ஞாயிறு, 19 மார்ச், 2017

பொலிசை படை போலீஸ் வேர்ச்சொல் வட்டி அடியாட்கள்

aathi tamil aathi1956@gmail.com

ஜன. 25
பெறுநர்: எனக்கு
Kasi Krishna Raja
காவல் படை vs பொலிசைப் படை:
வேட்டுவ வாழ்க்கையில் இருந்து விலகி, கால்நடை வளர்ப்பிலும் , உழவு
வாழ்விலும் மனிதன் ஈடுபட்ட பிறகு அவனது கால்நடைச் செல்வங்களையும்,தானிய
உற்பத்தியையும்,கண்மாய் ஏரிகளையும் பாதுகாக்க அவனுக்கு காவல்காரர்கள்
தேவைப்பட்டனர்.
ஆயிரம் மாடுகளோடு வயல்களில் கிடைபோடும் கோனார்கள்,தங்கள
து கூட்டத்தில் சிலம்பம் தெரிந்த வீரர்களை காவலுக்குப் பயன்படுத்துவர்.
ஊரில் இருக்கும் ஏரி,கண்மாய்,ஊரெ
ல்லை போன்றவற்றைப் பாதுகாக்க ஊர்த் தலைவனின் கட்டுப்பாட்டில் இயங்கும்
காவல்வீரர்கள் பணிசெய்வர்.இவர்கள் செய்த பணிக்கேற்ப கூலி
(தானியங்கள்,ஊரின் உற்பத்தியில் பங்கு ) வாங்கிக்கொள்வார்கள்.
நிலவுடமையாளர்கள் தங்களின் வயல்வெளிகளைப் பாதுகாக்க அவர்களின்
குடும்பத்தில் இருந்தே தற்காப்புக் கலை தெரிந்த ஆட்களைப் போட்டுப்
பாதுகாப்பர்.குறிப்பாக அறுவடைக் காலங்களில் இது நடக்கும்.
இவ்வாறான காவல் படைகள் ஊர்க்கட்டுப்பாட்டில் இருக்கும்,ஊரின் சட்ட
திட்டங்களை மதித்து நடக்கும்.மக்களுக்குத் தீங்கு விளைவிக்காது.
பொலிசைப் படை என்பது முற்றிலும் வேறுபட்டது.பொலி
சை என்ற சொல்லுக்கு “ வட்டி “ என்று பொருள்.
பெருங்கோவில் என்ற தனியார் வங்கியின் கூலிப் படைக்குப் பெயர் தான் பொலிசைப் படை.
பணத்தை வட்டிக்கு விட்டுப் பிழைக்கும் ஈனப்புத்தி கொண்ட சில தனியார்
முதலாளிகள் வாழ்ந்த பெருங்கோவில்கள் மக்களைச் சுரண்டப் பயன்படுத்திய
ஆயுதம் “ வட்டி “.
கோவிலில் பதுக்கிய செல்வத்தை வட்டிக்கு விடுவது, அதனை வசூலிக்க பொலிசைப்
படையை அனுப்புவது, கொடுக்கமுடியாவிட்டால் நிலத்தை கோவிலின் பெயரில்
அபகரிப்பது போன்றவையே பெருங்கோவில்களின் முதன்மைத் தொழில்கள்.
ஊர் மக்களின் மீது வன்முறையைப் பயன்படுத்தி அவர்களின் சொத்துக்களைப்
பறிப்பதே இப்பொலிசைப்படையின் முதன்மைத் தொழில்.
இக்கூலிப் படை அரசனுக்கே கட்டுப்படாது.கோவிலில் வாழ்ந்த தொந்திப்
பிள்ளையார்க்கு மட்டுமே அடிபணியும்.
ஐநூறு ஆண்டுகளுக்கு முன் Police என்ற சொல் ஆங்கில அகராதியிலேயே
கிடையாது.காவல் துறை என்ற சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல் protection
force என்பது தானே தவிர police force என்பது பொருந்தாது.
Police force என்றால் குடிமக்களை ஏய்த்துப் பிழைக்கும் கூலிப் படை என்பதே பொருள்.
தமிழகத்தில் காக்கிச் சீருடை அணிந்தவர்கள் காவல் படையாக
இருக்கப்போகிறார்களா அல்லது பொலிசைப் படையாக இருக்கப்போகிறார்களா ??
அவர்களே தீர்மானிக்கட்டும். இல்லையென்றால் மக்கள் புரட்சி வெடிக்கும்
பொழுது மக்களே தீர்மானிப்பார்க
ள். Sivakumar Kone

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக