செவ்வாய், 21 மார்ச், 2017

குமரி வட்டார சொற்கள்

சேரன் பாண்டியன்
தம்பி கபிரியேலுக்கு நன்றி !! குமரி மாவட்டத்து ஊர்க்காட்டு பேச்சும்
சொல் வழக்கூறும் !! அங்கோட்டு- அங்கே
இஞ்ச - இங்கே
சுண்டு - உதடு
தாகோலு-சாவி
தெங்கு -தேங்காய்
நோவு - வலி
பதுக்க, பைய , பதமா -மெல்ல ,
செற -எரிச்சல்
இம்படம் -- இவ்வளவு ,
படக்கு - பட்டாசு
வெரவு -பிசைந்து
மட்டுபாவு -மாடி
முக்கு -மூலை
முடுக்கு - சந்து
எல்லு ,விலா -எலும்பு
ஒடக்கு -திட்டுதல்
இரி - இரு
விசர்ப்பு - வியர்வை
உப்புக்குத்தி- கணுக்கால்
தாறா - வாத்து
பீயாத்தி-கத்தி
கொய்வு -கொசு
பெறம -பின்னால்
பெறந்தல -பின்தலை
கச்சி -கோலிக்குண்டு
பெர , முறி -அறை
சொக்காரன்-பங்காளி
வெப்ராளம்-மனப்புழுக்கம்
யாம்ப்ல - ஏன்டா
போல - போடா
வால - வாடா
கெடல - படுடா
ஓடுல - ஓடுடா
தோர்து -துண்டு !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக