செவ்வாய், 21 மார்ச், 2017

திருக்குறள் ஈவேரா பச்சோந்தி குறள்

aathi tamil aathi1956@gmail.com

10/7/16
பெறுநர்: எனக்கு
Kathir Nilavan
பெரியார் திருக்குறளை ஆதரித்தாரா?
பழித்தாரா?
தமிழர்களிடம் தொன்று தொட்டு திருக்குறளை போற்றும் மரபு இருந்து வந்துள்ளது.
"அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறிந்த குறள்"- என்று ஒளவையாரும்,
"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்று பாரதியாரும்,
"வள்ளுவனைப் பெற்ற தாற் பெற்றதே புகழ் வையகமே" என்று பாரதி தாசனும் பாடியுள்ளனர்.
திருக்குறள் வீ.முனுசாமி என்பவர் 1935இல் திருச்சி மலைக்கோட்டை
நூற்றுக்கால் மண்டபத்தில் திருக்குறள் பரப்புரையை மேற்கொண்டார். 1941இல்
முதன்முதலாக சேலத்தில் திருக்குறள் மாநாட்டையும் அவர் தான் கூட்டினார்.
உண்மைநிலை இவ்வாறு இருக்க பெரியார் வந்த பிறகு தான் திருக்குறள்
பரப்புரையும், மாநாடும் நடத்தப்பட்டதைப் போல கதை சொல்லப்படுகிறது.
திருக்குறள் மீது எப்போதும் காழ்ப்புணர்ச்சியோடு கருத்து மாறுபாடு
கொண்டவர் பெரியார். சில குறள்களில் தனக்கு உடன்பாடு இருப்பதைப் போல
காட்டிக் கொள்வார். ஒரு கால கட்டத்தில் அதன் அடிப்படை கருத்து 'ஆரிய
எதிர்ப்பு' என்பார். மற்றுமொரு கால கட்டத்தில் அதன் அடிப்படை கருத்து
'ஆரிய ஆதரவு' என்பார். தமிழை எந்தளவுக்குப் பழித்தாரோ அந்த அளவுக்கு
திருக்குறளை பழிக்கவும் தயங்கியதில்லை.
இவர் 1949இல் சென்னையில் திருக்குறள் மாநாடு நடத்தியதை பெருமை பொங்க
பேசுபவர்கள் மறு ஆண்டே திருக்குறளை மலத்தோடு ஒப்பிட்டு எழுதியதைக் கண்டு
சினம் கொள்ள மாட்டார்கள்.
அண்ணாவின் ஆட்சியில் உலகத்தமிழ் மாநாடு நடக்கவிருந்த நேரத்தில் (1968)
"தமிழும் தமிழரும்" நூல் பெரியாரால் வெளியிடப்பட்டது. அதில்
திருவள்ளுவர், தொல்காப்பியர், கம்பர் ஆகிய மூவரும் கடுஞ்சொற்ளால்
ஏசப்பட்டனர். இம் மூவர்களும் சாதியையும், சாதித் தொழிலையும் ஏற்றுக்
கொண்டவர்களே ஆவார்கள் என்றார்.
பெரியார் கூறுகிறார்: திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரிய
கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல்
நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு கூறிச் சென்றார்."
திருக்குறள் மீது பெரியாரின் பார்வை என்பது எப்போதும் முன்னுக்குப் பின்
முரண்பாடு கொண்டவை என்பதற்கு கீழே கண்ட அவரது முந்தைய பதிவுகளே அவரைத்
தோலுரிக்கும்.
14.3.1948 மயிலாப்பூர் திருவள்ளுவர் கழகம் சார்பில் நடைபெற்ற
திருவள்ளுவர் மாநாட்டில், "திருக்குறளில் எத்தகைய பகுத்தறிவுக்கு
புறம்பான ஆபாசக் கருத்துகளுக்கும் அதில் இடமில்லை என்று கூறியதோடு,
திருக்குறள் ஆரிய தர்மத்தை மனு தர்மத்தை அடியோடு கண்டிப்பதற்காகவே
ஏற்பட்ட நூல் என்பதை நீங்கள் உணர வேண்டும்"
ஈரோட்டில் 23,24.10.1948இல் நடைபெற்ற திராவிடர் கழக 19வது மாநாட்டில்,
"குறள் ஹிந்து மதக் கண்டன புத்தகம் என்பதையும், அது சர்வ மதத்திலுள்ள
சத்துக்களை எல்லாம் சேர்த்து எழுதப்பட்டுள்ள மனித தர்ம நூல் என்பதையும்
எல்லோரும் உணர வேண்டும்" என்றும் கூறுகிறார்.
15.1.1949 சென்னையில் திராவிடர் கழகம் சார்பில் திருக்குறள் மாநாடு
நடத்தப்பட்டது. அதில், "குறள் ஆரியத்தை ஒழிக்க ஒப்பற்ற நல்லாயுதம்"
என்றும் பேசினார்.
விவேகானந்தன், இனியன் சம்பத், கல்பனா தாசன் ஆகிய மூன்று பேர் இணைந்து
எழுதிய நூலான "ஈ.வெ.கி.சம்பத்தும் திராவிட இயக்கமும்" நூலில் பின்வருமாறு
தெரிலிக்கப்பட்டுள்ளது.
"1949 பொங்கல் திருநாளையொட்டி சென்னையில் திருக்குறள் மாநாட்டைப்
பெரியார் நடத்தினார். இதற்கு முன்பெல்லாம் அவர் மொத்தத்தில் புலவர்களே
மோசம், தமிழ் இலக்கியமே குப்பை, தமிழே காட்டுமிராண்டி மொழி என்றெல்லாம்
கருத்துக் கூறியதால் தமிழ்ப்புலவர்கள் மத்தியில் கடும் கோபமும்
எதிர்ப்பும் ஏற்பட்டன.
அண்ணா, சம்பத், நெடுஞ்செழியன் போன்றவர்கள் பெரியாரிடம் "புராணங்களை
எதிர்க்கிற வேகத்தில் திருக்குறள், சிலப்பதிகாரம் போன்றவற்றையும்
சேர்த்துத் தாக்கிடுவது முறையல்ல. தமிழுக்கும் தமிழ் இலக்கியங்களுக்கும்
நாமே பாதுகாப்பு. குறள் உலகப் பொதுமறை என்பதை நாம் உணர்த்த வேண்டும்"
என்றெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்பே ஒதிய பிறகு தாமதித்தேனும் பலன்
ஏற்பட்டது. இப்போதூ பெரியார் தமிழ் இலக்கியங்களையும், புலவர்களையும்
தாக்குவதை நிறுத்திக் கொண்டார்."
(பக். 169)
மேற்கண்ட செய்தியின் படி திருக்குறள் மாநாடு அண்ணா, ஈ.வெ.கி.சம்பத்,
நெடுஞ்செழியன் ஆகியோரின் நிர்பந்தத்தின்படி நடத்தப்பட்டுள்ளது.
திருக்குறளுக்கு எதிரான பெரியாரிடமே சில ஆண்டுகளாக அதுபற்றி நல்லவிதமாக
ஓதி வந்தபடியால் வேறு வழியின்றி திருக்குறள் மாநாடு நடத்த பெரியாரும்
ஒப்புக் கொண்டார் என்பதும் விளங்கும்.
1950இல் மீண்டும் பெரியார் என்ற வேதாளம் முருங்கை மரம் ஏறியது. அவர்
கூறுகிறார்: "வள்ளுவர் குறளையும் அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு
ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும் போது
பலர் என்னிடம் எல்லாம் போய் விட்டால் நமக்கு எது தான் நூல் என்று
கேட்டார்கள். நான் இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது.
அதை எடுத்து விடு என்று கூறினால் அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா
கேட்பது என்று பதில் கூறினேன். (விடுதலை 1.6.1950)
பெரியாருக்கு சாவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு வரையிலும் திருக்குறளின்
மேல் நல்லெண்ணம் பிறக்க வில்லை.
27.12.1972இல் 'கலைமகள்' இதழுக்கு அளித்த பேட்டியில் கூறுகிறார்:
"குறளை எடுத்துக்குங்க. நான் மட்டும் தான் குறளை கண்டிக்கிறேன்.... நான்
குறள் மாநாடு நடத்தியதாலே சிலபேர் என்னைக் கண்டிச்சாங்க. கலைஞர் கூட அதை
ஒண்ணையாவது விட்டுவிடக் கூடாதான்னு கேட்டாரு. குன்றக்குடி அடிகளாரும்
கேட்டுக்கிட்டாரு. இரண்டாயிரம் வருடத்துக்கு முந்தியது குறள். அதை
அப்படியே இப்பவும் நாம் ஏத்துக்கணும்னா?"
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு
எதிராக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்று கலகக்குரல் எழுப்பியவர்
திருவள்ளுவர். அவர் எழுதிய திருக்குறள் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான
போர்க்களத்தில் இன்றும் தேவைப்படுகிறது என்பதை பெரியாருக்கும்,
பெரியாரைப் போற்றும் அடிப்பொடிகளுக்கும் ஓங்கி உரைத்திடுவோம்! — தமிழன்.
இரா.பெ. அரி, Ranga Rasu, ராசசேகரன் மன்னை , கலைச்செல்வம் சண்முகம்,
தமிழ்ச் செல்வன் தமிழ் , Irulandi Shanthi ,
Maniyan Sivan , நல்ல சிவம் , Veyilmuthu Valli, கோவேந்தன் வி, ச. செந்தமிழன் ,
Arunachalam Subramaniyan , இரா.எதிர்வன் தியாகு , பாரதிசெல்வன் இலரா, S
Gsviswanathan Viswanathan , ஆர்த்திக் தமிழன் , தமிழ்த் தேசியம் ,
Raasaa Raghunathan, மா.சீ.கா. அமுதன்,
தமிழ்த்தேசியன் முருகேசன் ,
Devarajan Govindasamy , Vel Samy ,
மண்ணாடிப்பட்டி பா.ம.க , Aathimoola Perumal Prakash, கி.த. பச்சையப்பன்,
க.விடுதலைச் சுடர் மற்றும்
Thiyagalingamஉடன்
இன்று, 07:04 AM · பொது

திருக்குறள் குறித்து ஈ.வெ.ரா.வின் கருத்து இதோ்.......
”திருவள்ளுவர் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு
கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப்பற்றிக் கவலைப்படாமல் நீதி கூறும்
முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்” (ஈ.வெ.ரா., தமிழும்
தமிழரும், பக்கம்-10.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக