சனி, 25 மார்ச், 2017

கொரியா தமிழர் தொடர்பு பாண்டியர் இளவரசி மீன் ஸ்வஸ்திகா சின்னம் ஆசீவகம் பூதவியல்

aathi tamil aathi1956@gmail.com

27/3/16
பெறுநர்: எனக்கு
தென்காசி சுப்பிரமணியன்
@கூர்ங்கோட்டவர்
தமிழர் கொரியர் உறவுகள்
தமிழர் தேசத்தில் இருந்து தென்கொரியா சென்று அங்குள்ள சுரோ இளவரசரை
மணந்து இன்று கொரியாவில் 40 இலட்சம் கொரியர்களின் தாய்வழி முன்னோராக
விளங்குகிறார் ஒரு தமிழ் இளவரசி
இந்த இளவரசி சுரோ அரசரின் வாரிசுகளாக இன்றை கிம்கே காராக்கு மரபு
கொரியர்கள் விளங்குகிறார்கள். இந்த பெண்ணின் ஊராக காயா என்னும் ஊரும்
இவளின் நாடாக ~அய~ என்று தொடங்கும் நாடும் கொரிய இலக்கியங்களில்
கூறப்படுகின்றன.
இவ்வளவு நாள் உத்திரபிரதேச அயோத்தியாவே இந்த பெண்ணின் சொந்த ஊராக இந்திய
ஊடகங்களில் கூறப்பட்டு வந்தது. அதற்கு அவர்கள் சொன்ன காரணம் தற்கால
உத்திரபிரதேச அரசசின்னமாக இருக்கும் இரட்டை மீன்களை தான். இரட்டை மீன்கள்
தான் கொரியாவில் கிம் குடும்ப மரபுச்சின்னமாக விளங்குகிறது. இந்த
இரண்டையும் ஒப்புமைப்படுத்தி கிம் இளவரசி அயோத்தியைச் சேர்ந்தவர் என்ற
கருதுகோள் வடவர்களால் முன்வைக்கப்பட்டது.
ஆனால் இந்த உத்திரபிரதேச மீன்குறி சுல்தான் காலத்தில் இந்து இசுலாமிய
உறவை வழியுறுத்தும் விதமாக இராமரின் வில்லையும் சுல்தானின்
மீன்குறியையும் இணைத்து உருவாக்கப்பட்டதே என்பதை என் ஆய்வுக்கட்டுரையில்
நிறுவியுள்ளேன்.
தமிழர் தரப்பில் இருந்து வழுவான ஆதாரங்களை முன்வைத்து கொரிய இளவரசி ஒரு
தமிழர் என்ற கருதுகோளை கொரிய தூதுவர்களிடம் தமிழர்கள் முன்வைத்துள்ளனர்.
என்னையும் இந்த மாநாட்டுக்கு ஆய்வுக்கட்டுரை எழுதச்சொல்லி ஊக்கப்படுத்திய
கலிங்கம் கொண்டாருக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
படம் 1 - ஈழம் உருகுணையில் கதிர்காமத்தை தலைநகரமாக வைத்து ஆண்ட பாண்டிய
அரசின் பரதவர்கள் வெளியிட்ட காசு. பரததிச்ச என ஈலு-->எலு-->ஹெல
ா என்னும் தமிழின் திசைச்சொல் வழக்கில் பொறிக்கப்பட்டுள்ளது.
படம் 2 - கொரிய இளவரசி கொண்டு சென்ற கற்கள்
படம் 3 - கொரிய இளவரசன் சுரோவின் தூணருகில் பொறிக்கப்பட சின்னங்கள்.
படம் 4 - கொரிய சுரோ-தமிழ் இளவரசி வழியில் வந்த கிம் குடும்பத்தினர்
திருமணத்தின் அடையாளமாக கொள்ளும் இரு மீன் சின்னம். தமிழர் தாலி பழைய
காலத்தில் அப்படித்தான் இருந்துருக்கனும். இப்ப தாலியில் உள்ள நடு கோட்டை
ஐந்து நிலைக்கல்லாகவும் இரண்டு மீண்களை இரண்டு பக்கக்கோடுகளாகவும்
உருவகப்படுத்திப்பாருங்க. விசயம் புரியும்.
படம் 5 - கொரிய இளவரசியின் கல்லறையில் இருக்கும் மீன் சின்னம்.
படம் 6 - கொரியக் காசு
முதல் படத்தில் சுழற்குறியின் (சுவாசுத்திக்கா) இரு பக்கங்களிலும் மீன்
பொறிக்கப்பட்டுள
்ளது. சுழற்குறிக்கு நான்கு துடுப்புகள். ஒரு நடுவம். இடம் - ஈழம்
மூன்றாவது படம் சுரோவின் நினைவுத்தூண் - கொரியா - சின்னத்தில் நடுவில்
நான்கு நிலையும் ஒரு நிழல் நிலையும் கொண்ட தூணின் இரு பக்கங்களிலும் மீன்
பொறிக்கப்பட்டுள
்ளது.
இரண்டாவது படம் - கொரியாவுக்கு சென்ற இளவரசி அங்கே தன் தாய்நிலத்தில்
இருந்து எடுத்துச்சென்ற கற்கள். இந்த ஐந்து நிலை கற்கள் தான் சுரோ
தூணருகில் உள்ள ஓவியத்தில் இரு மீன்களின் நடுவில் உள்ளது.
பரததிச்ச என்னும் ஈழக்காசில் கிடைத்த சுழற்குறிதான் கொரியாவில் இளவரசி
கொண்டு சென்ற வட்ட துடுப்புகளை கொண்ட சுழற்குறியாக உள்ளது.
இது தொடர்பான ஆய்வுக்கட்டுரை ஒன்று உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்,
ஒரிசாபாலுவின் கடலியல் ஆய்வு நிறுவனம், தமிழ் மரபு அறக்கட்டளை மூன்றும்
இணைந்து நடத்திய தமிழ்-கொரிய உறவுகள் தொடர்பான மாநாடுக்கு
அனுப்பப்பட்டது. பல காரணங்களால் கட்டுரை மாநாட்டில் வாசிக்க தேர்வாக
விட்டாலும் அனுப்பப்பட்ட கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து நூலாக
வெளியிட்டுள்ளனர். நூலின் இணைப்பு கீழே.
http://www.subaonline.net/thfebooks/THF-e_book_Korea-Tamil.pdf
நான் அனுப்பிய கட்டுரை அவசர கதியில் எழுதி அனுப்பப்பட்டது. அதனால் அதில்
பல தகவல்களை சேர்க்க முடியவில்லை. மீதமுள்ள தகவல்கள் ஈழத்துத் தமிழர்
மெய்யியல் நூலில் நிறைவு செய்யப்படும்.
1. முக்கியமாக சுழற்குறி பற்றிய ஒப்பீட்டை அனுப்பிய கட்டுரையில் சேர்க்க
முடியவில்லை. பரததிச்ச என பொறிக்கப்பட்ட கதிர்காம பாண்டிய அரசின் காசில்
இரு மீன்களுக்கு மேலே இருக்கும் சுழற்குறி மெய்யியல் குறியீடாகும்.
2. ஈழத்தில் பௌத்தம் பாவுவதற்கு முன் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டளவில்
ஆசீவகம் பரவியது. இதற்கு ஈழத்து நூல்களிலும் கல்வெட்டுகளிலும் கூட
ஏராளமான சான்றுகள் உள்ளன. ஆனால் ஆசீவகம் ஈழத்துக்கு போகும் முன்னரே அங்கு
இயக்கரால் பெரிதும் வளர்த்தெடுக்கப்பட்ட மெய்யியல் பூதவியலாகும்.
முக்கியமாக ஈழத்து பூதந்தேவனாரைச் சொல்லலாம். விசும்பு என்னும் பூதத்தில்
இருந்து வளி, தீ, நீர், நிலம் தோன்றி ஒடுங்குபவை என்பதை குறிக்கவே
விசும்பு ஒரு நடுவமாகவும் வளி, தீ, நீர், நிலம் நான்கும் சுழற்குறியின்
துடுப்புகளாகவும் உருவகப்படுத்தப்பட்டன.
3. ஈழத்தில் இருந்த கதிர்காம பாண்டியர்கள் மட்டுமே சுழற்குறியீட்டை அரச
சின்னமாக கல்வெட்டுகளில் மீனுடன் பொறித்துக்கொண்டவர்கள்.
தமிழ்-கொரிய உறவுகள் தொடர்பான விசயத்தில் இந்த மூன்று தகவல்கள் மட்டும்
ஈழத்துத் தமிழர் மெய்யியல் நூலில் எழுதுகிறேன். மற்றவை மேலே
கொடுக்கப்பட்ட இணைய இணைப்பில் பக்கம் 38 – 47 வரை உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக