|
12/12/16
| |||
Kathir Nilavan
இசையரங்குகளில் தமிழுக்கு இடமில்லை!
-சுப்பிரமணிய பாரதியார்.
சென்னையில் ஒவ்வொராண்டும் டிசம்பர் மாதம் நடைபெறும் இசையரங்குகளில்
தமிழ்மொழி எப்போதும் தீட்டுமொழியாகவே பார்க்கப்படுகிறது. நாயக்கர்
ஆட்சிக்காலத்தில் நுழைக்கப்பட்ட தெலுங்குமொழியே இன்றுவரை கோலோச்சுகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் இதற்கு எதிராக கலகக் குரல்
எழுப்பியவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். இசையரங்குகளில் தமிழ்
புறக்கணிக்கப்படும் அவலநிலை குறித்து பாரதியார் கட்டுரை ஒன்றை
தீட்டினார். அது இன்றைக்கும் காலப் பொருத்தமுடையதாகும். அவர் எழுதிய
கட்டுரை இங்கு வெளியிடப்படுகிறது....
"முத்துசாமி தீக்ஷிதர், தியாகையர், பட்டணம் சுப்பிரமணிய அய்யர்
முதலியவர்களின் கீர்த்தனங்களிலே சிலவற்றை அதிக ஸங்கதிகளுடன் பாடுவோரே
முதல்தர வித்துவான். இந்த கீர்த்தனங்களெல்லாம் ஸமஸ்கிருதம் அல்லது
தெலுங்கு பாஷையில் இருக்கின்றன. ஆகவே, முக்காலே மும்மாகாணி
வித்வான்களுக்கு இந்தக் கீர்த்தனங்களின் அர்த்தமே தெரியாது.
எழுத்துக்களையும் பதங்களையும் கொலை செய்தும், விழுங்கியும்
பாடுகிறார்கள்.
அர்த்தமே தெரியாதவனுக்கு ரஸம் தெரிய நியாயம் இல்லை. நானும் பிறந்தது
முதல் இன்றுவரை பார்த்துக் கொண்டே வருகிறேன். பாட்டுக் கச்சேரி
தொடங்குகிறது. வித்வான் 'வாதாபி கணபதிம்' என்று ஆரம்பஞ் செய்கிறார்.
"ராமநீ ஸமான மெவறா, மரியாத காதுரா, வரமு லொஸகி....' ஐயையோ, ஐயையோ, ஒரே
கதை. எந்த ஜில்லாவுக்குப் போ. எந்த கிராமத்திற்குப் போ. எந்த வித்வான்
வந்தாலும் இதே கதைதான். தமிழ்நாட்டு ஜனங்களுக்கு இரும்புக் காதாக
இருப்பதால், திரும்பத் திரும்பத் திரும்ப ஏழெட்டுப் பாட்டுக்களை வருஷக்
கணக்காக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தோற் காது உள்ள தேசங்களிலே இந்தத் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ள
மாட்டார்கள். பூர்வீக மஹான்களுடைய பாட்டுக்களை மறந்து போய்விட வேண்டும்
என்பது என்னுடைய கக்ஷியன்று. அவற்றை அர்த்தத்துடன் பாட வேண்டும்.
பதங்களைப் பிழையாக உச்சரிக்கக் கூடாது. பதங்களை வாய்விட்டுத் தெளிவாகச்
சொல்ல வேண்டும். விழுங்கி விடக்கூடாது. பத்து முப்பது கீர்த்தனங்களையே
ஓயாமற் பாடி ஸங்கீதத்தை ஒரு தொல்லையாகச் செய்துவிடக் கூடாது. புதிய
கீர்த்தனங்களை வெளியே கொண்டு வர வேண்டும்.
இப்போது ஸங்கீத வித்வான்களிலே தலைமைப் பட்டிருப்போர் தமிழிலே புதிய
மெட்டுக்களில் கீர்த்தனங்கள் செய்ய முயல வேண்டும். நவரஸங்களின்
தன்மைகளையும், இன்னின்ன ரஸங்கள் உண்டாகும் என்பதையும் கற்றுத் தெரிந்து
கொள்ளுதல் அவசியம்.
வித்வான்கள் பழைய கீர்த்தனங்களைப் பாடம் பண்ணி புராதன வழிகளைத் தெரிந்து
கொள்ளுதல் அவசியம். ஆனால் தமிழ் சபைகளிலே எப்போதும் அர்த்தம் தெரியாத பிற
பாஷைகளில் பழம் பாட்டுகளை மீண்டும் மீண்டும் சொல்லுதல் நியாயமில்லை.
அதனால் நமது ஜாதி ஸங்கீத ஞானத்தை இழந்து போகும்படி நேரிடும்."
(இன்று சுப்பிரமணிய பாரதியார் பிறந்த நாள் 11.12.1882)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக