ஞாயிறு, 19 மார்ச், 2017

தமிழகம் ஆட்சிமொழி ஆங்கிலம் அண்ணாதுரை ஹிந்தி இந்தியெதிர்ப்பு 1965 தமிழ்மொழி மொழிப்பற்று மாநிலஉரிமை

aathi tamil aathi1956@gmail.com

ஜன. 26
பெறுநர்: எனக்கு
தமிழ்த் தேசப் புரட்சி இயக்கம் , ஒரு தருணத்தைப் பகிர்ந்துள்ளார் — வெ.
பார்கவன் தமிழன் மற்றும் 18 பேர் உடன்.
தமிழ் மொழியே தமிழ்நாட்டின் ஆட்சி மொழி!
மொழிபெயர்ப்பைக் காணவும்
2 வருடங்களுக்கு முன் இன்று
வெ. பார்கவன் தமிழன் மற்றும் 18 பேர் உடன் தமிழ்த் தேசப் புரட்சி இயக்கம்
. 26 ஜனவரி 2015, 01:40 PM · பொது
ஆங்கிலவழிக் கல்வியை அகற்றுவோம்,
தமிழ்நாட்டிற்கு தமிழ்வழிக் கல்வியே
என்ற நிலையை உருவாக்குவோம்!
தமிழ்த் தேசப் புரட்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா்
தோழா் பா.தமிழரசன், தமிழ்மொழிப் போர் ஈகியா் வீரவணக்க
நிகழ்வில் உரையாற்றினார்.
இந்திய வல்லாதிக்க அரசின் இந்தி அலுவல் மொழிச் சட்டத்தை எதிா்த்து, 1965
ஆம் ஆண்டில் தமிழினத்தின்
மாணவா்கள், இளைஞா்கள் உள்ளிட்ட தமிழினத்தவா்களின்
வீரம் செறிந்த போராட்டத்தில், இந்திய அரசின் துப்பாக்கிச் சூட்டிற்கு
பலியான மற்றும், தீக்குளித்தும் உயிரிழந்த தமிழ்மான மறவா்களுக்கும்
வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு,
தமிழ்த் தேசப் புரட்சி இயக்கத்தின் சார்பில் கோவையில்
நடைபெற்றது.
25.01.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில்
கோவை, செட்டிவீதி பகுதியில் அசோக்நகா்-ஐயப்பா நகா்
சந்திப்பில், தமிழ்மொழி காத்த மாவீரா் வீரவணக்க
கொடியேற்ற நிகழ்வு மக்கள் திரளின் எழுச்சியோடு
நடைபெற்றது.
நிகழ்விற்கு தமிழ்த் தேச இளைஞா் இயக்கத்தின்
கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தோழா் பிறை.சுரேசு
தலைமையேற்றார்.
தமிழ்த் தேசப் புரட்சி இயக்கத்தின் செய்தித் தொடா்புச்
செயலாளா் தோழா் பா.சங்கரவடிவேல், தமிழ்த் தேசப் புரட்சி இயக்கத்தின்
தோழா் க.கிருட்டிணகுமார் உள்ளிட்டோா்
வீரவணக்க உரை நிகழ்த்தினா்.
தமிழ்த் தேசப் புரட்சி இயக்கத்தின் கொடியை ஏற்றி வைத்து
வீரவணக்க உரையாற்றிய தமிழ்த் தேசப் புரட்சி இயக்கத்தின்
ஒருங்கிணைப்பாளா் தோழா் பா.தமிழரசன், 1938 ஆம் ஆண்டில்
பள்ளிக் கல்வியில் இந்திப் பாடம் கட்டாயம் என்ற இராசாசி
அரசின் ஆணையை எதிா்த்து சோமசுந்தரபாரதியார்,
மறைமலையடிகள் உள்ளிட்ட தலைவா்களின் தலைமையில்
நடந்த போராட்டம் குறித்தும், அதில் போராடி சிறைப்பட்டு
அரசின் சித்தரவதைகளால் மாண்ட நடராசன்,தாளமுத்து
ஆகிய போராளிகளின் ஈகங்கள் குறித்தும் உரையாற்றினார்.
1965 ஆம் ஆண்டு முதல் இந்திமொழி மட்டுமே இந்திய அரசின்
அலுவல் மொழி என்ற கொடுங்கோன்மையை எதிர்த்து
தமிழ்த்தேசம் போர் முரசு கொட்டியது.
இந்திய அரசு, தமிழக காங்கிரசு அரசு ஆகியவைகளின்
இராணுவம், காவல்துறையின் கொடூர அடக்குமுறைகளையும்
மீறியும், திமுக உள்ளிட்ட தமிழ்நாட்டு துரோகிகளின்
வஞ்சகங்களையும் தகா்த்தெறிந்த, தமிழ்நாட்டு மாணவா்கள்,
இளைஞா்களின் தலைமையிலான தமிழ்த் தேச போர்ப்படை
இலக்கு நோக்கி நகா்ந்தது.
கீழப்பழுவூர் சின்னச்சாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம்,
விருகம்பாக்கம் அரங்கநாதன் உள்ளிட்டோர் தமிழ் வாழ்க,
இந்தி ஒழிக என்ற முழக்கங்களோடு தங்கள் இன்னுயிரை
தீயில் இரையாக்கினா்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவா்கள்,
இந்திய அரசின் கொடும் அடக்குமுறைகளையும் மீறி,
தங்கள் தாய்மொழியாம் தமிழ் காக்க, ஆதிக்க இந்தியை
எதிர்க்க அணிவகுத்து நின்றனா்.இதனால் ஆத்திரமுற்ற
பக்தவத்சலம் தலைமையிலான காங்கிரசு அரசு மாணவா்களை
சுட்டுத் தள்ள உத்தரவிட்டது. இதில் மாணவா் சிவகங்கை இராசேந்திரன் இந்திய
அரசின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான
முதல் போராளி ஆவார்.
இதனால் போராட்டம் தடைபட்டுப் போகும் என்று நினைத்த
இந்திய அரசுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தமிழ் காக்கும்
போராட்டம் புதிய பாதையில் பயணித்தது. திமுக உள்ளிட்ட
எந்த துரோக கட்சிகளையும் நம்பாமல்,தமிழின மாணவா்கள்,இளைஞா்கள் தலைமையில் வீச்சுடன்
போராட்டம் தொடங்கியது.
மக்கள் திரளின் போராட்டமாக வடிவம் பெற்றது. இதனால்
போராடும் அனைவரையும் சுட்டுத் தள்ளியது இந்திய அரசு.
கோவை,திருச்சிராப்பள்ளி, ஈரோடை,விருதுநகா்,சிவகங்கை
என தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டத்'தீ'
பற்றி எரிந்தது.
போராட்டங்கள் ஒருபக்கம் நடைபெற்ற நிலையில், தமிழா்கள்
பலா் தமிழ் வாழ்க, இந்தி ஒழிக என்ற முழக்கங்களுக்கிடையே
தீக்குளித்தும் தங்கள் உயிரை மாய்த்து கொண்டனா்.
கீரனூர் முத்து, சத்தியமங்கலம் முத்து, விராலிமலை சண்முகம், ஆசியா்
வீரப்பன், கோவை சண்முகம், மாயவரம் சாரங்கபாணி
என தீக்குளித்தும்,நஞ்சுண்டும் தமிழ் காத்தோர் பட்டியல் நீள்கிறது.
உலக வரலாறு காணாத, மொழி காக்க நூற்றுக்கணக்கான
மக்களை இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டிற்கு
பறிகொடுத்த தமிழ்த் தேசத்து மக்களின் போராட்டம் பல
மாதங்கள் தொடா்ந்து நடந்தது.
இதன் பின்னரே இந்திய அரசின் அலுவல் மொழியாக
ஆங்கிலமே, இந்தி பேசாத மாநிலங்களில் நீடிக்கும் என்று
அறிவித்தது. தமிழினத்தின் போராட்டம் ஒரு நிலையில்
வெற்றி கண்டது.
இதன் பின்னா் தமிழக தேர்தல் களம்,காங்கிரசு என்ற தமிழினப்
பகைவா்களின் கையில் இருந்து, திமுக துரோகிகளின் கைக்கு
மாறியது. தமிழினத்தவா்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை
துரோக வழியில் பயன்படுத்திக் கொண்ட திமுக தமிழகத்தில்
ஆட்சியில் அமா்ந்தது.
இந்திய அரசின் அலுவல் மொழியாக இந்தி என்ற சட்டத்தை
எதிர்த்து நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பாதியிலேயே
ஒதுங்கிக் கொண்டு துரோகம் செய்த அண்ணா அவா்கள்,
தமிழக முதல்வரானவுடன், தமிழகத்தில் அலுவல் மொழியாக ஆங்கிலத்தை கொண்டு
வந்து பெரும் கேட்டை தமிழ்நாட்டில்
ஏற்ப்படுத்தினார்.
இருமொழிக் கொள்கை என்ற பெயரில் ஆங்கில ஆதிக்கத்தை
தமிழ்நாட்டில் நிலைப்படுத்தியு
ள்ள திராவிட கட்சிகள், இன்று
கன்னட-பார்ப்பன செயலலிதா ஆட்சியில், தமிழ்நாட்டு அரசுப்
பள்ளிகளில், தமிழ்வழிப் பள்ளிகளை அழித்துவிட்டு,
ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றும் தமிழின அழிப்பு
வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன.
1965 இந்தி எதிர்ப்புப் போரின் பயனை தமிழா் இனம் உணர வேண்டும். 1976 ஆம்
ஆண்டு இந்திய அரசின் அலுவல் மொழிச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டிற்கு இந்தி மொழியானது அலுவல் மொழி இல்லை என்று இந்திய அரசு
விலக்கு அளித்தது. இச்சட்டத்தைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் இந்திய அரசு
அலுவலகங்கள் உட்பட அனைத்து நிலைகளிலும் தமிழையே ஆட்சி மொழியாக்க வேண்டிய
தமிழக அரசு, தமிழ் மொழியை அழிக்கும் வேலையையே தொடா்ந்து செய்து
வருகின்றது. இவ்வாறு திராவிடா் கழக ஆட்சியாளா்கள் தமிழினப் பகைவா்களாகவே
இருக்கின்றனா்.
எனவே இந்த மொழிப்போர் நாளில், ஆங்கில,இந்தி
ஆதிக்கத்தை அகற்றிட, தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வியை
கட்டாயமாக்கிட, தமிழ்மொழியே தமிழ்நாட்டின் ஆட்சி மொழி
நிலையை ஏற்ப்படுத்திட உறுதியேற்போம்!
அதுவே 1938,1965 ஆம் ஆண்டுகளில் தமிழ் மொழி காக்க தங்கள் இன்னுயிரை தந்த
தமிழ்மொழிப் போராளிகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான வீரவணக்கமாக அமையும்
என்று
தோழா் பா.தமிழரசன் தமதுவீரவணக்க உரையில் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தோழா்கள் க.ராசா, சரவணன், குமார், முருகேசன்,
வாசிம் ராசா, பா.கௌதம், பா.அன்புச்செல்வன் உள்ளிட்ட
தமிழ்த் தேசப் புரட்சி இயக்கத் தோழா்களும், பகுதி மக்கள் ஏராளமானோரும்
பங்கு பெற்று தமிழ் காத்த தமிழினப்
போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினா்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக