புதன், 6 ஜனவரி, 2021

ஈழத்தமிழர் தமிழகம் உதவி ஆன்டன் பாலசிங்கம்

 

aathi tamil aathi1956@gmail.com

வியா., 12 செப்., 2019, பிற்பகல் 6:38
பெறுநர்: எனக்கு
கலைச்செல்வம் சண்முகம்
•இனி இந்திய அரசு என்ன செய்யப் போகிறது?
1983ல் அன்டன் பாலசிங்கம் மற்றும் சந்திரகாசனை அமெரிக்க உளவாளிகள் என்று கூறி இந்தியாவை விட்டு வெளியேற்றியது இந்திய அரசு.
உடனே வரலாறு காணாத மக்கள் போராட்டம் தமிழ்நாட்டில் வெடித்தது. வேறு வழியின்றி வெளியேற்றியவர்களை மீண்டும் அழைத்துக் கொண்டது இந்திய அரசு.
நான் அறிந்தவரையில் உளவாளிகள் என்று வெளியேற்றியவர்களை மக்கள் போராட்டம் காரணமாக மீண்டும் நாட்டிற்குள் வரவழைத்த ஒரே நாடு உலகில் இந்தியா மட்டுமே.
அந்த வரலாற்று அற்புதத்தை ஈழத் தமிழர்களுக்காக நடத்தியவர்கள் தமிழ்நாட்டு தமிழர்களே.
அதேபோன்று இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது இந்தியா முழுவதும் 5000க்கு மேற்பட்ட அப்பாவி சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள்.
இதுபற்றி கேட்டபோது “ஆலமரம் சரியும்போது சில புற்கள் நசுங்குவது இயற்கை” என்றார் ராஜிவ் காந்தி.
ஆனால் அதே ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது ஒரு ஈழத் தமிழன் கூட கொல்லப்படவில்லை. ஒரு புல்லுக்கூட நசுங்கவில்லை.
அப்போது இந்தியாவில் இரண்டு லட்சம் ஈழ அகதிகள் இருந்தார்கள். ஒரு ஈழத் தமிழனுக்குகூட ஆபத்து நேராமல் பாதுகாத்தவர்கள் தமிழகத்து தமிழர்களே.
ராஜிவ் காந்தி கொலையை அடுத்து இனி ஈழத் தமிழருக்கு தமிழ்நாட்டில் ஆதரவு இருக்காது என்றார்கள்.
புலிகள் இயக்கத்தை தொடர்ந்து தடை செய்து வருகிறார்கள். பிரபாகரனை பயங்கரவாதி என்கிறார்கள்.
ஆனாலும் தமிழக மக்கள் மனங்களில் இருந்து ஈழத் தமிழருக்கான ஆதரவை நீக்க முடியவில்லை.
எந்த பிரபாகரனை இந்திய அரசு தடை செய்கிறதோ அதே பிரபாகரன் படத்தின் முன்னிலையில் தமது திருமணத்தை நடத்துகின்றனர்.
இதோ இவர் படித்து பெற்றிருப்பது முனைவர் பட்டம். பார்த்த தொழில் பேராசிரியர். இவர் தனது திருமணத்தை பிரபாகரன் படத்திற்கு முன்னால் நடத்தி இந்திய அரசுக்கு பதில் அளித்துள்ளார்.
இனி இந்திய அரசு என்ன செய்யப் போகிறது?
குறிப்பு – தம்பதிகளுக்கு எமது திருமண வாழ்த்துக்கள்.
Tholar Balan

search ஈழம் தமிழகம் ஒற்றுமை label tag வேட்டொலி தோழர் பாலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக