ஞாயிறு, 19 மார்ச், 2017

பதிமூன்றாம் மாதம் சிலப்பதிகாரம் ஆடி நாட்காட்டி நாளாகாட்டி வானியல்

aathi tamil aathi1956@gmail.com

பிப். 6
பெறுநர்: எனக்கு
நவீன் குமரன்
ஆடித் திங்கள் பேரிருட் பக்கத்து
அழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று
வெள்ளி வாரத்து ஒள்ளெரி யுண்ண
உரைசால் மதுரையோடு அரைசுகே டுறுமெனும்
உரையு முண்டே நிரைதொடி யோயே -சிலம்பு
இங்குள்ள பேரிருட் பக்கம் என்ற பதத்தில், தமிழரின் பண்டைய திங்கள்
நாள்காட்டியை பற்றியச் செய்தி காணக்கிடைக்கிறது.
தற்போது கிருஷ்ண பக்ஷம்,சுக்ல பக்ஷம் என்று செங்கிருதத்தில்
வழங்கப்படுவது தமிழிலிருந்தே தோன்றியது. இருட்பக்கம்(தேய
்பிறை), ஒளிப்பக்கம்(வளர்பிறை) என்பவையே அவை.
இருட்பக்கம் சரி, அது என்ன பேரிருட் பக்கம்??? திங்கள் நாள்காட்டியில்
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிக மாதம் வரும். பல்வேறு பகுதிகளில்
பல்வேறு வகையில் விதிகள் பின்பற்றப்படுகி
ன்றன. தமிழர்கள் ஆடி மாதத்தை அதிக மாதமாக கொண்டனர். ஆடி, பேர் ஆடி என்று
இரண்டு ஆடி மாதங்களை கொண்டு அதிக மாதத்தை சரி செய்தனர்.
ஆடி மாதம் பதினெட்டாம் நாளில் ஆடிப்பூரம் வரும் என்பதும், அட்டமி அன்று
கிருத்திகை வரும் என்பதும் விதி. இதில், கண்ணகி மதுரையை எரித்த பேர்
ஆடியில் தான், மங்கல நிகழ்ச்சிகளை மக்கள் ஒதுக்கினரேத் தவிர, மற்ற ஆடி
மாதங்களில் இல்லை. உண்மையில் ஆடித் திங்கள் மங்கல மாதமே!!!

விஷ்ணு தாசன்
இரு பௌர்ணமி அல்லது இரு அமாஸ்யை கொண்ட மாதம் மலமாதம் என்ப்படும் ...
அதில் சுப நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பெறுவது... இன்றும் வழக்கில் உண்டு

நவீன் குமரன்
அது பெரும்பாலும்,ஆடி,ஆவணி மாதங்களிலேயே வரும்.

இரமேசு பழஞ்சூர் மாகாளியர்
இது இப்போதும் தெலுங்கு/ மராட்டிய மாதம் இப்படி ஆடி இரண்டு முறை வரும்..
இது சூரியசந்திர நாட்காட்டி..

நவீன் குமரன்
அவர்களுக்கு ஆடி மாதம் மட்டும் வராது... சைத்ர மாதமும் வரும், புரட்டாசி
மாதமும் வரும்.... 12 மாதங்களில் ஏதாவது ஒன்று வரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக