ஞாயிறு, 19 மார்ச், 2017

நியூட்ரினோ பற்றி நூல் பூவுலகின் நண்பர்கள் புத்தகம் பேரழவு திட்டம் மண்ணழிப்பு நாசகார

aathi tamil aathi1956@gmail.com

24/11/16
பெறுநர்: எனக்கு
நூல் வெளியீட்டு விழா
நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னை கே.கே.நகரில் உள்ள 'டிஸ்கவரி புக்
பேலஸில்' பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைத்த “நியூட்ரினோ ஆய்வுக் கூடம் :
அறிவிப்புகளும் உண்மைகளும் “ நூல் வெளியிடப்பட்டது.
நியூட்ரினோ திட்டம் குறித்து மக்கள் அறிவியலாளர் திரு வி.டி.பத்மநாபன்
Countercurrent இதழில் எழுதிய கட்டுரையை உள்ளடக்கிய இந்த நூலினை தமிழில்
தோழர்கள் மு.வசந்தகுமார் மற்றும் அருண் நெடுஞ்செழியன் தொகுத்து
மொழிப்பெயர்த்து எழுதியிருக்கின்றனர்.
இந்நிகழ்வில் கல்பாக்கம் அணு உலை எதிர்ப்பு செயல்பாட்டாளர்
மருத்துவர்.புகழேந்தி, வி. டி.பத்மநாபன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
தோழர் புகழேந்தி, நியூட்ரினோ, அணு உலை, இத்திட்டங்களில் அரசின் தெளிவற்ற
தன்மை, இத்திட்டங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள், அதனை ஏற்க மறுக்கும்
அரசின் மெத்தனபோக்கு, அறிவியல் என்ற பெயரில் மக்களுக்கு எதிரான இது போன்ற
திட்டங்களை நாம் ஏன் வரவேற்க கூடாது என்பன குறித்து தெளிவுபடுத்தும் ஒரு
தொடக்க உரையாற்றினார்.
அதனையடுத்து பிரபலன் நூலை வெளியிட சீனு தமிழ்மணி பெற்றுக்கொண்டார்.
வி.டி.பத்மநாபன் மிக எளிமையான ஆங்கிலத்தில் இத்திட்டம் தொடர்பான தனது
ஐயங்களை மிகவும் குறுகிய நேரத்தை எடுத்துகொண்டு விளக்கினார். அதனை
தொடர்ந்து பார்வையாளர்களின் சந்தேகங்களுக்கு சிறப்பு அழைப்பாளர்கள்
பதிலளித்தனர்.
முழு நிகழ்வினையும் தோழர் அருண் நெடுஞ்செழியன் நெறிபடுத்தினார்.
இந்நிகழ்வில் பல்வேறு அமைப்புகள் மற்றும் இயக்கத்தவர்கள் கலந்து
கொண்டனர்.
நியூட்ரினோ ஆய்வு மையம்
தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையில் ரூ.1,560
கோடி மதிப்பீட்டில் நியூட் ரினோ ஆய்வு மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான
முதற்கட்ட பணிகளாக அம்பரப்பர் மலையை சுற்றி சுமார் 7 கிலோமீட்டர் தூரம்
வேலி மற்றும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தேக்கும் வகையில் ராட்சத தண்ணீர்
தொட்டியும் அமைக்கப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து ராசிங்காபுரத்தில்
இருந்து நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ள மலை வரை சாலை அமைக்கும்
பணியும், பாலம் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.
கிராம மக்கள்
இந்நிலையில் டிராக்டர், மினிலாரி போன்ற வாகனங்களில் பொட்டிப் புரம்,
புதுக்கோட்டை, சின்ன பொட்டிப்புரம், ராமகிருஷ்ண புரம்,
தம்மிநாயக்கன்பட்டி ஆகிய 5 கிராமங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான
ஆண்களும், பெண்களும் அம்பரப்பர் மலையடிவாரத்தில் குவிந்தனர்.
பொட்டிப்புரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்திற்கு
நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மலையடி வாரத்தில்
தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர் போராட்டம்
நியூட்ரினோ ஆய்வு திட்டத்தின் ஆபத்து குறித்து தமிழகம் முழுதும்
விழிப்புணர்வு ஏற்படுத்துவது, நியூட்ரினோ திட்டத்தை நிரந்தரமாக தடை
செய்யும் வகையில் தொடர்ந்து அறவழியில் போராட்டம், முற்றுகை போராட்டம்,
உண்ணாவிரதம் நடத்தி கொண்டு இருக்கின்றனர். மேலும் நியூட்ரினோ ஆய்வு மையம்
அமைக்க தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்காமல்
தற்காலிக தடையை அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக