ஞாயிறு, 19 மார்ச், 2017

வர்மக்கலை வர்மம் தொடர்பெண் போதிதர்மர் தற்காப்புக்கலை

aathi tamil aathi1956@gmail.com

பிப். 6
பெறுநர்: எனக்கு
Raja Rajan
வர்ம ஆசான் இராமசாமி:
இவர் எதில் சிறந்தவர் என்றால் தொடுவர்மத்தில் சிறந்தவர். பொதுவாக உடலில்
ஏதேனும் காயம் ஏற்பட்டாலோ அல்லது எலும்பு முறிவு ஏற்பட்டாலோ நாம்
மருத்துவரிடம் சென்று கட்டு போடுவது வழக்கம். அப்படி ஆன பின்னர் பலரும்
வெளியே சொல்வதில்லை, சிறு வலியோ அல்லது கால் குடைகிறது என்று சொல்வது
உண்டு. அதன் பின்னர் ஏற்கனவே உடற்பயிற்சி செய்தால் உடல் வலி இன்னும்
அதிகம் ஆகிவிடுமோ என்று அச்சம் சிலருக்கு இருக்கும். அதிலும் பெண்கள்
பலரும் திருமணம் ஆன பின்னர் அறுவை சிகிச்சை செய்த பின்னர் குழந்தை
பெற்றுக்கொள்கிற
ார்கள். அதே போல் மரபு மருத்துவத்தை பின்பற்றுவதையும் நிறுத்திவிட்டனர்.
கருப்பை பயன் தெரியாமல் அதை நீக்கி விடுவதும் பெரும் தவறு ஆகும்.அதே போல்
ஆண்களும் மரபு மருத்துவத்தை பின்பற்றுவதையும் நிறுத்திவிட்டனர், நம்முடைய
கலைகள் அனைத்தையும் மறந்துவிட்டனர்.இது தான் இன்று பலரும் செய்கின்ற
தவறு. சித்த கலைகள் தனித்துவம் வாய்ந்தது என்பதை புரிந்து கொள்ள
வேண்டும்.
இப்பொழுது இவர் எந்த பிரச்சனைக்கு வைத்தியம் செய்பவர் என்றால் உடலில்
ஏற்படும் எல்லா வலிகளுக்கும், நரம்பு சம்மந்தப்பட்ட சிக்கல்கள், ரத்த
அடைப்பு மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கபட்டோருக
்கு தொடு வர்மம் சிகிச்சை கொடுப்பதில் வல்லவர்.
இவரை கடந்த வாரத்தில் என் வீட்டில் உள்ளவருக்கும் எனக்கும் சிகிச்சை
கொடுத்தார். அருகில் உள்ள வீட்டார் வந்து சிலர் சிகிச்சை எடுத்துவிட்டு
வழக்கம் போல் காசு கொடுக்காமல் சென்றுவிட்டனர்.
அதே போல் இவர் என்ன சொல்கிறார் என்றால் எலும்பு முறிவு ஏற்பட்டால் சில
நாட்கள் கழித்து உடற்பயிற்சி செய்து பழைய படி உடல் உறுப்புகள்
அனைத்திற்கும் வேலை கொடுக்க வேண்டும் என்கிறார். அதே போல் உடலுக்கு SOAP
போட்டு குளிப்பதால் நம் கைகள் உடலில் படுவதில்லை. அப்படி செய்யாமல் உடல்
முழுக்க நம் கைகளை வைத்து சீகக்காய், பச்சரசி, கடலை மாவு ஏதோ ஒன்றை
பயன்படுத்தி உடல் முழுக்க நன்றாக நீவி குளிக்க வேண்டும். அப்படி செய்தால்
உடல் முழுக்க ரத்த அடைப்பு ஏற்படுவதை தடுக்க முடியும். முடியாதவர்கள்
இவரிடம் வர்ம சிகிச்சை எடுத்துக்கொண்டு பின்பு பழைய படி செய்யுங்கள்
என்று கூறுகிறார்.
இவர் தற்போது உடுமலையில் வசிக்கிறார். 61 வயது இளைஞர், 30 வருடம் வர்ம
சிகிச்சையில் அனுபவம் பெற்றவர் அருகில் உள்ள ஊரில் யார் அழைத்தாலும்
நேரில் சென்று சிகிச்சை கொடுத்து கொண்டு செல்கிறார். ஆங்கில மருத்துவர்
உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு பணம் சம்பாதிக்கிறார். ஆனால் நம்
மரபு சிகிச்சை செய்பவர்கள் ஊர் ஊராக சென்று சிகிச்சை கொடுக்கிறார்கள்.
அதனால் அவருடைய முகவரி இதில் இணைத்து உள்ளேன். முடிந்த வரை நேரில் சென்று
சிகிச்சை எடுத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். அது தான் நம் மரபு
மருத்துவம் செய்பவர்க்கு நீங்கள் செய்யும் கைமாறு.
வர்ம ஆசான் முகவரி:
D. இராமசாமி (SMP),
2/477, குமாரசாமி லே அவுட், S.V. புரம்,
உடுமலை- 642128
அலைபேசி எண்: 98655 53763 (மாலை 6 முதல் 8 மணிக்கு அழைத்து பேசுங்கள்)
நன்றி
ப. இராசராசன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக