புதன், 22 மார்ச், 2017

1958 இலங்கை கலவரம் ஈழம்

aathi tamil aathi1956@gmail.com

27/5/16
பெறுநர்: எனக்கு
செந்தமிழினி
1958 மே 26 - ஈழத் தமிழர் வாழ்வில் மறக்க முடியாத கொடிய நாள். தமிழ்
மக்கள் மீதான இன வெறி கொண்ட தாக்குதல்கள் 'இனக்கலவரம்' என்ற பெயரில்
கொழும்புக்குப் பரவின.
தமிழரின் வீடுகள், கடைகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு பலர்
கொல்லப்பட்டனர். கடுக்கன் போட்ட காதுகள் பார்த்து தமிழர்கள்
தாக்கப்பட்டார்கள்.
இலங்கை தீவில் காலம் காலமாக தொடர்ந்து வரும் இனப்படுகொலைகள் வரிசையில் இன
அழிப்பு 1958 (1958 riots in Ceylon) என்பது இலங்கையில் சிறுபான்மையாக
வாழும் தமிழருக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட
்ட இலங்கை 1948 இல் பிர்த்தானியர் ஆட்சியில் இருந்து சிங்கள அரசின்
கைக்கு மாறிய பின் (விடுதலை (?) பெற்ற பின்னர்) நடத்தப்பட்ட முதலாவது
நாடு தழுவிய வன்முறை இன அழிப்பு ஆகும்.
இந்த இன அழிப்பு வன்முறைகள் 1958 மே 22 முதல் மே 27 வரை இடம்பெற்றன.
ஆனாலும், 1958 சூன் 1 இல் அவசரகாலச் சட்டம் அறிவிக்கப்பட்ட பின்னரும்
ஆங்காங்கே வன்முறைகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வு பொதுவாக இனக்கலவரம் என அழைக்கப்பட்டாலும் இதனை இன அழிப்பு
என்று கூறுவதே பொருந்தும். காரணம். தமிழ் மக்கள் அடிக்க அடிக்க அடி
வாங்கினார்கள். திருப்பி ஒற்றை சிங்கள மக்கள் மக்களை கூட எதிர்க்கவில்லை.
அடிக்கவில்லை.
இந்த கொடிய இன அழிப்பு நடவடிக்கையில் கொல்லப்பட்டவர்க
ளின் எண்ணிக்கை கண்டெடுக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கையைக் கொண்டு
மதிப்பிடப்பட்டு 70 முதல் 300 வரையென அறிவிக்கப்பட்டது.
இவ் இன அழிப்பு நடவடிக்கையில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர்
தமிழர்கள். ஆயினும், தமிழர்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்த காரணத்தினால்
சில சிங்களவர்களின் உடமைகளும் சேதமாக்கப்பட்டன.
1956 ஆம் ஆண்டில் சாலமன் பண்டாரநாயக்கா பெரும்பான்மை சிங்களமயமாக்கம்
என்ற கொள்கையின் அடிப்படையில் இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்றினார்.
சிங்களப் பேரினவாதம் நாட்டின் ஒரே ஆட்சிமொழியாக அறிவித்து தனிச் சிங்களச்
சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியது.
அக்காலத்தில் இலங்கையின் கால்வாசிக்கும் அதிகமானோர் தமிழ் பேசுபவர்களாக இருந்தனர்.
தனிச் சிங்கள சட்டம் தமிழ் மக்கள் வாழ்வில் மறக்க முடியாத பேரழிவாக அமைந்தது.
தமது, மொழி, கலாச்சாரம், பொருளாதார நிலை பாதிக்கப்பட்டதால் தமிழ் மக்கள்
தனிச் சிங்கள சட்டத்திற்கு எதிராக அறவழிப் போராட்டத்தை மேற்கொண்டார்கள்.
தனிச் சிங்களச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கைத் தமிழரசுக்
கட்சி அரசியல்வாதிகள் அறப்போராட்டத்தை ஆரம்பித்தனர். இதனால்
இனங்களுக்கிடையே முறுகல் நிலை அதிகரித்தது. இலங்கையின் கிழக்கே கல்லோயா
நகரில் 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழ் மக்களுக்குள்
போர்குணம் எழுச்சியாக வெடிக்க ஆரம்பித்தது.
இதனை அடுத்து பிரதமர் பண்டாரநாயக்கா தமிழரசுக் கட்சியைப்
பேச்சுவார்த்தைக்கு அழைத்தார், இதன் மூலம் பண்டாரநாயக்க-செல்வநாயகம்
ஒப்பந்தம் 1957 ஆம் ஆண்டில் பிரதமருக்கும் தமிழரசுக் கட்சித் தலைவர்
செல்வநாயகத்திற்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது.
இதன் மூலம் தமிழர் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில்
தமிழும் நிர்வாக மொழியாக இருக்க உடன்பாடு எட்டப்பட்டது.
ஆனாலும், சிங்களத் தேசியவாதிகள், மற்றும் பௌத்த துறவிகள் இதற்கு
எதிர்ப்புத் தெரிவித்தனர். குறிப்பாக முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய
தேசியக் கட்சியின் ஜெயவர்தனா தலைமையில் கண்டிக்கு நடைப் பயணம்
மேற்கொண்டனர்.
இவ்வெதிர்ப்பை அடுத்து, பண்டாரநாயக்கா அரசு பண்டா-செல்வா ஒப்பந்தத்தைக்
கிழித்தெறிந்தது.
இதற்கிடையில், பிரித்தானியக் அரச கடற்படையினர் தமது திருகோணமலைத் தளத்தை
மூடியதை அடுத்து 400 தமிழ்த் தொழிலாளர்கள் பணியிழந்தார்கள். இவர்களை
சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பொலனறுவை மாவட்டத்தில் குடியமர்த்த
அரசு திட்டமிட்டது. இந்நடவடிக்கை அம்மாவட்டத்தில் உள்ள சிங்களவர்
மத்தியில் எதிர்ப்பைக் கிளப்பியது. சிங்களக் கும்பலகள் அங்கு உருவாகி
அங்கு குடியேற வந்த தமிழர்களைத் தாக்கத் தொடங்கியது.
இவ்வாறாக காலம் காலம் வந்த இலங்கை அரசுகள் சிங்களப் பேரினவாதத்தையே
கக்கின. சிங்கள பேரினவாத வெறிகொண்ட அரசுகளின் துணையோடு சிங்கள பௌத்த இன
வெறியர்கள் தமிழின அழிப்பை காலத்திற்கு காலம் ஆற்றி வந்தார்கள்.
இன்று போல் அன்றும் அழிந்த தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காமலே உலகம் இந்த
அநீதிகளை கடந்து போயிற்று....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக