கம், முத்து
ஆகிய இதில் 3 பேர் பறையர்கள் ஆறாவது நபர் விருதுநகர் சண்முக நாடார். .
மொழிபெயர்ப்பைக் காணவும்
23 மணிநேரம் · Thirumangalam, Tamil Nadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக