ஞாயிறு, 19 மார்ச், 2017

கடன் தள்ளுபடி பணமுதலை பட்டியல் மல்லையா

aathi tamil aathi1956@gmail.com

17/11/16
பெறுநர்: எனக்கு
*வாராக்கடன் வைத்திருப்பவர்கள் மீதான நடவடிக்கை தொடரும்? ஜெட்லி விளக்கம்*

வாராக்கடன் வைத்திருப்பவர்கள் மீதான நடவடிக்கை தொடரும் என நிதியமைச்சர்
அருண் ஜெட்லி தெரிவித்தார்.

கடன் வாங்கி திருப்பி செலுத்தாத விஜய் மல்லையா உள்ளிட்ட 63 பேரிடமிருந்து
பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் ஏலம் போகாத காரணத்தால் Advance Under
Collection Account (AUCA) என்ற வாராக் கடன் மீட்பு திட்டத்தின் படி
சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்ட கடன்கள் கடன் புத்தகத்திலிருந்து
நீக்கப்படும் என எஸ்.பி.ஐ., வங்கி அறிவித்துள்ளது. ஆனால் அந்தக் கடன்களை
மீட்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டே தான் இருக்கும்
என்று விளக்கம் அளித்துள்ளனர்.

எஸ்.பி.ஐ., வங்கி 63 பேரின் கடன்களையும் முழுமையாகவும், 31 பேரின்
கடன்களை பகுதியாகவும் கடன் புத்தகத்திலிருந்து நீக்கி உள்ளது.

*விஜய் மல்லையா முதலிடம்:*

கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் முதலிடத்தில் கிங்பிஷர் நிறுவனத்தின்
விஜய் மல்லையா உள்ளதாக கூறப்படுகிறது. அவர் வாங்கிய 1,201 கோடி ரூபாய்
கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் 17 வங்கிகளில்
மொத்தம் ரூ.6,963 கோடி கடன் வாங்கியுள்ளார். ஸ்டேட் வங்கியில்
அதிகபட்சமாக ரூ.1,201 கோடி கடன் வாங்கியுள்ளார்.

மல்லையாவுக்கு சொந்தமான கிங்பிஷர் நிறுவனத்தின் சொகுசு பங்களாவை ஏலம் விட
நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இதுதோல்வியில் முடிந்தது.

இதற்கு அடுத்த இடத்தில் கேஎஸ் ஆயில் வாங்கிய ரூ.596 கோடி ரூபாய் கடன்
தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சூர்யா பாராமசசூட்டிகல்ஸ் நிறுவனத்தின்
ரூ.526 கோடி கடனும், ஜிஇடி பவர் நிறுவனத்தின் ரூ.400 கோடி கடனம், சாய்
இன்போ நிறுவனத்தின் ரூ.376 கோடி கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது. கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் பெரும்பாலனவை வேண்டுமென்றே
கடனை திருப்பி செலுத்தாதவர்களின் கடன் தொகை எனக்கூறப்படுகிறது.

_கடன் தள்ளுபடி செய்யப்பட்ட முதல் 10 நிறுவனங்கள்_

*1. கிங்பிஷர் ஏர்லைன்ஸ்: ரூ.1,201 கோடி*

*2. கேஎஸ் ஆயில்: ரூ.596 கோடி*

*3.சூர்யா பார்மசிடிகல்: ரூ.526 கோடி*

*4. ஜிஇடி இன்ஜீனியரிங் கன்ஸ்டிரக்சன்ஸ்: ரூ.400 கோடி*

*5. சாய் இன்போ சிஸ்டம்: ரூ.376 கோடி*

*6. விஎம்சி சிஸ்டம்ஸ்: ரூ.370 கோடி*

*7. அக்னிட் கல்வி நிறுவனம்: ரூ.315 கோடி*

*8. ஸ்ரீகணேஷ் ஜிவ்லரி: ரூ.313 கோடி*

*9. அபெக்ஸ் என்கோன் நிறுவனம்: ரூ.266 கோடி*

*10. யூரோ செராமிக்ஸ்: ரூ.266 கோடி.*

கடந்த 2013 முதல் 2015ம் நிதியாண்டில் 29 வங்கிகள் இதுபோன்று ரூ.1.14
லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்தது. இதில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா,
ரூ.40.084 கோடி வாராக்கடனை தள்ளுபடி செய்து முதலிடத்தில் உள்ளது.

*இதுகுறித்து அருண் ஜெட்லி மற்றும் எஸ்பிஐ வங்கி தலைவர் அருந்ததி
பட்டாசார்யா கொடுத்துள்ள விளக்கம்:*

கடன் திருப்பி செலுத்தாவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள்
பல முறை ஏலம்விட்டும் யாரும் வாங்கவில்லை. இதனால், வேறு வழியின்றி,
Advance Under Collection Account (AUCA) என்ற வாராக் கடன் மீட்பு
திட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்ட
கடன்கள் கடன் புத்தகத்திலிருந்து நீக்கப்படும். ஆனால் அந்தக் கடன்களை
மீட்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டே தான் இருக்கும்
என்று விளக்கம் அளித்துள்ளனர். வாராக்கடன் வைத்திருப்பவர்கள் மீது எடுக்க
வேண்டிய நடவடிக்கையிலிருந்து அரசு பின்வாங்காது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக