ஞாயிறு, 19 மார்ச், 2017

போர்த்துகீசியர் நல்லவர் கிடையாது அடிமைமுறை மூர் பரதவர் மோதல் அடிமை தூத்துக்குடி

aathi tamil aathi1956@gmail.com

பிப். 24
பெறுநர்: எனக்கு
Rachinn Rachinn Rachinn
இஸ்லாமியர்களின் (மூர்களின்) ஆதிக்கத்தில் இருந்து தப்பிக்கும்வகையில்
போராடிக் கொண்டிருந்த நெய்தல் மக்கள் போர்ச்சுகீசியர்களின் உதவியை
நாடினர். விலையாக மதமாற்றம் கோரப்பட்டது.ஒரேநாளில் பரதவர்களின்
பெரும்பகுதியும் மதம் மாறியது. ஆனால், போர்ச்கீசியர்கள
ின் செயல்பாடுகள் எப்படிப்பட்டதாக இருந்தது? .கோவா இன்றும் சாட்சியாக
உள்ளது. தமிழகத்திலும் பதிவுகள் கிடைக்கின்றன.
Òமதுரை நாயக்கர்களின் ஆளுகையில் இருந்த கடற்கரைப் பகுதிகளில் கி.பி.1533
தொடங்கி 1658 வரை போர்ச்சுக்கீசியர்களின் ஆதிக்கம் நிலவியது.இவர்கள்
அடிமை வாணிபத்திலும் ஈடுபட்டனர்.இது குறித்து வெனான்சியஸ் (1977:244)
பின் வருவமாறு குறிப்பிட்டுள்ளார்.
ஆண் பெண் அடிமைகளை செம்மறி ஆடுகளைப்போல் வாங்கும் கொடிய பழக்கம் போர்ச்சுகீசியர்
களிடம் இருந்தது. இளம்பெண்களை விலைக்கு வாங்கி அவர்கள் அனைவரையும் அனுபவித்துவிட்ட
ு,பின்னர் விற்று விடும் பழக்கம் போர்ச்சுகீசியர் பலரிடம் இருந்தது.
திருமணமானவர்கள் கூட நான்கு,எட்டு,பத்து என பெண்ணடிமைகளை
வைத்திருந்ததுடுன் அப்பெண்களுடன் உறங்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர். இது
வெளிப்படையாக தெரிந்த ஒன்று என நிக்கோலா வான்சிட்ட என்ற கத்தோலிக்கத்
துறவி 1550 டிசம்பரில்,சேசு சபையின் நிறுவனர் இக்னேஷியஸ் லயோலாவுக்கு
எழுதிய கடிதங்களில் குறிப்பிட்டுள்ளார்.
அப்பாவி அடிமை இளம்பெண்களை அவர்களின் விருப்பத்திற்கு எதிராக
சிறைபிடித்து அவர்கள¬ அனுபவித்துவிட்டு, இந்து மற்றும் இஸ்லாமிய
வணிகர்களுக்கு விற்றுவிடும் வெறுக்கத்தக்க குற்றத்தை முத்துக்
குளித்துறைப் போர்ச்சுக்கீரியர் மேற்கொண்டனர். போர்ச்சுக்கீசியரின்
இச்செயலை சவேரியார் தமது கடிதம் ஒன்றில் கண்டித்துள்ளார்.
(ஆ.சிவசுப்பிரமணியன், தமிழகத்தில் அடிமைமுறை, காலச்சுவடு பதிப்பகம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக