செவ்வாய், 21 மார்ச், 2017

வீரத்துறக்கம் நெஞ்சில் கீறி புதைத்தல் கணைக்கால் இரும்பொறை

aathi tamil aathi1956@gmail.com

20/8/16
பெறுநர்: எனக்கு
Saravanan Vaithyalingam.
நாளும் ஒரு தமிழ் இலக்கிய பாடல்:171
குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
'ஆள் அன்று' என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோஇவ் வுலகத் தானே?
- கணைக்கால் இரும்பொறை
(சேரவேந்தன்)
பொருள்:
எங்கள் குடியில் குழந்தை இறந்து பிறந்தாலும் (அல்லது பிறந்து
இறந்தாலும்), உருவமற்ற தசைப் பிண்டமாகப் பிறந்தாலும்
அது ஓரு ஆள் அல்ல என்று (புதைப்பதற்கு முன் மார்பில்) வாளால்
வெட்டுவதிலிருந்து தவற மாட்டார்கள்.
ஆனால், யானோ அக்குடியில் பிறந்தவனாகவிருந்தாலும், (போரில் மார்பில்
புண்பட்டு வீரனைப்போல் மரணமடையாமல்) சங்கிலியால் நாய்போலக் கட்டப்பட்டு,
என் பசியைப் போக்குவதற்கு, என்னைத் துன்புறுத்திய பகைவர்களிடம் மன
வலிமையின்றி உணவு வேண்டுமென்றுக் கேட்டதால்
அவர்கள் எனக்கு அளித்த நீர்போன்ற உணவை உண்ணும் நிலையில் உள்ளேனே!
இப்படி வாழ்வதற்காகவா இவ்வுலகில் என்னை என் பெற்றோர்கள் பெற்றனர்?
பகைவர் தந்த நீரை அருந்தாது இறந்து போனான் மாவீரன் இரும்பொறை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக