செவ்வாய், 21 மார்ச், 2017

சிந்துசமவெளி மீன் சின்னம் வேர்ச்சொல்

aathi tamil aathi1956@gmail.com

20/8/16
பெறுநர்: எனக்கு
மொஹஞ்சதாரோவின் யோக முத்திரை M-305:
வானியல் அடிப்படையிலான விண்மீன் காலக்காட்டி பண்டைய மெசபடோமிய
நாகரீகத்தில் ஒரு முக்கிய பங்கு வகித்தது. மேலும் அது அதன் மதச்
சமயங்களில் ஆழமான செல்வாக்கினை உருவாக்கியிருந்
தது. அதன் அத்தனை முக்கியமான கடவுள்களும் ஒரு குறிப்பிட்ட
விண்மீன்களையும் கோள்களையும் கொண்டே அடையாளப்படுத்தப் பட்டன.
மேற்காசியாவின் வேறுபட்ட தெய்வங்களின் பட உருவங்களில் ஒன்றோ அதற்கும்
மேற்பட்ட விண்மீன் வடிவங்கள் அதன் தலைக்கருகில் அமைக்கப்பட்டிரு
ந்தன. இவ்வாறான பழக்கம் மெசபடோமிய நாகரீகத்தின் தாக்கத்தால் சிந்துவெளி
நாகரீகத்தில் பின்னாட்களில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்
டுள்ளது. மேற்கண்ட மொஹஞ்சதாரோ முத்திரையில் வளைந்த இரு கொம்புகளுக்கிடை
யிலிருப்பது அவ்வாறான விண்மீன் அடையாளமே. அதனருகில் ஒரு மீன் அடையாளமும்
அத்தி மரக் கிளையும் இருக்கிறது. (ஃபின்னிய ஆய்வாளர் அஸ்கோ பர்போலா,
இந்துத்துவத்தின் வேர்கள், ப. 272.)
இதில் சிறப்பு யாதெனில் அண்டவெளியில் ஒளிர்ந்து திரிபவையானவையான
விண்மீன்களும் ஆழ்கடலில் நீந்தித் திரிபவையான மீனும் இங்கு ஒருசேர
அடையாளப்படுத்தப
்பட்டுள்ளதே. இச்சொற்ப்பதங்கள், முத்திரையடையாளங்கள் ஆகியவற்றைக் கொண்டு
மீன் (Min) என்று தமிழிலுள்ளதை அவரும் கையாளுகின்றார். மீனிற்கும்
விண்மீனிற்குமான தொடர்பு எவ்வாறு மொஹஞ்சதாரோவில்
அடையாளப்படுத்தப்பட்டுள்ளது? அதற்கு மூலச்சொற்கள் தமிழில் எவ்வாறின்றும்
உள்ளன? சிலர் இந்த மீன் அடையாளம் பெண்ணைக் குறிப்பதாக சொல்கின்றனர். அது
ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை.
"ஆய்வறிஞர் அஸ்கோ பர்போலா அவர்கள் ஹரப்பன் நாகரிக மதச் சமயத்தையும் நன்கு
அறிந்துள்ளார் எனவும் இம்மாதிரியான விண்மீன் அடையாளப் பெயர்கள் தொன்மைக்
கால இந்தியாவில் மிகப் பொதுவானவை என்றும் இந்தத் தொன்மைப் பழக்கம்
எவ்வகையிலும் இந்தோ-ஆரிய கலாச்சார வேர்களில் இல்லை எனவும்
குறிப்பிடுகிறார். விண்மீன் பெயர்கள் ஆரிய வேதங்களில் மிகவும் அரிது
எனவும் மிகக் குறிப்பாக தமிழர்கள் கவனிக்கப்பட வேண்டியதானது: மனு
சாஸ்திரம் (3, 9) ஒரு ஆரியனானவன் எவ்வகையேனும் ஒரு விண்மீனையோ அல்லது ஒரு
விண்மீன் கூட்டத்தினையோ தனது பெயராகக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணை மணக்கக்
கூடாதென்பதாகும். இது விண்மீனை அடிப்படையாகக்கொ
ண்டு உருவாக்கப்பட்ட பெயர்கள் ஆரியரல்லாதவர்களின் அதாவது ஹரப்பாவினை
மூலமாகக் கொண்டதாகச் சொல்கிறார் மந்தீப் சரோ என்ற ஒரு பெண்."
ஆய்வாளர்கள், சான்றோர் மேலும் விளக்கினால் தகும்.
குறிப்பு:
இவ்வாய்வறிஞர் அஸ்கோ பர்போலா தான் 2010-ஆம் ஆண்டு தமிழகத்தில் அரங்கேறிய
நாடக உலக செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டு செம்மொழி தமிழ் விருது
வாங்கியவர்.
நன்றி:
harappa.com.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக