ஞாயிறு, 19 மார்ச், 2017

ஆய்தல் குத்துதல் ஆய்தம் ஆயுதம் வேர்ச்சொல்

aathi tamil aathi1956@gmail.com

பிப். 4
பெறுநர்: எனக்கு
Nakkeeran Balasubramanyam
யார் சொன்னது, ஆய்தம் என்பது தமிழில்லையென்று? ஆய் என்பதிலிருந்து
பிறந்தது ஆய்தம். ஆய்தல் என்றால் நுணுகுதல் என்று பொருள்.
மொழிமுதலாகாததால் உயிரெழுத்தாகக் கொள்ளப்படாது, ஆனால் உயிர் ஏற இடம்
தந்து, உயிர்மெய்யெழுத்தாகவும் கொள்ளப்படாத இந்த எழுத்து, ஓசையினிமை
கருதி நுணுகி (அஃகி) ஒலிப்பதால் 'ஆய்த எழுத்து' எனப்பட்டது.
அதேபோல் 'ஆய்' என்றால் அஃகுதல் எனும் நுணுகுதல், சிறுத்தல், கூர்மையாதல்
என்றெல்லாம் பொருளுண்டு. நுணுகக் கூர்மையாக்கப்பட்ட கத்தி அல்லது
படைக்கலம் அத்தனையும் ஆய்தம் எனப்பட்டது.
வத்தேறி மொழியில் ஆ + யுத் (யுத்தம்), அதாவது யுத்தம் எனும் போர்
புரிவதற்கான படைக்கலம் எனும் பொருளில் கூறுகின்றனர். அனால் இதில் 'ஆ'
என்பது ஆய் எனும் கூர்மையைக் குறித்த தமிழ்ச் சொல்லே. ஆய்தல் என்றால்
குத்துதல் எனும் பொருளுமுண்டு. ஆய்வது, அதாவது குத்துவது ஆய்தம்
எனப்பட்டது. ஆக, தமிழைக்கொண்டுதான் சமற்கிருதத்தையே
(ச)அமைத்திருக்கின்றனர் என்பது தெளிவாகிறதன்றோ?
வீணாக 'ஆயுதம்' என்று கூறி, ஆ + யுத்தம் எனும் வந்தேறி மொழிவழியைப்
பின்பற்றாதீர்கள், 'ஆய்தம்' எனும் தமிழ்வழியைப் பின்பற்றுங்கள். ஏனெனில்
தமிழே ஞால முதன்மொழி... ஏனையவை தமிழ் பெற்ற பிள்ளைகளே.
இப்படித் தமிழ்கொண்டு சமைத்துத் தன்னைத் தூய்மைப் படுத்திக்கொண்ட
மொழியால் தமிழைப் பேசுவது, பிள்ளைகளைக் கொண்டு அன்னையைப் புணரவிடுவது
போல...
# நற்றமிழறிவாய்_என்_தோழா
# எல்லாமே_தமிழ்தான்டா
# அதுதான்டா_தமிழ்
# இதுதான்டா_தமிழ்
# அதுகூடத்_தமிழ்தான்டா
# இதுகூடத்_தமிழ்தான்டா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக