புதன், 22 மார்ச், 2017

கல்லணை கரிகாலன் கட்டவில்லையா நீலகண்ட சாஸ்திரி சுப்புராயலு சதி

aathi tamil aathi1956@gmail.com

24/4/16
பெறுநர்: எனக்கு
கூர்ங்கோட்டவர்
கல்லணையை கரிகாலன் கட்டவில்லை என்றும் அவனுக்கு பின்வந்தவர்களே
கட்டினார்கள் என்றும் சொன்ன ஆய்வாளர் தான் முனைவர் சுப்பராயலு. அவரின்
மாணவர்கள் நடத்தும் பக்கம் தான் Prof. Y. Subbarayulu பக்கம்.
இந்த பக்கத்தை முதலில் நான் பார்த்த போது இதை ஆரம்பித்தது சுப்பராயலுவா
அல்லது அவர் மாணவர்களா என்ற கேள்வியை எழுப்பினேன். அதற்கு உடனடியாக இதை
நடத்துவது அவரின் மாணவர்களே என்ற பதிலை அனுப்பினர்.
பிறகு கல்லணை கட்டியது யார்? கட்டப்பட்ட காலமென்ன? அதற்கான நேரடி
முதனிலைச்சான்றுகள் என்ன? என்ற கேள்விகளை முன் வைத்தேன். இன்னும் அதற்கு
பதில் வரவில்லை.
சுப்பராயலுவின் பின்புலம்:
நொபுரு கரோசிமா எழுதிய ''A CONCISE HISTORY OF SOUTH INDIA — Issues and
Interpretations'' என்ற நூல் பற்றிய கிண்டு நாளிதழின் பதிவொன்றில் இந்த
சுப்பராயலுலுலு கல்லணையை கரிகாலன் கட்டவில்லை எனக்கூறியிருந்ததாக செய்தி
உள்ளது. அந்த வரிகள் கீழே.
''He quotes the seventh century copper plate to say that the dam
Kallanai is mistakenly told to have been built by Karikal Chola,
whereas he merely tamed the river Kaveri by raising its flood banks.
The dam seems to have been built much later.''
மேலுள்ளதை வைத்துப்பார்க்கும் போது இவர் எந்த கருத்துக்கு அடித்தளம் இட
வருகிறார் என்பதை ஊகிக்க முடிகிறது. கரிகாலன் சங்க காலத்தில் வாழ்ந்தவன்.
அவன் இதை கட்டவில்லை. ஆனால் கிபி ஏழாம் நூற்றாண்டு பட்டயம்
அப்படிக்கூறுகிறது. எனில் ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னரே கல்லணை உள்ளது.
சங்ககால கரிகாலனும் கல்லணை கட்டவில்லை. ஏழாம் நூற்றாண்டுக்கு முன் கல்லணை
இருந்தது என்றால் இடைப்பட்ட காலத்தில் கல்லணை கட்டப்பட்டுள்ளத
ு என்று சொல்ல வருகிறார். எனில் இடைப்பட்ட காலம் வடுகக்களப்பிரர் காலம்.
அதனால் வடுகக்களப்பிரர் தான் கல்லணை கட்டினர் என்ற போலி வரலாறு உருவாக
இப்போதே அடித்தளமிடுகிறார் என ஊகிக்கலாம்.
நொபுரு கரோசிமா இந்த நூல் குறித்து கூறும் போது இந்நூலுக்கு முன்னர்
தென்னிந்திய வரலாறு பற்றி எழுதிய நீலகண்ட சாஸ்திரியார் ஒரு பிராமணர்
என்பதால் சமஸ்கிருதத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதியுள்ளார்
என்ற விமர்சனத்தை வைத்தார்.
அதனால் நாமும் சுப்பராயலு பின்புலம் குறித்த விமர்சனத்தை வைக்கலாம்.
சுப்பராயலு ஒரு வடுகர் என்பதால் வடுகக்களப்பிரர் தான் தமிழருக்கு கல்லணை
கட்டி அணை கட்டும் கலையை கற்றத்தந்தனர் என போலி வரலாற்றுக்கருத்தியல்
உருவாக அடித்தளம் இடுகிறார் என்று.
நொபுரு கரோசிமா பாவம். பிராமணரிடம் இருந்து தென்னிந்திய வரலாற்றை
காக்கிறேன் பேர்வழி என்று வடுகர்களின் கையில் தமிழர் வரலாற்றை
கொடுத்துள்ளார். நொபுரு கரோசிமா நம்புவதெல்லாம் பத்ரிராஜூஜூஜூ
கிருட்டிணமூர்த்தி, சுப்பராயலுலுலு போன்ற வடுகர்கள் சொல்வதைத்தான்.
தமிழர் வரலாற்றை திரித்தெழுதும் ஆய்வாளர்கள் பற்றிய பதிவுகள் இதோடு
நின்றுவிடாது. அடுத்துவரும் பதிவுகள் கீழடி அகழாய்வை செய்துவரும்
அமர்நாத்து இராமகிருசுணன், கல்வெட்டு ஆய்வாளர்களான பத்மாவதி அணையப்பன்,
மார்க்சிய காந்தி போன்றவர்களின் தமிழர் விரோத கருத்துக்களை
தோலுரித்துக்காட்டும்.
- கூர்ங்கோட்டவர் தென்காசி சுப்பிரமணியன் — Rajasubramanian Sundaram Muthiah

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக