Nakkeeran Balasubramanyam
இந்திய மக்களின் பழங்கதைகளைக் கூறும் புராணங்களும் இதிகாசங்களும்
பூமியின் நடுவே பெரிய பூகண்ட மொன்று இருந்ததைக் கூறுகின்றன. மிருகேந்திர
ஆகமத்திற் கூறப்படுவதாக மாதவச் சிவஞான யோகிகள் சிவஞானபோத மாபாடியத்திற்
காட்டியுள்ள பகுதிகள் சில அப்பெரிய பூகண்டத்தைப்பற்றி ஒரளவு
விளக்குவனவாகும்.
அவை வருமாறு: ஏழு பெருந் தீவின் நடுத்தீவாவது நூறாயிரம் யோசனைப்
பரப்புடைத்தாய் வட்டமாய் நிலமகட்கு உத்தித் தானமாயுள்ள நாவலந் தீவு. இந்
நாவலந்தீவின் நடுவே மேருவரை மேருவரையைச் சூழ்ந்த நிலமாகிய இளாவிருதம்
இமயத்திற்கும் தென் கண்டத்திற்கும் நடுக்கண்டமாகிய பாரதவருடத்தில்
வாழ்வோர். இவற்றுட் பாரதவருடமும் ஒன்பது கண்டமாய் இந்திரத்தீவும்,
கசேருத்தீவும், தாமிரபர்ணித் தீவும், கபதித்தீவும், நாகத்தீவும்,
சாந்திரமத்தீவும், காந்தருவத்தீவும், வாருணத்தீவும், குமரித்தீவு மெனப்
பெயர் பெற்றுப் பல மலைகளும் பல நதிகளும் பல்வேறு வகைப்பட்ட
சாதிகளுமுடைத்தாய் வயங்கும்.
இவ் வொன்பதுள்ளும் குமரிக்கண்ட மொன்றே வேதாகமவழக்கும், சாதிவரம்பும்,
கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களும், காசி முதலிய புண்ணிய
தலங்களுமுடைத்தாய்ச் சிறந்தது. ஏனை எட்டுக் கண்டங்களும் மிலேச்சர்
வாழிடங்களாம்.
"பூமியின் மேற்பரப்பு ஏழுகடலும் ஏழு பெருந்தீவும் நடுவே மேருவரையு
முடைத்தாய்ப் பூலோகமெனப் பெயர் பெறும். இந் நாவலந்தீவினடுவே மேருவரை
நூறாயிரம் யோசனை அளவுடைத்தாய் வயங்கும்.,,,,,,"
இது மிருகேந்திரத்திற் கண்டது.
Ramasamy Arumugam Slm
== இதில் ஏழு கடலும் என்பது அட்லாண்டிக், பசிஃபிக் உள்ளிட்ட ஏழு
பெருங்கடல்களே ! ஏழு பெருந்தீவு என்பவை அமெரிக்கா ஆசியா ஆஸ்திரேலியா
உள்ளிட்ட தனித்தனியே விடுபட்டு நிற்கும் இன்றைய கண்டங்களே !! இமயம் முதல்
ப்ழங்குமரி இடைப்பட்ட மேற்கு,கிழக்கு மலைகளின் தொடர்ச்சியாக தெற்கே
நீண்டு உயர்ந்து ஊர்ந்து நின்ற மேரு மலையை உள்ளடக்கி இருந்ததே, `
நாவலந்தீவு’ எனப்பட்ட இன்றைய இந்தியாவின் தென் செம்பாதியில் கடல்
கொண்டுவிட்ட நம் குமரிக் கண்ட மாம்; செவிவழி வந்து வந்து நிலைத்த இந்த
தமிழ் மண்ணின் வரலாற்றைப் பொதுவான பொழுது போக்குக் கதைகளாக கூறுவனவே இந்த
பிற்கால புராணக் கதை களாகும்; சுவாரசியம் கருதி மிகைபட வருணிக்கப்படும்
ஆசைகள்,கனவுகள் நிறைந்த அதிசயக் கூற்றுகளை விலக்கிவிட்டுப் பார்த்தால்
அசல் வரலாற்றின் அடை யாளத்தை இவற்றுள் காணலாம். [ஆரிய புராணங்களிலும் இது
சாத்தியமே ! ஆனால் அங்கு சல்லடைக் கண்கொண்டு சலித்தெடுக்க வேண்டும்.
இல்லையேல் சீதையை நம் சித்தப்பா பெண் என்று முத்திரை குத்திவிடுவார்கள்.]

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக