| புத., 4 செப்., 2019, பிற்பகல் 1:46 | |||
தாய்மடி முருகானந்தம்
இஸ்லாம் மதத்தில் எந்தப் பிரிவுக்கு மாறினார் என்பதை மனுதாரர் தெரிவிக்கவில்லை என்பதால்
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஜாதி சான்றிதழ் பெற அவருக்கு உரிமை இல்லை என்று கூறி, நீதிபதிகள் அவரது மனுவை ஒதுக்கித் தள்ளினர்.
பதிவாளர்; Arunagiri Sankarankovil
சிவராமகிருஷ்ணன் பதிவு
(திருத்தங்களுடன்)
காஞ்சிபுரம் # திருக்கழுக்குன்
றத்தைச் சேர்ந்த
24 மனை தெலுங்கு செட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் ரில்வான்.
ஆதி திராவிடப் பெண் ராம்ஜியாவை
திருமணம் செய்து கொண்டார்!
இவர்களுக்கு ஹர்ஷத், ஹர்ஷிதா என
இரண்டு குழந்தைகள்.
ரகல்வான், 2012 ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மதம் மாறினார்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சாதி சான்றிதழ் வேண்டும் என திருக்கழுக்குன்றம் தாசில்தாருக்கு விண்ணப்பித்தார்.
அதை நிராகரித்தவர் செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர்.
இந்த உத்தரவை ரத்து செய்ய
சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ரில்வான்.
நீதிபதிகள் சுப்பையா, சரவணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது .
அப்போது அரசு வழக்கறிஞர் ஆஜராகி இஸ்லாம் மதத்துக்கு மாறிய மனுதாரர்
அந்த மதத்தில் எந்தப் பிரிவில் சேர்ந்து உள்ளார் என்பதைத் தெரிவிக்கவில்லை
.
அதனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பிரிவைச் சேர்ந்தவராக இருந்தாலும்
அவருக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ் வழங்க இயலாது என்று வாதிட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்
இஸ்லாம் மதத்தில் எந்தப் பிரிவுக்கு மாறினார் என்பதை மனுதாரர் தெரிவிக்கவில்லை என்பதால்
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஜாதி சான்றிதழ் பெற அவருக்கு உரிமை இல்லை என்று கூறி அவரது மனுவை ஒதுக்கித் தள்ளினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக