திங்கள், 27 மார்ச், 2017

காதலர் தினம் தமிழ் பண்டிகை காமன் பண்டிகை

aathi tamil aathi1956@gmail.com

9/2/16
பெறுநர்: எனக்கு
************காதலர் திருவிழா என்ற காமன் பண்டிகை**************
==============================
============== ===========
2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் காதல் விழா கொண்டாடினார்கள்.
காவிரிப் பூம்பட்டினம், மதுரையிலும், சேர நாட்டிலும் கொண்டாட பட்டது.
சோழன் செம்பியன் (கி.மு 3-ம் நூற்றாண்டுக்கும் முந்தியவன்) பொதியை
மலையில் குடிகொண்டிருந்த தமிழ் முனிவன் அகத்தியன் இட்ட ஆணையை ஏற்று,
காதல் திருவிழாவைக் கொண்டாடினான் என்று சங்க இலக்கியம் கூறுகிறது
வருடந்தோறும் இருபத்தெட்டு நாட்கள் காதல் திங்கள் விழாவாக விழாகோலம்
செய்து திருவிழா கொண்டாடினர்.
பங்குனித் திங்களுக்கு முன், மாசித் திங்கள் சித்திரை நாளில் விழாவிற்கான
கால்கொண்டு கொடியெடுத்துள்ளனர். பின்
பங்குனி மாதம் இருபத்தொன்பதில் சித்திரை நாளில் (சித்திரை விண்மீன் கூடிய
நன்னாளில்) நிறைவு பெற்றுள்ளது.
(இந்த மாசி மாசத்தில்தான் இன்றைய காதலர் தினமும் வருகிறது (பிப்ரவரி 14) )
அதுவே பின் நாட்களில் இந்திரவிழாவாகவும் பின் காமன் பண்டிகையாகி இன்று
காமாண்டி விழாவக கிராமங்களில் கொண்டாடபடுகின்றது.
அகநானூறு 45, 76, 135, 222, 236, 376
கரிகால் வளவன் மகள் ஆட்டனந்தி, ஆதிமந்தி என்னும் சேரனிடம் காதல்
கொண்டாள். அவர்கள் இருவரும் காவிரிப்பூம் பட்டினத்தில் காதல்
திருவிழாவின் போது நீராடிக் கொண்டிருந்தனர். அப்போது, ஆதிமந்தியை காவிரி
ஆற்றுநீர் அடித்துச் சென்றது. ஆதிமந்தியைத் தேடிய ஆட்டனந்தி, காவிரி
நதிக்கரை வழியே தேடிச் சென்றாள். அவள் தேடிச் சென்றபோது, காமனுக்கு
வில்விழா நடந்து கொண்டிருந்தது என்று ஆதிமந்தி தன் பாடலில்
குறிப்பிடுகின்றாள்.
ரோமில் காதலர் தினம் கி.பி 3ம் நூற்றாண்டில் இருந்துதான் கொண்டாடப்பட்டது .
ஆனால் பண்டைத் தமிழகத்தில் 2500 ஆண்டுகளுக்கு முன்பே (கி.மு 5ம்
நூற்றாண்டுக்கு முன்பே) இந்திர விழா (காதல் விழா, காமன் விழா) என்ற
பெயர்களில் காதலர் தினம் கொண்டாடப்பட்டிருந்திருக்கிறது.
பூம்புகாருக்கு வர்த்தகம் செய்ய வந்த ரோமானியர்கள் அதை ரோமில்
ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
நன்றி : நிலாப் பெண்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக