|
21/10/16
![]() | ![]() ![]() | ||
Kanchiamuthan Yoganathan
தொல்காப்பியத்தின் காலம் கி மு 1500...
நிலந்தரு திருவில் பாண்டியன் அவையத்து,
அறம்கரை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து,
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி,
மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப் பியன்எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த பழமையோனே....
------------------------------ ------------தொல
்காப்பியம்-பாயிரம்.
அறமே கூறும் நாவினை உடைய அதன்கோட்டு ஆசான் நான்கு மறைகளையும்
கற்ற்றிந்தவர் என்று தொல்காப்பியப் பாயிரத்தில் பனம்பாரனார்
குறிப்பிடுகின்ற
ார்.இங்குக் குறிப்பிடப்படும் நான்கு மறைகள்- இருக்கு வேதம்,யசுர் வேதம்,சாமவேதம்,
அதர்வ வேதம் என்ற- நான்கு வேதங்கள்அல்ல என்று தொல்காப்பியத்திற்கு உரை
எழுதிய நச்சினார்க்கினியர் சுட்டிக்காட்டுகின்றார்.பனம்பார
னார் கூறும் நான்கு மறைகள் தைத்திரியம்,பெளடிகம்,தலவகாரம்,
சாமவேதம் என்பவை யாகும் என்றும் நச்சினார்க்கினியர்
தெரிவிக்கின்றார்.மேலும் அவர் தொல்காப்பியத்திற்குப் பின்புதான் வியாசர்
வேதங்களைத் தொகுத்தார் என்றும் கூறுகின்றார் [ஆ -ம் -தொல்காப்பியம்
-எழுத்ததிகாரமும் நச்சினார்க்கினியார் உரை,அனைத்துலகத் தமிழ் ஆய்வு
நிலையம்,சென்னை.பக்கம் 11 2007] எனவே,இருக்கு வேதம் உள்ளிட்ட வேதங்களின்
காலம் தொல்காப்பியத்திற்கு பிந்தியது தான்.கி மு பதினான்காம்
நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் தென்னிந்தியாவில் இருக்கு வேதம்
பாடல்கள் மறையாகச் சேர்க்கப்பட்டு ,எழுதப்பட்டுத் தொகுக்கப்பட்டன
அதுவரையில் [இருக்கு வேதம்] எழுதப்படாமல்,இக்கால இந்தியாவில் இன்றும் சில
அறிஞர்கள் செய்வது போல் ,வரிக்குவரி மனப்பாடமாக ஒப்புவிக்கப்பட்டு வந்தது
என்று டி டி கோசாம்பி கூறுகின்றார்.[ஆ-ம்,D D Kosambi,op.cit,p78]
இக்கூற்று கி மு பதினான்காம் நூற்றாண்டுக்கு முன்பு தொல்காப்பியம்
எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்தை உறுதி செய்கின்றது.
.............................. .............தொல்காப்பியப் பொருளாதிகாரம்
நூற்பா 88-இல் கூறப்பட்டுள்ள கொடிநிலை,கந்தழி
,வள்ளி ஆகியன,'பண்டைக்காலத் தமிழ்நாட்டு மக்கள் வழிபட்டு வந்த
சீரியன்,நெருப்பு,சந்திரன்ஆகியவ
ற்றைக் குறிப்பதாக சில அறிஞர்கள் கருதுகின்றனர்'என்று சி இலக்குவனார்
தெரிவிக்கின்றார்.[ஆ-ம்,S. IIakkuvanar,op.cit,p 482] 'கொடி நிலை, கந்தழி,
வள்ளி எனும் மூன்றும் தந்திர வழிபாட்டுக்குறி
யன என்பதையும், அவை முறையே சிந்துவெளி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டப்
பெற்ற லதாசாதனம்[ லதா-கொடி,சாதனம்-நிலை] இலிங்கம்,பகயாகம் எனும் சகம்பரி
[ஆறு வகையான செல்வங்களை வழங்கும் வள்ளன்மை மிக்க தந்திர சடங்கு] எனவும்
அடையாளம் காணப்பட்டுள்ளன.
சிந்துவெளி எழுத்து முறை பற்றி ஆராய்ந்த உருசிய [Russia] நாட்டு
அறிஞர்கள் ,அவ் வெழுத்து முறை தொல்காப்பியர் காட்டும் இலக்கண அமைதியோடு
மட்டுமே பொருந்துகிறது என்று உறுதி செய்துள்ளனர்.' என்பதைச் சுட்டிக்
காட்டும் க.நெடுஞ்செழியன். இவைகளையே சான்றாக்க் கொண்டு ,தொல்காப்பியம்
சிந்துச் சமவெளி நாகரீகத்தின் கடைசிக் கட்டத்தை,அதாவது கி மு 1500 ஐச்
சேர்ந்தது என்று கூறுகின்றார். [ஆ- ம்,க. நெடுஞ்செழியன்,த
ொல்காப்பியம்
-திருக்குறள்;காலமும் கருத்தும்,பாலம்,சென்னை,2010,பக
்கம்,32,33].
பாண்டியர் தலைநகர் கபாடபுரத்தில்,
நிலந்தருதிருவிழாவிற் பாண்டியன் அவையில் அதங்கோட்டு ஆசான் உட்படப்
புலவர்கள் பலர் முன்னிலையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டதாக அதன்
பாயிரத்தில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
எனவே,கபாடபுரத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த இரண்டாம் தமிழ்ச்
சங்கத்தின் கடைசிக்காவத்தில் தான் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது
என்பதைத் தமிழறிஞர்கள் பலரும் ஏற்றுக் கொள்கின்றனர்.ற்கனவே இரண்டாம்
இயலில் தெரிவிக்கப்பட்ட
ுள்ளதைப் போல் சுமார் கி மு 1500 இல் கபாடபுரம் கடலுக்குள்
மூழ்கிப்போனது. எனவே, தொல்காப்பியம் கி மு 1500 இல் எழுதப்பட்டது என்று
முடிவு செய்யலாம்.....
ஆதாரம்.முனைவர் அ.இராமசாமி எழுதிய தொன்மைத் தமிழர் நாகரிக
வரலாறு..பக்பம்70,73,74,110
தொல்காப்பியத்தின் காலம் கி மு 1500...
நிலந்தரு திருவில் பாண்டியன் அவையத்து,
அறம்கரை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து,
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி,
மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப் பியன்எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த பழமையோனே....
------------------------------
்காப்பியம்-பாயிரம்.
அறமே கூறும் நாவினை உடைய அதன்கோட்டு ஆசான் நான்கு மறைகளையும்
கற்ற்றிந்தவர் என்று தொல்காப்பியப் பாயிரத்தில் பனம்பாரனார்
குறிப்பிடுகின்ற
ார்.இங்குக் குறிப்பிடப்படும் நான்கு மறைகள்- இருக்கு வேதம்,யசுர் வேதம்,சாமவேதம்,
அதர்வ வேதம் என்ற- நான்கு வேதங்கள்அல்ல என்று தொல்காப்பியத்திற்கு உரை
எழுதிய நச்சினார்க்கினியர் சுட்டிக்காட்டுகின்றார்.பனம்பார
னார் கூறும் நான்கு மறைகள் தைத்திரியம்,பெளடிகம்,தலவகாரம்,
சாமவேதம் என்பவை யாகும் என்றும் நச்சினார்க்கினியர்
தெரிவிக்கின்றார்.மேலும் அவர் தொல்காப்பியத்திற்குப் பின்புதான் வியாசர்
வேதங்களைத் தொகுத்தார் என்றும் கூறுகின்றார் [ஆ -ம் -தொல்காப்பியம்
-எழுத்ததிகாரமும் நச்சினார்க்கினியார் உரை,அனைத்துலகத் தமிழ் ஆய்வு
நிலையம்,சென்னை.பக்கம் 11 2007] எனவே,இருக்கு வேதம் உள்ளிட்ட வேதங்களின்
காலம் தொல்காப்பியத்திற்கு பிந்தியது தான்.கி மு பதினான்காம்
நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் தென்னிந்தியாவில் இருக்கு வேதம்
பாடல்கள் மறையாகச் சேர்க்கப்பட்டு ,எழுதப்பட்டுத் தொகுக்கப்பட்டன
அதுவரையில் [இருக்கு வேதம்] எழுதப்படாமல்,இக்கால இந்தியாவில் இன்றும் சில
அறிஞர்கள் செய்வது போல் ,வரிக்குவரி மனப்பாடமாக ஒப்புவிக்கப்பட்டு வந்தது
என்று டி டி கோசாம்பி கூறுகின்றார்.[ஆ-ம்,D D Kosambi,op.cit,p78]
இக்கூற்று கி மு பதினான்காம் நூற்றாண்டுக்கு முன்பு தொல்காப்பியம்
எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்தை உறுதி செய்கின்றது.
..............................
நூற்பா 88-இல் கூறப்பட்டுள்ள கொடிநிலை,கந்தழி
,வள்ளி ஆகியன,'பண்டைக்காலத் தமிழ்நாட்டு மக்கள் வழிபட்டு வந்த
சீரியன்,நெருப்பு,சந்திரன்ஆகியவ
ற்றைக் குறிப்பதாக சில அறிஞர்கள் கருதுகின்றனர்'என்று சி இலக்குவனார்
தெரிவிக்கின்றார்.[ஆ-ம்,S.
வள்ளி எனும் மூன்றும் தந்திர வழிபாட்டுக்குறி
யன என்பதையும், அவை முறையே சிந்துவெளி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டப்
பெற்ற லதாசாதனம்[ லதா-கொடி,சாதனம்-நிலை] இலிங்கம்,பகயாகம் எனும் சகம்பரி
[ஆறு வகையான செல்வங்களை வழங்கும் வள்ளன்மை மிக்க தந்திர சடங்கு] எனவும்
அடையாளம் காணப்பட்டுள்ளன.
சிந்துவெளி எழுத்து முறை பற்றி ஆராய்ந்த உருசிய [Russia] நாட்டு
அறிஞர்கள் ,அவ் வெழுத்து முறை தொல்காப்பியர் காட்டும் இலக்கண அமைதியோடு
மட்டுமே பொருந்துகிறது என்று உறுதி செய்துள்ளனர்.' என்பதைச் சுட்டிக்
காட்டும் க.நெடுஞ்செழியன். இவைகளையே சான்றாக்க் கொண்டு ,தொல்காப்பியம்
சிந்துச் சமவெளி நாகரீகத்தின் கடைசிக் கட்டத்தை,அதாவது கி மு 1500 ஐச்
சேர்ந்தது என்று கூறுகின்றார். [ஆ- ம்,க. நெடுஞ்செழியன்,த
ொல்காப்பியம்
-திருக்குறள்;காலமும் கருத்தும்,பாலம்,சென்னை,2010,பக
்கம்,32,33].
பாண்டியர் தலைநகர் கபாடபுரத்தில்,
நிலந்தருதிருவிழாவிற் பாண்டியன் அவையில் அதங்கோட்டு ஆசான் உட்படப்
புலவர்கள் பலர் முன்னிலையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டதாக அதன்
பாயிரத்தில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
எனவே,கபாடபுரத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த இரண்டாம் தமிழ்ச்
சங்கத்தின் கடைசிக்காவத்தில் தான் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது
என்பதைத் தமிழறிஞர்கள் பலரும் ஏற்றுக் கொள்கின்றனர்.ற்கனவே இரண்டாம்
இயலில் தெரிவிக்கப்பட்ட
ுள்ளதைப் போல் சுமார் கி மு 1500 இல் கபாடபுரம் கடலுக்குள்
மூழ்கிப்போனது. எனவே, தொல்காப்பியம் கி மு 1500 இல் எழுதப்பட்டது என்று
முடிவு செய்யலாம்.....
ஆதாரம்.முனைவர் அ.இராமசாமி எழுதிய தொன்மைத் தமிழர் நாகரிக
வரலாறு..பக்பம்70,73,74,110

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக