ஞாயிறு, 19 மார்ச், 2017

கார்த்திகை நிலவு புத்தாண்டு பொங்கல் கதிரவன் புத்தாண்டு வானியல் பண்டிகை

aathi tamil aathi1956@gmail.com

13/11/16
பெறுநர்: எனக்கு
கார்த்திகை விளக்கீடு புத்தாண்டு என்றால், பொங்கல் திருநாள் புத்தாண்டு
இல்லையா என்று பலர் கேட்கின்றனர்...

நான் எப்போதும், கார்த்திகை விளக்கீட்டை புத்தாண்டு என்று
குறிப்பிட்டதில்லை, “சந்திர புத்தாண்டு/திங்கள் புத்தாண்டு” என்றே
குறிப்பிட்டுள்ளேன். ஏனென்றால், தமிழருக்கு சூரிய புத்தாண்டு/ஞாயிறு
புத்தாண்டும் உள்ள காரணத்தால்.

கார்த்திகை விண்மீனும்,முழுநிலவும் சேரும் நாளே, தமிழரின் சந்திர
புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.

சூரியன் வடசெலவை தொடங்கும் மகரம் முதல் நாளே சூரிய புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.

இந்த இரண்டு நாள்காட்டியினுள், சந்திர நாள்காட்டியே பழமையானது.
சிந்துசமவெளி காலம் முதல், கிபி 10ஆம் நூற்றாண்டு வரை சந்திர நாள்காட்டி
வழக்கத்தில் இருந்தது.

கி.பி 10ஆம் நூற்றாண்டிற்கு பின்னரே, சூரிய நாள்காட்டி, சோழர்களால்
நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனால் தான், பொங்கல் பற்றிய குறிப்புகள் சங்க
இலக்கியங்களில் காண முடியாது.. ஆனால், கார்த்திகை விளக்கீடு பற்றிய
குறிப்புகள் கொட்டிக்கிடக்கும்.

கார்த்திகை,மார்கழி,தை,மாசி,பங்குனி,சித்திரை,வைகாசி,ஆனி,ஆடி,ஆவணி,புரட்டாசி,ஐப்பசி
என்பன 12 சந்திர மாதங்கள்

மகரம்,கும்பம்,மீனம்,மேழம்,விடை,மிதுனம்,கற்கடகம்,சிங்கம்,கன்னி,துலாம்,நளி
ஆகியவை 12 சூரிய மாதங்கள்.

தமிழர் சந்திர புத்தாண்டு= விளக்கீடு
தமிழர் சூரிய புத்தாண்டு=பொங்கல்..

குமரிக்கண்ட தமிழர் சூரிய வழி
சிந்துசமவெளி தமிழர் சந்திர வழி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக