சனி, 25 மார்ச், 2017

சிங்கப்பூர் கனடா தமிழ் விழா புலம்பெயர் தமிழர்

aathi tamil aathi1956@gmail.com

29/3/16
பெறுநர்: எனக்கு
Rajkumar Palaniswamy
வரும் ஏப்ரல் மாதம் சிங்கையில் தமிழ் மொழி மாதமாக கொண்டாடப்படுகிறது. சில
ஆண்டுகளுக்கு முன்னாள் ஒருவார காலம் தமிழ் வாராமாக சிங்கையில்
கொண்டாடப்பட்டது. பிறகு தமிழர்களின் தீவிர முயற்சியால் இப்போது ஒரு மாத
காலம் தமிழ் மொழி விழா அங்கு அரசின் உதவியோடு கொண்டாடப்படுகிறது.
இதே போல தை மாதம் முழுவதும் தமிழுக்கான மாதமாக கனடாவில்
கடைப்பிடிக்கப்படுகிறது. இதுவும் தமிழர்களின் தீவிர முயற்சியால்
சாத்தியமானது.
ஆனால் தமிழின் பிறப்பிடமான தாய் தமிழகத்தில் தமிழுக்கான மாதமோ வாரமோ
கடைப்பிடிக்கப் படுவதில்லை என்பது உலகத்தமிழர்களுக்கு மிகுந்த வேதனை
அளிக்கக்கூடிய விடயம். தமிழகத்தை இது வரை ஒரு தமிழர் கட்சி ஆட்சி செய்யாத
காரணத்தினாலேயே தமிழ் மொழி தன்னுடைய தனிச்சிறப்பை தமிழகத்தில் நிலைநாட்ட
முடியாமல் போனது என்பது கசப்பான உண்மை.
தமிழ் மொழிக்கான ஒரு மாதம் தமிழகத்தில் உருவாகும் நாள் உலகமே தமிழகத்தை
உற்று நோக்கும் என்பதில் ஐயமில்லை. அந்நாளுக்காக நாம் அனைவரும்
காத்திருப்போம். தமிழர் ஆட்சியை தமிழகத்தில் மலரச்செய்குவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக