| வியா., 22 ஆக., 2019, பிற்பகல் 4:22 | |||
விஷ்வா விஷ்வநாத்
தேவைக் கேற்ப முழக்கங்களை மாற்றிக் கொண்டே இருப்பார்!
1938-இல் தமிழ்நாடு தமிழருக்கே என்பார்! 1944-இல் திராவிட நாடு திராவிடர்க்கே என்பார். மொழிவழி மாநிலமாக தமிழ்நாடு அமைவதற்கான கோரிக்கையை முதலில் எதிர்ப்பார்; பின்னர் அதை ஆதரிப்பார். மீண்டும் 1956-இல் தமிழ்நாடு தமிழர்க்கே என்பார்!
1947 வரை வெள்ளையராட்சியை ஆதரித்தார் பெரியார்! 1952-இல் இராசாசி ஆட்சியைக் கூட ஆதரித்தார். பின்னர் அதை எதிர்த்தார். 1954 முதல் 1967 வரை காங்கிரசை ஆதரித்தார். 1925-இல் காங்கிரசைவிட்டு வெளியேறியபின் காங்கிரசு ஒழிப்பைத் தமது அடிப்படைத் திட்டங்களில் ஒன்றாக வெளியிட்டவர் பெரியார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தி.மு.க.வை அழிக்க 1949 முதல் 1967 வரை, எல்லாப் பரப்புரை முறைகளையும் உத்திகளையும் கையாண்டார் பெரியார். தி.க.வினரை காங்கிரசில் போய் சேரச் சொன்னார். இந்திய ஏகாதிபத்தியக் கட்சியான காங்கிரசு நடுவண் அரசிலும், தமிழ்நாட்டிலும் கோலோச்சியபோது, இரு அரசுகளுக்கும் ஆதரவாக ஏவல் பரப்புரை செய்து வாக்குகள் கேட்ட பெரியார், இவற்றுக்கிடையே தமிழ்நாடு விடுதலை பற்றியும் பேசினார். 1967-இல் தி.மு.க. ஆட்சி அமைத்தபின் தி.மு.க.வை ஆதரித்தார் பெரியார்!
பெரியார் கடைபிடித்த அதே சந்தர்ப்பவாதத்தைப் பின்பற்றி பின்னர், தி.மு.க. காங்கிரசுடன் கூட்டணியில் நடுவண் அரசில் பங்கேற்றது; பின்னர் பா.ச.க. கூட்டணியில் நடுவண் அரசில் பங்கேற்றது. நாளைக்கு நரேந்திர மோடி கூப்பிட்டால் ஓடத் தயாராக உள்ளது. இதுதான் பெரியாரின் அரசியல் பாரம்பரியம் - திராவிடத்தின் அரசியல் பாரம்பரியம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக