வியாழன், 23 மார்ச், 2017

கம்பர் கல்லறை நகரத்தார் ராமாயணம் இராமன் ராமன்

aathi tamil aathi1956@gmail.com

16/4/16
பெறுநர்: எனக்கு
Avaddayappan Kasi Visvanathan , 3 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் —
Senthil Prabhu மற்றும் 36 பேர் உடன்.
# கம்பனைக்___காப்பாற்றுவோம் .:- கம்பன் என்பவர் தமிழர். கம்பர்,
குளோத்துங்கச் சோழன் காலத்தில் வாழ்ந்தவர். அதாவது தமிழ்ச் சோழர்கள்
சளுக்கர்களால் கொல்லப்பட்ட பின்னர், அவர்கள் வாரிசாக வந்தவர்கள்
காலத்தில் வாழ்ந்தவர். தமிழர் மரபு மாறாமல் தமிழர் உணர்வுகளுடன்
இராமாயணம் எழுதிய தமிழர். இதில் பின்னர் சோழ மன்னர்களின் போக்கு
பிடிக்காமல் பாண்டி மண்டலம் வந்த பல தமிழ்க் குடிகளுடன் கம்பரும் இங்கே
நாட்டரசன் கோட்டை வந்தார். நாட்டரசன் கோட்டையில் அவருக்கு முன்பாக பாண்டி
மண்டலம் வந்த நாட்டுகோட்டை நகரத்தார்களிடமே அவர்களது அணுக்கத்தை நாடி
வந்தார். அகவே தான் கம்பர் சமாதி இன்றளவும் நகரத்தார்களால்
நிர்வகிக்கப்படுகின்றது. அப்படியிருக்க இன்று கம்பர் சமாதியை
அரசியல்வாதிகளிடம் கையளிக்க முயற்சிப்பது நமது அடையாளங்களை நாமே
திராவிடர்களிடம் கொடுப்பதாகும். இதனை பண்பாட்டு அடையாளமாகவே கருத
வேண்டும், சுற்றுலா என்பதும், மாயை. தமிழர் அடையாளங்களை தமிழர்களால்
மட்டுமே முதலில் உணரப்பட வேண்டும். அதனை விடுத்து மாற்றார்களிடம்
கொடுத்தால் உள்ளதும் பறிபோகும். இன்றளவும் கம்பர் வந்த பின்னர்,
நாட்டுகோட்டை நகரத்தார் ஊர்களில், ஏதேனும் ஒரு நகரத்தார் குடும்பம்,
அல்லது நகரத்தார் குடும்ப முறைகளில் பொதுவிலாவது, முறையாக கம்ப ராமாயணம்
# ஏடு_படித்தல் என்பதனை
# தங்கள்__கடமையாகக் கொண்டுள்ளனர். இது போன்ற தமிழர் அடையாளங்கள்,
பண்பாட்டு நெறிகள் மதம் என்ற பெயரில் பறிகொடுத்தல் கூடாது. வேணும்
அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை. ---- நெற்குப்பை காசிவிசுவநாதன்.
07-10-2015.
# குறிப்பு :- அண்மையில் ஒரு முகநூல் பதிவில் கம்பர் சமாதியை சுற்றுலா
தலமாக அறிவிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறியிருந்தனர். இது நமது
அடையாளங்களை நாமே விரும்பி மாற்றார்களிடம் கையளிப்பதாகிவிடும் என்பதனால்
மேற்படி பதிவினை பதிவிட நேர்ந்தது.நன்றி. அதே நேரத்தில் காரைக்குடியில்
தருண் விஜய் என்பார் கம்பர் சமாதி புணரமைக்கப்படும் என்று கம்பன் கழக
மேடையில் நின்று சொன்னதுதான் விந்தையின் உச்சம். காரணம், நமக்கான
உரிமைகள, கடமைகளை மாற்றானிடம் வலிந்து சென்று பறிகொடுப்பது என்பது
தமிழர்களுக்கு இணை தமிழர்களே. வாய்ப்புக் கிடைக்கும் சந்தடியில்
கடப்பாரையுடன் வலம் வரும் கர சேவகர்கள் விடுவார்களா என்ன ?? வரலாறு
மறந்து, எதிர்காலத்தை காப்பாற்ற முடியாது என்பதை தமிழர்கள் உணர வேண்டும்.
வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை. ---- நெற்குப்பை
காசிவிசுவநாதன். 16-04-2016.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக