|
18/8/16
| |||
தேசிய நதிநீர் இணைப்பு திட்டம்
நீர் என்ற தண்ணீர்...
."தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்."
மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும்
தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும் எனும் அய்யன்
வள்ளுவரின் குறளுடன் இந்த பதிவை துவங்குகிறேன்.
முன்னுரை
தண்ணீர்(water) என்பது H2O என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு சேர்மம்
ஆகும். நீர் மூலக்கூறு ஒன்று ஒரு ஆக்சிசன், மற்றும் இரண்டு
நீரகம்(Hydrogen) அணுக்களை சகப் பிணைப்பு மூலம் கொண்டுள்ளது. எங்கும்
நிறைந்த அது உலக உயிரினங்களின் உய்விற்கு மிக அவசியமான ஒன்றாகும். திட்ட
வெப்பழுத்தத்தில் நீர் ஒரு திரவம் ஆக இருந்தாலும், இது புவியில் திட
வடிவில் பனியாகவும், மற்றும் வளிம வடிவில் நீராவி ஆகவும் காணப்படுகிறது.
உலகத்தின் நீரில் பெருமளவு விண்மீன்கள் உருவாதலின் துணைப் பொருளாக
விளைந்திருக்கலாம். விண்மீன்களின் தோற்றத்தின் போது, அவற்றின் பிறப்பு
வலிமையான வெளிநோக்கு வளிக்காற்று மற்றும் புழுதிப் புயலால்
சூழப்பட்டிருக்கிறது. இத்தகைய வெளியேற்றம் நாளடைவில் சூழ்ந்திருக்கும்
வாயுக்களைத் தாக்குவதனால் உருவாகும் அதிர்வலைகள் வாயுக்களை அழுத்தி
வெப்பமேறச் செய்கிறது. அவ்வமயம் தென்படுகிற நீரானது இந்த வெப்பச் செறிவான
வாயுக்களால் அதிவேகமாக உற்பத்தி செய்யப்பட்டதாகு
ம்.பால்வெளியெனும் நமது விண்மீன் மண்டலத்தினுள் காணப்படும் நட்சத்திரங்களுக
்கிடையேயான மேகங்களில் தண்ணீர் கண்டறியப்பட்டுள்ளது. நீரின் கூறுகளான
ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை பிரபஞ்சத்தில் மிகுதியாகக் காணப்படும்
தனிமங்களாதலால், ஏனைய விண்மீன்மண்டலங்களிலும் தண்ணீர் மலிந்திருக்கிறதென
நம்பப்படுகிறது. நட்ச்த்திரங்களு
க்கிடையேயான மேகங்கள் நாளடைவில் சூரிய ஒளிமுகிலாகவும், சூரிய
மண்டலமாகவும் சுருங்குகின்றன.
புவிப் பரப்பின் 71% பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது. புவியின் தண்ணீரில்
பெரும்பகுதி சமுத்திரங்கள், ஏனைய பரந்த நீர்நிலைகளிலும், சுமார் 1.6%
பகுதி நிலத்தடி நீர்கொள் படுகைகளிலும் காணப்படுகிறது. வளி மண்டல நீரின்
0.001% பகுதி வாயு வடிவிலும், காற்றில் மிதக்கும் திட மற்றும் திரவ
துகள்களால் உருவாகும் மேகங்களிலும், காற்றின் நீராவி குளிர்ந்து
சுருங்குவதால் ஏற்படும் நீர்க்கோர்வைகளிலும் காணப்படுகிறது. நில மேலோட்ட
நீரின் 97% பகுதி உவர்நீர்ச் சமுத்திரங்களிலும், 2.4% பனி ஆறுகள் மற்றும்
துருவ பனிக்கவிகைகளிலும், 0.6%பகுதி ஏனைய நிலமேலோட்ட நீர் நிலைகளான
ஆறுகள், ஏரிகள், குளம் குட்டைகளிலும் காணப்படுகிறது. புவியின் தண்ணீரில்
ஒரு சிறிய அளவு உயிர்களின் உடல்களிலும், உற்பத்தி செய்யப்பட்ட
பொருட்களிலும் காணப்படுகிறது. ஏனைய நீர் துருவ பனிக்கவிகைகளிலும், பனி
ஆறுகளிலும், நீர் கொள் படுகைகளிலும், ஏரிகளிலும் சிறைபட்டனவாகவும்
சிலநேரம் புவியின் உயிரினங்களுக்கான நன்னீராதாரமாகவும் காணப்படுகின்றன.
புவியின் உயிர்களது ஜீவாதாரமாக தண்ணீரும், ஓரளவு முக்கியத்துவம்
வாய்ந்தனவாக நீரின் வாயு மற்றும் திட வடிவங்களும் திகழ்கின்றன என்பது
நாம் அனைவரும் அறிந்ததே. பூமி சூரிய மண்டலத்தின் வசிக்கத்தக்க
மண்டலத்தில் அமைந்துள்ளது. ஒருவேளை பூமியானது சூரியனுக்கு சிறிது
அருகாமையிலோ (5 % அல்லது 8 மில்லியன் கிலோமீட்டர்கள் தொலைவில்), அல்லது
தொலைவிலோ இருக்கும் பட்சத்தில் நீரின் மூன்று வடிவங்களும் தற்போதிருப்பது
போல் ஒருசேர காணப்படுவதற்கான வாய்ப்புகள் கடினம்.கோள்களில் இருக்கும்
நீரின் வடிவம் அதன் புவியீர்ப்பு சக்தியால் தீர்மானிக்கப்படும் வளிமண்டல
அழுத்தத்தைப் பொறுத்தே அமைகிறது.கோளானத
ு போதுமான அளவு பெரியதாயிருக்கும் பட்சத்தில் அதன் புவியீர்ப்பு
சக்தியால் நிர்ணயிக்கப்படும் அழுத்தமானது அதிக வெப்பங்களில் கூட அதன்
நீர் திட நிலையிலிருக்கும்படி செய்கிறது.
புவியில் நீர்
கிரகங்களின் பரப்பிலும், அவற்றின் மேற்பரப்புக்கு கீழும், மேலும்
காணப்படும் மொத்த நீர்த்தொகுதி நீர்ம மண்டலம் என்றழைக்கப்படுக
ிறது.பூமியின் உத்தேச மொத்த நீர்க் கொள்ளளவு 1,360,000,000 கி.மீ 3
(326,000,000 மில்லியன் 3)கன அடிகள். இம் மொத்தக் கொள்ளளவில்:
1,320,000,000 கி.மீ3 (316,900,000000 000 மில்லியன்3கன அடிகள் அல்லது
97.2%) சமுத்திரங்களில் உள்ளது .
25,000,000 கி.மீ3 (6,000,000 மில்லியன்3 அல்லது 1.8%) உறை பனி
ஆறுகளிலும், பனிக் கவிகைகளிலும் மற்றும் பனிப் படலங்களிலும் உள்ளது.
13,000,000 கி.மீ3 (3,000,000 மில்லியன்3 அல்லது 0.9%) நிலத்தடி நீராகும்.
250,000 கி.மீ3 (60,000 மில்லியன்3 அல்லது 0.02%) ஏரிகள், உள்நாட்டு
கடல்கள் மற்றும் நதிகளின் நன்னீராகக் காணப்படுகிறது.
13,000 கி.மீ3 (3,100 மில்லியன்3 அல்லது 0.001%) குறித்த கால வளிமண்டல
நீராவியாகக் காணப்படுகிறது.
நிலத்தடி நீரும், நன்னீரும், மனிதர்களுக்கு உபயோகமுள்ள அல்லது உபயோக
சாத்தியமுள்ள நீராதாரங்களாகும்.
தண்ணீரானது சமுத்திரங்கள், கடல்கள், ஏரிகள், நதிகள், நீரோட்டங்கள்,
கால்வாய்கள், குளங்கள், குட்டைகள் போன்ற நீர் நிலைகளில்
காணப்படுகிறது.பூமியில் பெருமளவு காணப்படும் நீர் கடல்நீர்
ஆகும்.வளிமண்டலத்தில் திட, திரவ மற்றும் வாயு வடிவங்களிலும், நீர்
காணப்படுகிறது.நிலத்தடி நீர்கொள் படுகைகளாகவும் நீர் காணப்படுகிறது.
நீரின் சுழற்சி என்பது நீர்க்கோளத்தினுள், வளிமண்டலம், நிலநீர், மேலோட்ட
நீர், நிலத்தடி நீர், மற்றும் தாவரங்கள் ஆகியவற்றிற்கிடையேயான நீரின்
தொடர் பரிமாற்றமாகும்.
சமுத்திரங்கள் மற்றும் ஏனைய நீர்நிலைகளிருந்து, வளிமண்டலத்தினுள்
ஆவியாகும் நீர் மற்றும் நிலத்தின் தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து
காற்றினூடே செல்லும் நீராவிப்போக்கு. காற்றிலுள்ள நீராவி
குளிர்விக்கப்பட்டு பூமியிலோ அல்லது சமுத்திரங்களிலோ விழும் போது
ஏற்படும் குளிர்ந்து சுருங்கிய நீர்க்கோர்வைகள். நிலத்தினின்று
கடலுக்குள் வழிந்தோடும் தள ஓட்டம்.
நில மேற்பகுதியின் மேல் நீராவி குளிர்ந்து சுருங்குதலால் ஏற்படும்
நீர்க்கோர்வை, வருடத்துக்கு 107 Tt என்ற அளவில் பல வடிவங்களில்
வெளிப்படுகிறது: பொதுவாக மழை, உறைபனி, ஆலங்கட்டி மழை, போன்றவைகளாலும் சில
நேரங்களில் மூடு பனி மற்றும் பனித்துளிகளாக இது தோன்றலாம்.
குளிர்விக்கப்பட்ட நீரானது சூரிய ஒளிக்கற்றைகளை ஒளி
விலகலுக்குட்படுத்துவதன் மூலம் வானவில்லைத் தோற்றுவிக்கிறது
.
நாகரீகம் நதிகள் மற்றும் முக்கிய நீர்வழிகளை அடுத்து செழுமையாக இருந்ததாக
வரலாற்றுவழி அறிகிறோம். நாகரீகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும்
மெஸொப்படாமியா இரு முக்கிய நதிகளான டைக்ரிஸ் மற்றும் இயுஃப்ரட்டீஸ் இடையே
அமையப் பெற்றிருந்தது; எகிப்தியர்களின் பண்டைய சமூகங்கள் நைல் நதியை
முழுமையாக நம்பியிருந்தன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக