ஞாயிறு, 19 மார்ச், 2017

கருணாநிதி கு சிலை ஈவேரா தமிழர் ஆட்சி என்று புகழாரம்

aathi tamil aathi1956@gmail.com

8/11/16
பெறுநர்: எனக்கு
டாக்டர் கலைஞர் அவர்களுக்கு சிலை வைக்கவேண்டும் - தெலுங்கர் தந்தை ஈவெரா
போர்முழக்கம்..
தமிழராட்சியை கொண்டுவந்தவருக்
கு சிலை வைப்பதில் என்ன தவறு? பொதுமக்கள் பாராட்டும் காரியத்தை
செய்தவருக்கு பயனடைந்த பொதுமக்கள் அவரை பெருமைப்படுத்த முயற்சிப்பது
இயற்கையாகும்.
அதிலும் கலைஞர் அவர்கள் பாராட்டும் பல தன்மைகள் கொண்டவர். பள்ளி பருவத்திலிருந்த
ு இன்று 45 வயது வரை மக்களுக்கு பொதுத்தொண்டு புரிந்தவர். தியாகியாக
பலமுறை சிறைசென்றவர். கட்சி ஆரம்பித்து முக்கியஸ்தராய் அக்கட்சியை பலமான
காங்கிரசை எதிர்த்து தோற்கடித்த கலைஞருக்கு பொதுமக்கள் சிலை வைக்க
முயன்றால் அது விவாதத்திற்குரி
யதா?
அப்படி பார்த்தால் இன்றுள்ள எல்லா சிலைகளும் உடைத்து எறியவேண்டியவையே.
கலைஞருக்கு சிலை வைப்பது என்பது தமிழனை பாராட்டுவதும், தமிழ் மக்கள் பின்
சந்ததிக்கு நினைவூட்டும் அறிகுறியுமாகும். கலைஞர் அறிவில் சிறந்தவர்.
நிர்வாகத்தில் சிறந்தவர். கலைஞர் சிலையை நிறுத்தியாக வேண்டும். யார்
தடுத்தாலும் பொதுமக்கள் நடத்தியாக வேண்டும். அண்ணாவும் இதற்கு இடையூறாக
இல்லாமல் கலைஞருக்கு சிலைவைத்து தமிழர் மானத்தை காக்க வேண்டும்.
கலைஞருக்கு சிலைவைப்பது தனி நபர் விஷயமல்ல, அது தமிழர்களின் தன்மானமாகும்.
28.5.1968
விடுதலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக