ஞாயிறு, 19 மார்ச், 2017

மெரீனா தீப்பொறிகள் யார் சல்லிக்கட்டு ஏறுதழுவுதல் போராட்டம்

aathi tamil aathi1956@gmail.com

ஜன. 23
பெறுநர்: எனக்கு
Kannan Mahalingam
மெரினா புரட்சி- யார் மூலம், எப்படி தொடங்கியது?
சென்னையில் இதுவரை கண்டிராத அளவுக்கு மெரினா கடற்கரையில் தானாகத் திரண்ட
இளைஞர் கூட்டத்தின் எழுச்சி,ஒரே ஒரு முகநூல் பதிவு மூலமே உண்டானது. "நா
போகப் போறேன், யாரு வர்றீங்க' என 16ஆம் தேதி இரவு 2 மணி 28 நிமிடத்திற்கு
அது பதிவானது.
"சென்னைவாசிகள் கவனத்திற்கு : இன்று (17-1-17) மெரினா வில் விவேகானந்தர்
இல்லம் அருகே கூடுவோம் பெருந்திரளாக காலை 8 மணியளவில்' என்கிற முகநூல்
செய்தியில் சுரேஷ், குண சீலன், ஆனந்தன் ஆகியோரது செல்பேசி எண்கள்.
"ஜல்லிக்கட்டுக் கான நீதி தேடும் அமைப்பு' என்ற பெயரில்
வெளிவந்திருந்தது.
அலங்காநல்லூரில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நீதி
கேட்கவும், ஜல்லிக்கட்டு எனும் தமிழர் விளையாட்டுக்கான உரிமை கோரவும்
இதுதான் தொடக்கமாக இருந்தது. சினிமாவில் புதுமுக நடிகரான மாணவர் ஹரி,
சென்னை மீம் கிரியேட்டர்ஸ் என்கிற அமைப்பைச் சேர்ந்த மாத்யூ என்கிற
கிறிஸ்துவ இளைஞன், ராம்லா என்கிற இஸ் லாமிய இளைஞன், தேவி என்கிற மாணவி
ஆகிய நான்கு பேர்தான் சாதி-மத அடையாளங்களைக் கடந்து, தமிழர் என்ற
உணர்வுடன் முதன்முதலில் விவேகானந்தர் இல்லத்தில் கூடுமாறு அழைப்பு
விடுத்தவர்கள். இவர்களின் முகநூல் அழைப்பைத்தான் தங்களது தொலைபேசி
எண்களோடு சுரேஷ், குணசீலன், ஆனந்தன் ஆகியோர் பரப்பினார்கள்.
இவர்களுக்கு கண்ணன், வெங்கட் ஆகியோர் துணைசெய்தார்கள். இந்த 10 பேர்
குழுதான் லட்சம் பேர் மெரினாவில் கூடுவதற்குக் காரணமாக அமைந்தது
என்கிறார்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள். ஆனால் இவர்களின் அழைப்பை
ஏற்று மெரினாவில் கூடியது 30 பேர் மட்டுமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக