செவ்வாய், 5 ஜனவரி, 2021
ஈழம் முதலில் ஆண்டது பாண்டியர் 2700 ஆண்டுகள் பழமை நாணயம் தமிழி சான்று
aathi tamil <aathi1956@gmail.com>
திங்., 12 ஆக., 2019, பிற்பகல் 5:03
பெறுநர்: எனக்கு
Sundaram Muthiah Rajasubramanian
http://www.aranejournal.com/article-current/
article17.html
ஈழத்தை விஜயனுக்கு முன்னரே ஆண்ட சேந்தன் மாறன் என்ற பாண்டிய வேந்தன் பற்றிய என் கட்டுரை அரண் பன்னாட்டுத்தமிழாய்வு மின்னதழில் சூலை வெளியீட்டில் வந்துள்ளது. இக்கருத்து உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டால் தமிழர்கள் ஆட்சி விஜயன் ஈழத்துக்கு வருவதற்கு முன்பே ஈழம் தமிழர் நிலமாக இருந்தது என்பதற்கு மேலும் நல்லதொரு சான்றாய் அமையும்.
இந்த வேந்தன் தன் ஆட்சிக்காலத்தில் வெளியிட்ட ஒரு காசும் சிங்கள வரலாற்று ஆர்வலர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதில் எழுதியுள்ளது ராணா சிநதி நாமா (Rana Cinathi Nama) என்ற பாகத எழுத்துக்கள் என அவர் தவறாக படித்துள்ளார். நான் இதை சேந்தன் மாறன் என படிக்கிறேன். இந்த காசின் காலம் எனது கணிப்பில் கி.மு. ஏழாம் ஆறாம் நூற்றாண்டாகும்.
காசின் பின்புறம் கிளர் கெண்டை மீன் பொறிக்கப்பட்டுள்ளதாலும் காசில் உள்ள எழுத்துக்களில் தமிழுக்கு மட்டுமே ஊரிய எழுத்துக்களும் பாகதங்களில் இல்லாத எழுத்துக்களுமான றகரமும் னகரமும் உள்ளதாலும் மாறன் என்ற பெயர் சங்ககாலத்தில் பாண்டிய வேந்தருக்கே இருந்ததாலும் இதில் எழுதப்பட்டிருப்
பது சேந்தன் மாறன் என்ற பாண்டிய வேந்தன் பெயரே என உறுதியாக கூற முடியும்.
இது தற்காலிக இணைப்பு என்பதால் இதில் இருப்பதை தரவிறக்கி வைத்துக்கொள்ளவும். நாளை இணைப்பு மாற்றப்படலாம். - தென்காசி சுப்பிரமணியன் ( Sundaram Muthiah Rajasubramanian )
Seshadri Sridharan , Sivagnanam Balasubramani,
Anton Ockersz , Chidambaram Kuppusamy ,
Mannar Mannan
நேற்று அன்று பிற்பகல் 4:56 மணிக்கு
Seshadri Sridharan
சேந்தன் மாறன் மிகச் சரியான வாசிப்பு. ஆனால் இதை 7 -ம் நூற்றாண்டு இன்று எப்படி தீர்மானித்தீர் .
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
மேலும் · 7 மணி நேரம் முன்பு
Sundaram Muthiah Rajasubramanian
கட்டுரையிலேயே உள்ளது. PDF தரவிறக்கி முழுமையா படிங்க. முக்கியமாக மகாவம்ச குறிப்புகளின்படி விஜயனுக்கு முன்னர் வட ஈழத்தை ஆண்டது சேந்தன் தான். விஜயனுக்கு பாண்டியன் பெண் கொடுத்ததாக உள்ளதால் அது சீதன நிலம் என கொள்ள முடியும்.
7ம் நூற்றாண்டு என நான் கூறலை. கிமு ஏழாம் நூற்றாண்டு என்கிறேன்.
ஈழப்பாண்டியன் சேந்தன் மாறன் காசு
இராஜ சுப்பிரமணியன், 25 July 2019 கட்டுரை Read Full PDF
இராஜ சுப்பிரமணியன்,
இணை மென்பொறியாளர் &வரலாறு ஆய்வாளர்,
சரவணம்பட்டி
கோயமுத்தூர்
ஆய்வுச் சுருக்கம்:
தமிழி எழுத்துக்கள் கிடைத்த சங்ககாலக்காசுகள் அனைத்துமே அசோகனுக்கு பிற்பட்ட காலத்தில் பொறிக்கப்பட்டதாக பரவலாக ஆய்வாளர்களால் இதுவரை நம்பப்பட்டு வந்துள்ளது. அதிலும் கி.மு. 307 முதல் கி.மு. 267 வரை அனுராதபுரத்தை ஆண்டதாக கருதப்படும் தேவநாம்பிய தீசன் காலத்தில் அசோகன் ஆண்ட மகத நாட்டில் இருந்து பௌத்த தூதுவர்கள் வந்து எழுத்து வடிவங்களை ஈழத்தில் பரப்பியதாகவே ஈழத்து ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தேவநாம்பியனுக்கு முன்னர் ஈழத்தை ஆண்டதாக மகாவம்சத்தில் கூறப்படும் விஜயன் முதல் மூத்தசிவன் வரை வரலாற்று அரசர்களாக ஆய்வாளர்கள் பலர் ஏற்றுக்கொள்வதில்லை. அதற்கு காரணமாக அசோகனுக்கு பிறகே எழுத்துக்கள் தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் சென்றதாக "அசோகனுக்கு பிந்திய எழுத்துப்பரவல்" (Post Asokan Dispersal) கொள்கையே உள்ளது. தமிழகத்தில் கொடுமணலிலும் பொருந்தலிலும் அசோகனுக்கு இருநூறாண்டுகள் முன்னரே எழுத்துக்கள் பொறித்த பானையோடுகள் கிடைத்துள்ளதால் "அசோகனுக்கு பிந்திய எழுத்துப்பரவல்" கொள்கை தவறானது என நிரூபனமானது. தமிழகத்தில் அசோகனுக்கு முன்னரே எழுத்துக்கள் உருவாக்கப்பட்டதெனில் ஈழத்தில் கிடைக்கும் தமிழி எழுத்துக்களும் பாகத எழுத்துக்களும் எப்போது உருவாக்கப்பட்டவை என்பதை அறிவதும் இப்போதைய முக்கியத்தேவை ஆகும். அந்த வகையில் ஈழத்தில் கிடைத்துள்ள சேந்தன் மாறன் என்ற பெயர் பொறித்த காசு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சேந்தன் என்ற தமிழ்ப்பெயரின் பாகத வடிவமே ஜெயந்த என்பதாகும். அதனால் விஜயனுக்கு முன்னர் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ஆண்டதாக மகாவம்சத்தில் கூறப்படும் ஜெயந்தனே இந்த காசில் காணப்படும் சேந்தன் மாறன் எனக்கொள்ளலாம். சென்ற நூற்றாண்டில் கஜபாகு காலம்காட்டி முறைமை எவ்வாறு ஒரு கால நங்கூரமாய் அமைந்ததோ அது போலவே இனி தமிழர் சிங்களவர் வரலாறு சேந்தன் மாறன் காலம் காட்டி முறைமை மூலம் இணைக்கப்படும். தமிழரசர்கள் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இருந்து காலம் கணிக்கப்படுவார்கள். சேந்தன் மாறன், விஜயனுக்கு பெண் கொடுத்த பாண்டியன், மணிமேகலையில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ் அரசமரபுகள் என்ற ஆய்வு முன்னேறும். வரலாற்று ஆய்வு வழியில் கி.மு. ஆறாம் நூற்றாண்டு அளவில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட காசை வெளியிடும் முதல் கட்டுரை இதுவே எனலாம்.
திறவுச் சொற்கள்:
பழந்தமிழ்க்காசு, ஈழத்தமிழர்_வரலாறு, தமிழ்_தொன்மை, தொல்லியல்
தமிழீழத்தில் கிடைத்த சங்ககாலக்காசுகள் அனைத்துமே அசோகனுக்கு பிற்பட்ட காலத்தில் பொறிக்கப்பட்டதாக பரவலாக ஆய்வாளர்களால் இதுவரை நம்பப்பட்டு வந்துள்ளது. அதிலும் கி.மு. 307 முதல் கி.மு. 267 வரை அனுராதபுரத்தை ஆண்டதாக கருதப்படும் தேவநாம்பிய தீசன் காலத்தில் அசோகன் ஆண்ட மகத நாட்டில் இருந்து பௌத்த தூதுவர்கள் வந்து எழுத்து வடிவங்களை ஈழத்தில் பரப்பியதாகவே ஈழத்து ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தேவநாம்பியனுக்கு முன்னர் ஈழத்தை ஆண்டதாக மகாவம்சத்தில் கூறப்படும் விஜயன் முதல் மூத்தசிவன் வரை வரலாற்று அரசர்களாக ஆய்வாளர்கள் பலர் ஏற்றுக்கொள்வதில்லை. அதற்கு காரணமாக அசோகனுக்கு பிறகே எழுத்துக்கள் தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் சென்றதாக
"அசோகனுக்கு பிந்திய எழுத்துப்பரவல்" (Post Asokan Dispersal) கொள்கையே உள்ளது. தமிழகத்தில் கொடுமணலிலும் பொருந்தலிலும் அசோகனுக்கு இருநூறாண்டுகள் முன்னரே எழுத்துக்கள் பொறித்த பானையோடுகள் கிடைத்துள்ளதால் "அசோகனுக்கு பிந்திய எழுத்துப்பரவல்" கொள்கை தவறானது என நிரூபனமானது.
தமிழகத்தில் அசோகனுக்கு முன்னரே எழுத்துக்கள் உருவாக்கப்பட்டதெனில் ஈழத்தில் கிடைக்கும் தமிழி எழுத்துக்களும் பாகத எழுத்துக்களும் எப்போது உருவாக்கப்பட்டவை என்பதை அறிவதும் இப்போதைய முக்கியத்தேவை ஆகும். கொடுமணல் பொருந்தல் போன்ற அகழாய்வில் கிடைத்த அசோகனுக்கு முற்பட்ட பானையோடுகளிலும் தமிழி எழுத்துக்களுக்கு மட்டுமே ஊரிய ழ ள ற ன போன்ற நான்கு எழுத்துக்கள் இல்லை. அதனால் அசோகனுக்கு முன்னர் தமிழகத்தில் கிடைத்த எழுத்துக்கள் தமிழுக்கான எழுத்துக்களா பாகதங்களுக்கான எழுத்துக்களா என்று ஆய்வாளர்கள் இடையே வாதங்கள் நடந்த வண்ணமே உள்ளன.
ஆனால் ஈழத்தில் கிடைத்த சேந்தன் மாறன் காசில் சேந்தன் மாறன் என்பதில் னகரமும் றகரமும் சேர்ந்தே உள்ளன. ஈழத்தில் விஜயன் வந்தேறியதாக கூறப்படும் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டாகும். ஆனால் ஜயந்தன் அரசன் விஜயனுக்கு முன்னரே ஈழத்தை ஆண்டதாக மகாவம்சத்தில் கூறப்படுகிறான். அதனால் தமிழ் எழுத்துக்கள் கி.மு. ஏழாம் நூற்றாண்டிலேயே ஈழத்தில் வழக்கில் இருந்ததாக இக்காசு உறுதிப்படுத்துகிறது. அந்த வகையில் ஈழத்தில் கிடைத்துள்ள சேந்தன் மாறன் என்ற பெயர் பொறித்த காசு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சேந்தன் என்ற தமிழ்ப்பெயரின் பாகத வடிவமே ஜெயந்த என்பதாகும். அதனால் விஜயனுக்கு முன்னர் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ஆண்டதாக மகாவம்சத்தில் கூறப்படும் ஜெயந்தனே இந்த காசில் காணப்படும் சேந்தன் மாறன் எனக்கொள்ளலாம். ஈழத்தின் பண்டைய காசுகளை சேகரிக்கும் ஆர்வலர்களில் ஒருவரான சிரிமுனசிங்கே இக்காசை தன் வலைபூவில் வெளியிட்டுள்ளதோடு அல்லாமல் அக்காசை ஈழத்தின் வரலாற்று நூல்களிலும்1 பதிவு செய்துள்ளார்.
ஆனால் அக்காசில் உள்ள எழுத்துக்களை 'ராணா சிநதி நாமா' (Rana Cinathi Nama)என தவறாக படித்துள்ளார். அதில் ‘தி’ எழுத்துகான வலப்பக்க கோடும் அதன் மேல் வரும் நெடுங்கோடும் இல்லை. அதனால் இது தகரமாக இருக்க வேண்டும். ந என்ற எழுத்தும் நா என்ற எழுத்தும் அக்காசில் இருப்பதாக அவர் கூறியுள்ளார். கூர்ந்து கவனித்தால் அதில் அந்த இரண்டு எழுத்துக்களும் ‘ன்’ என்ற னகர மெய் எழுத்தே என்பதை உறுதிப்படுத்த முடியும்.
சிரிமுனசிங்கேவின் படிப்பு முறைப்படி அவரது வலைபூவில் உள்ள காசு
பட உதவி: https://sirimunasiha.wordpress.com/about/inscribed-coin-like-pieces-of-sri-lanka/
சேந்தன் மாறன் என்ற எழுத்துக்களின் பொறிப்பு: (என் படிப்பு முறைப்படி)
நான் இக்காசில் சேந்தன் மாறன் என்ற எழுத்துக்களை எப்படி பிரித்துப்படித்துள்ளேன் என்பதை கீழே வரைபடத்தில் காட்டியிருக்கிறேன். சேந்தன் மாறன் பெயரில் வரும் அன் விகுதியில் ‘ன்’ என்ற கடை மெய்யெழுத்தில் கீழ் பாதி உடைந்துள்ளது. ஆனால் சேந்த'ன்' மாற'ன்' பெயரில் வரும் இரண்டு ன் மெய்யெழுத்துக்களும் வலப்பக்கம் மேலே கொக்கி போல் வளைந்துள்ளதால் இவை தமிழ் ‘ன்’ மெய்யெழுத்தே.
இக்காசில் சகரத்தை முதல் எழுத்தாக நான் கொள்கிறேன். றகரம் வரும் இடம் நன்கு சிதைந்துள்ளது. ஆக காசில் எழுதப்படுள்ள எழுத்துக்கள் சேந்தன் மாறன் என்பது தானே ஒழிய சிரிமுனசிங்கே சொல்வது போல் 'ராணா சிநதி நாமா' அல்ல என்ற முடிவுக்கு வரலாம். அக்காசில் ஈழத்தில் கிடைத்துள்ள மற்ற மீன்பொறிக்கப்பட்ட சங்ககால பாண்டியர் காசு போலவே இக்காசின் பின்புறத்தில் கோட்டு வடிவ மீன் பொறிக்கப்பட்டுள்ளது இது பாண்டியர் காசு என்பதை மிகத்தெளிவாகவே காட்டுகிறது. பின்பக்கத்திலும் சேந்தன் மாறன் என்ற பெயரின் முதல் எழுத்தான 'சே' என்ற எழுத்து சங்ககால தமிழக பாண்டியரின் கோட்டு உருவ மீன் சின்னத்துடன் பொறிக்கப்பட்டுள்ளது. சுந்தரபாண்டியன் காசுகளிலும் பின்புறத்தில் ‘சு’ என்ற பெயரின் முதல் எழுத்து மட்டும் பொறிக்கப்பட்டிருக்கும் பாண்டியர் வழக்கை இங்கு ஒப்பு நோக்குக.
சேந்தன்மாறன் காசின் பின்புறம் ‘சே’ எழுத்து என் படிப்பு முறைப்படி
ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் கிடைத்த கோட்டுருவ மீன் பொறிக்கப்பட்ட பாண்டியர் காசுகள்:
நாணவியல் ஆய்வாளரான இரா.கிருஷ்ணமூர்த்தியால் கண்டறியப்பட்ட பெருவழுதி என்ற பெயர் பொறித்த காசுகளில் ஈழத்தில் கிடைத்த மீன் பொறிக்கப்பட்ட பெருவழுதி காசும் அடக்கம்.2 இதே போல மேலும் இரண்டு பெருவழுதி பெயர் பொறித்த காசுகள் மதுரையிலும் கிடைத்துள்ளன. மூன்று பெருவழுதி காசுகளிலும் ஈழத்தில் கிடைத்த சேந்தன் மாறன் காசிலும் பொறிக்கப்பட்ட கோட்டு வடிவ மீன் சின்னம் ஒரே பாணியில் தான் உள்ளன. அதனால் சேந்தன் மாறன் ஈழத்தின் பாண்டிய அரசனே என்பது உறுதியாகிறது.
பட உதவி: தினமலர்
தமிழ்நாட்டில் கிடைத்த சங்ககால சேந்தன் காசு:
குடவாயில் பாலசுப்பிரமணியனால் எழுதப்பட்டு உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள "சோழனின் சாதனை காட்டும் சேந்தனின் காசு" என்ற ஆய்வுக்கட்டுரையில் காட்டப்பட்டுள்ள சங்ககாலக்காசில்3 சேந்தன் என்ற பெயர் எவ்வாறு பொறிக்கட்டுள்ளதோ அதே எழுத்துமுறையில் தான் ஈழப்பாண்டியனான சேந்தன் மாறன் காசிலும் சேந்தன் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஈழத்திலும் சேந்தன் என்ற பெயர் ஒரே முறையில் எழுதப்பட்டிருப்பது சிரிமுனசிங்கே கண்டுபிடித்த காசில் எழுதப்பட்டுள்ளது தமிழே என்பதையும் அது பாகதம் அல்ல என்பதையும் மேலும் உறுதிப்படுத்துகிறது. அதை கீழுள்ள படத்தில் வட்டமிட்டு காட்டியுள்ளேன்.
பட உதவி: http://www.ulakaththamizh.org/JOTSArticle.aspx?id=441
மகாவம்சத்தில் சேந்தனின் போர்:
மகாவம்சத்தின் பதினைந்தாம் நிகழ்வான மகாவிகாரை பற்றிய பாடல்களில் ஜெயந்தனுக்கும் அவனின் தம்பிக்கும் நடக்க இருந்த போர் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஜெயந்தன் ஈழத்தை ஆண்ட காலத்தில் ஈழம் மண்டதீபா எனப்பெயர் பெற்றிருந்ததாக மகாவம்சம் கூறுகிறது. இது இன்றைய யாழ்ப்பாணத்திலுள்ள மண்டைத்தீவாக இருக்கலாம். மண்டைத்தீவின் அரசனான சேந்தனுக்கும் அவனின் தம்பிக்கும் போர் மூண்டது. இதனால் பெரும் கேடு விளையும் என்று கணித்த காசிபன் சுபகூட மலையில் எழுந்தருளி நடக்கவிருந்த பெரும்போரை தடுத்தான் என்கிறது மகாவம்சம்.
ஈழத்திற்கு தேவநாம்பிய தீசன் காலமான கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே பௌத்தம் சென்றது என்பதால் காசிபன் என்ற பெயர் பெற்ற வேறொரு முனிவர் இப்போரை தடுத்திருக்கலாம். ஈழவரலாறு பௌத்தமயமாக்கப்பட்ட போது காசிப முனிவர் பௌத்தராக சித்தரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
சுபகூடம் என மகாவம்சத்தில் குறிக்கப்படும் காசிபன் அமர்ந்த இம்மலை இன்றைய அனுராதபுரத்தின் மிகிந்தலையில் உள்ள மலையே என்பதால் யாழ்ப்பாணம் மண்டைத்தீவு போன்ற வடபகுதிகளை சேந்தன் மாறனும் அனுராதபுரம் சுபகூடம் போன்ற நடு ஈழப்பகுதிகளை சேந்தனின் தம்பியும் ஆண்டிருக்க வேண்டும். மகாவம்சத்தில் கூறப்படும் விஜயனும் கூட பாண்டிய நாட்டில் இருந்தே சில பெண்களை அழைத்து அவர்களில் இளவரசியை மணந்து பட்டத்தரசியாகவும் அவளது தோழிகளை தனது நண்பர்களுக்கு மணந்து கொடுத்ததாகவும் எழுதப்பட்டிருப்பது ஈழம் பாண்டியர் ஆளுகைக்கு கி.மு. ஆறாம் நூற்றாண்டி ற்கு முன்னரே உட்பட்டிருந்ததை காட்டுகிறது. ஈழத்தின் இரு சகோதர அரசர்களுக்கு நடந்த போர் பற்றிய மகாவம்ச வரிகளை கீழே கொடுத்துள்ளேன்.
“ஜெயந்தோ நாமநாமேன தத்த ராஜா தடாஅகு நாமேன மண்டதீபோ திஅயம் தீபோ தடா அகு தடா ஜெயந்தராண்ணோசராண்ணோ கணித்தபடுச யுத்தம் உபத்திடம் ஆசிபீம்சனம் ஸட்டஹிம்சனம் கஸ்ஸபோ ஸொதாஸ பலொதென யுத்தேண பாணிணம் மகந்தம் பியசணம் திஸ்வமஹா காருணிகொமுனி தம்ஹண்ட்வா ஸட்டவிநயம் பவத்திம் ஸாஸணஸ்ஸ ஸகாடும் இமஸ்மிம் திபஸ்மிம் கருணாபலசொதிடொ விஸடிய ஸஹஸெஹி தாடிகி பரிவாரிடொ நாபஸாகம்ம அட்டஹாஸி சுபகூடம்ஹி பப்படெ” மகாவம்சம் 15:127-131
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் அவையில் இயக்கன் என்ற அமைச்சர் இருந்ததும் மதுரை புலவர்களில் மதுரை தமிழக்கூத்தனார் நாகன் தேவனார், மதுரை பூதன் இளநாகனார், மதுரை பூவண்ட நாகன் வேட்டனார், மதுரை பெருமருது இளநாகனார், மதுரை கடையத்தார் மகன் வெண்ணாகனார், மதுரை கள்ளிற்கடையத்தன் வெண்ணாகனார், மதுரை கொல்லன் வெண்ணாகனார் போன்ற நாகர் என்ற பெயர் பெற்ற புலவர்கள் இருந்ததும் பாண்டியர்களின் ஆட்சியின் கீழ் ஈழ வரலாற்றோடு தொடர்புள்ள இயக்கரும் நாகரும் இருந்ததை காட்டுகின்றன.
மணிமேகலையில் கூறப்படும் நாக நாட்டரசர்களின் போர்:
மகாவம்சம் குறிக்கும் அதே போரை மணிமேகலையும் குறிக்கிறது. இரு நாகர் படைகளுக்கும் போர் நடக்கும் போது அவர்களின் நடுவில் பிறவிப்பிணி மருத்துவன் தோன்றி பேரிருளை உண்டாக்கியதால் நாகர்கள் அஞ்சினர். மீண்டும் மருத்துவன் அங்கு வெளிச்சத்தை உருவாக்கியவுடன் நாகர்கள் மருத்துவனை வணங்கி போருக்குக் காரணமான மணியாசனத்தில் மருத்துவனையே அமரச்செய்தனர் என்கிறது மணிமேகலை. அப்பாடலில் மருத்துவன் என்று கூறப்படுவது மணிமேகலை ஆசிரியர் பார்வையில் காசிபபுத்தராக இருக்கலாம். மணிமேகலையில் எந்த புத்தர் என்றும் நாகநாட்டரசர்களின் பெயரும் குறிப்பிடப்படவில்லை. வேகவெந்திறல் நாகநாட்டரசர் சினமா சொழித்து மனமாசு தீர்த்தாங்கு அறச்செவி திறந்து மறச்செவியடைத்து பிறவிப்பிணி மருத்துவன் இருந்தறம் உரைக்கும் திருத்தாளி ஆசனம் - மணிமேகலை பீடிகை கண்டு பிறப்புணர்த்திய காதை, 58 – 61
ஈழத்தில் எழுதப்பட்ட மகாவம்சமும் தமிழகத்தில் எழுதப்பட்ட மணிமேகலையும் நாகநாட்டு அரசர்களுக்கு ஏற்பட இருந்த போரை ஒருவர் தடுத்தாட்கொண்டதாகவே கூறுகின்றன. மகாவம்சத்தின் தொடர்சியாக எழுதப்பட்ட மகாவம்ச திக்கங்களில் சேந்தனோடு போர் புரிய இருந்த அவனது தம்பியின் பெயர் சமித்தா எனக்குறிப்பிடுகிறது. ஆனால் சமித்தாவின் பெயர் மகாவம்சத்திலும் சேந்தனின் பெயர் மணிமேகலையிலும் குறிப்பிடப்படவில்லை. கி.மு.ஆறாம் நூற்றாண்டில் நடந்த போரில் பங்குபெற்ற யாழ்ப்பாண மண்டைத்தீவு அரசன் சேந்தன் மாறனும் ஈழத்தின் நடுப்பகுதி அரசனான சமித்தனும் ஈழ பௌத்த கதைகளில் கூறப்பட்டுள்ளார்கள். ஆனால் தமிழக மணிமேகலை காலத்தில் அது செய்தியாக வந்தாலும் போரில் பங்குபெற்ற நாகநாட்டு பாண்டியர்களின் பெயரை குறிப்பிடவில்லை. எனில் காலப்போக்கில் இருவரின் பெயரும் மறைந்தன என கூறலாம்.
பாண்டிய மெய்க்கீர்த்திகளில் சேந்தன் பெயர்:
கி. பி. ஏழாம் நூற்றாண்டின் முதற்பகுதியில் செழியன் சேந்தன் என்னும் பாண்டிய வேந்தன் மதுரையை ஆண்டான். அவனது பெயர் வேளவிக்குடி செப்பேட்டில் சேந்தன் என்றும் சின்னமனூர் சிறியச்செப்பேடுகளில்ஜயந்தவர்மன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. மகாவம்சம் தொகுக்க தொடங்கியதன் காலம் கி.பி. ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகளாகும். வேள்விக்குடி சின்னமனூர் செப்பேடுகள் வெளியிடப்பட்ட காலம் ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளாகும். தமிழில் சேந்தன் என்று இருந்த பெயர் சங்கதத்தில் ஜயந்த என அழைக்கப்பட்டிருப்பது அக்கால மொழிமாற்ற வழக்கு என்பதற்கு கீழுள்ள செப்பேடுகளின் வரிகளே சான்று. சிலைத்தடக்கைக் கொலைக்களிற்றுச் செழியன்வானவன் செங்கோற்சேந்தன் - வேள்விக்குடிச்செப்பேடு வரி 30
ஊனமில்புகழ் பாண்டியவம்சத் துலோகநாதர் பலர்கழிந்தபின்
ஜகத்கீத யசோராசீர்ஜயந்தவர்மன் மகனாகி - சின்னமனூர் சிறிய செப்பேடு வரிகள் 10-11
நாடகங்களில் பாண்டியர்களின் சீதன நிலமான ஈழம்:
பாண்டியர் தொடர்பான நாடகக்கதைகளில் பாண்டிய அரசி அல்லிராணி கதை ஈழத்தில் நடந்ததாக ஈழமக்களிடம் ஒரு நம்பிக்கை உண்டு. அல்லிராணிக்கோட்டை என்ற ஒரு கோட்டை மன்னார்தீவிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அதை பாண்டியரசி அல்லி அரசாண்டதாகவே அம்மக்கள் கருதுகின்றனர். அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை, ஏணியேற்றம் போன்ற அல்லி தொடர்பான அம்மானை பாடல்களை எழுதிய புகழேந்திப்புலவரும் தென்காசி பாண்டியனான பராக்கிரம்மன் காலத்தில் வாழ்ந்தவர் தான். தென்காசியை தலைநகராக கொண்டு ஆண்ட பராக்கிரம்மனின் காலம் பதினைந்தாம்
நூற்றாண்டாகும். ஆக பாண்டியர்கள் மதுரையை இழந்து தென்காசி போன்ற சிறுநிலப்பகுதிகளில் ஆட்சிப்பரப்பை குறுக்கிக்கொண்டபோதும் கூட பாண்டியரின் ஈழம் தொடர்பான கதை பாண்டியர் மத்தியில் வழக்கில் இருந்ததை காணலாம். ஏனியேற்றம் அம்மானைப்பாடலில் துரியோதனனை அல்லி அவமானப்படுத்தி பாண்டியர்களிடம் அனுப்புவதாக கதை உள்ளது. எனில் அல்லி அரசாணி மாலை கதையில் வரும் பாண்டியர்கள் அல்லியின் தமையன் முறை அரசர்களாக இருந்திருக்க வேண்டும். அல்லிக்கு சீதனமாக ஈழம் கொடுக்கப்பட்டதாலேயே அல்லி பாண்டிய அரசர்களிடம் துரியோதனனை அனுப்புவதாக கதை உள்ளது.4
மெகஸ்தனீசு குறிப்புகளில் பாண்டிய இளவரசியின் சீதனம்:
சந்திரகுப்த மோரியனின் அரசவைக்கு விருந்தினராக வந்த மெகசுதனீசு மதுரையை எரக்கல்சு என்ற பாண்டிய அரசன் ஆண்டதாகவும் அவனின் மகளான பாண்டியாவுக்கு குறிப்பிட்ட அளவு நிலம் கொடுத்து குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை பாண்டியா இளவரசிக்கு அந்த தானம் கொடுக்கப்பட்ட ஊர்களில் இருந்து திறை செலுத்த வேண்டும் என்றும் குறிப்புகளை கொடுத்துள்ளார்.5 இந்த குறிப்புகள் பாண்டிய இளவரசிகளுக்கு திருமணச்சீராக சில ஊர்கள் கொடுக்கப்பட்டதை காட்டுகின்றன.
சான்றுகளும் ஒப்பீடுகளும் ஒரு தொகுப்பு:
மாறன் என்ற பெயர் பாண்டியர்களுக்கே இருந்தமை.
ஈழத்தில் கிடைத்த பாண்டியன் பெருவழுதி காசிலும் சேந்தன் மாறன் காசிலும் கோட்டுருவ மீன் பின்புறத்தில் ஒரே வடிவில் பொறிக்கப்பட்டுள்ளமை
தமிழ்நாட்டில் கிடைத்த சேந்தன் காசிலும் ஈழத்தில் கிடைத்த சேந்தன் மாறன் காசிலும் சேந்தன் என்ற சொல் ஒரே எழுத்துமுறையில் குறிக்கப்பட்டுள்ளமை.
சேந்தன் மாறன் பெயரில் வரும் றகரமும் னகரமும் தமிழில் மட்டும் உள்ளமை. பாகதங்களில் இல்லாமை.
விஜயன் பாண்டிய நாட்டில் பெண்ணெடுத்ததாக மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ளமை
ஈழ அரசர்களுக்கும் பாண்டியர்களுக்கும் விஜயன் காலம் முதல் இரண்டாம் பாண்டியப்பேரரசு காலம் வரை கொண்டு கொடுத்தல் இருந்தமை
பாண்டியர் அவையில் இயக்கரும் நாகரும் அமைச்சர்களாகவும் புலவர்களாகவும் இருந்தமை.
இயக்கருக்கும் நாகருக்கும் ஈழவரலாற்றில் ஆதிகாலம் தொட்டே தொடர்புள்ளமை
மணிமேகலையிலும் மகாவம்சத்திலும் இரு அரசர்களுக்கு போர் நடக்க இருந்ததை ஒருவர் தடுத்தாட்கொண்டமை
சேந்தன் ஆண்டதாக மகாவம்சம் கூறும் மண்டதீபா மண்டைத்தீவு என்ற பெயரில் இன்றைய யாழ்ப்பாணத்தீவுகளில் ஒன்றாக உள்ளமை.
நயினாத்தீவான மணிப்பல்லவ தீவின் அரசர்கள் நாகர்களாக இருந்தமை.
சேந்தனின் தம்பியான சமித்தா ஆண்ட சுபகூடம் இன்றும் அனுராதபுரத்தின் அருகில் உள்ள மிகிந்தலை மலையாக உள்ளமை
சேந்தன் என்ற பாண்டியரின் தமிழ்ப்பெயர் சங்கதத்தில் ஜயந்த என செப்பேடுகளில் வழங்கப்பட்டுள்ளமை
அல்லி என்ற பாண்டியரசி ஈழத்தை ஆண்டதாக கருதப்படும் மக்கள் வழக்காறு
மெகசுதனீசு பாண்டியரசர்கள் தங்கள் மகளின் சீதனமாக நிலங்களை கொடுத்ததற்கு தரும் குறிப்புகள்
சான்றுகள்
1. Anslem de Silva, Kavan Ratnatunga, Frederick Medis, Indraneil Das, Sirimunasinghe, "Ancient lead coins, amulets and artifacts depicting turtles from Akurugoda, Southeastern Sri Lanka", in Page 20
2. R. Krishnamurthy (2005), 'Sangam Age Pandya Coins with Legend Peruvaluthi in the National Museum, Colombo,' Studies in South Indian Coins, pp.58-63.
3. Kudavayil Balasubramanian, சோழனின் சாதனை காட்டும் சேந்தனின் காசு, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 053 & 054 - June & December 1998, Page 145-154
INSCRIBED – COIN LIKE PIECES OF SRI LANKA.
The first coin like object inscribed in the script used by the Sinhalese from the early historical period was excavated during Gedige and Salgaswatte digs. The strata in which the coin inscfribed Dataya were found was dated to Pre 300 BC.These were of copper, later Ms Chandrika Jayasinghe published Lead inscribed coin like pieces from Tissamaharama in the South of the Island. A large number of these pieces were later published by Bopearachchi and Wickremasinghe. These discoveries did not agree with the exsisting theories about the history of coins in Sri Lanka. The belief that the first ever coin of Sri Lankan origin was that of Parakramabahu I [ Rhys David]was later replaced with the theory that the Gold Kalanadas were the first coins of true Sri Lankan origin. When in 1883, Henry Parker first found these coin like pieces with the Railed Swastika , the opposition by John Still in JRAS Journal Vol XIX 1907, must be read by all interested in ancient coins of Sri Lanka. With new discoveries a few Numismatist still call John Still statement that ” The Swastika is no more royal than is a four leaved shamrock” is brilliant. He misses the point that the SWATIKA by it self IS FOUND ON A FEW COINS , BUT A COMPLETE DIFFERENT A UNIQUE COMBINED OF A RAILED SWASTIKA IS ON MOST COIN OF ANCIENT SRI LANKA.
Even when an inscribed coin the Lion and Railed Swastika[ Complex No 186.6 Trench 3 E- 5 Cent AD], which is also in the ancient script used by the Sinhalese kings on their contempory inscription and seals along with the Railed Swastika, this is not even compared with Lion and railed Swastika coins found[ in Complex 189 dated to 1 Cent BC ]at different strata in the same dig. But the trouble these critics took to compare these coins with coins of the Maharati’s[ Maharathi has a Lion but no railed swastika] is almost unbelivable. The Mahasens Lion and Dots was found in the same dig[ Complex No186.13 trench 3 E], but no comparision was made. But the reading of the script[ script on copins similar to 1 Cent BC] on this Maharathi coin of the 5 Cent AD is co-related with the script of a Lion and Railed Swastika Coin found in strata at Anuradhapura dated to 190-100 BC.
So those with these coins should not write off these as votive pieces or that our Numismatist Society wont be renamed Society of Temple Tokens.A lot of coin like objects published by Raj Somadeva is shown below.
Agitaraha– Belongs to Agitara
Provenance : Akurugoda, Tissamaharama in Hambantota District Context : un-stratified Medium : metal (lead) Present location : Brig. B. Munasinghe collection,
“Obverse of these coins is badly deteriorated. The diameter of this coin is 1.6cm. On the
Reverse are five letters to be seen. These letters are carved out in considerably thick lines of the each letter does not exceed 4x3mm. These letters are very similar to the script used in Sri Lanka in the first century BC.
The word Agitara is occurs in this inscription as a personal name. It appears here in 1st person masculine gender genitive case and singular form. The word Agitara is a combination of two Sanskrit words Agni; ‘fire‘ and traya; ‘three‘. Mahabharata mention about three holy fires namely Grahapatya, Ahvaniya and Daksina. Therefore it is evident that the North Indian ideology affects the literate groups of the contemporary Sri Lankan society.
2. Raya Cinta nama The king named Cinta
Location:Akurugoda Context ;Tissamaharama in the Hambantota District Medium :un-stratified metal ( legal) Present ownsr:Brig. B. Munasinghe collection.
The obverse of this coin is bearing a fish motif facing an upward position. A crescent symbol is precisely placed above the fish mark. On the left side of this figure there is a symbol almost similar to the letter ‘ci‘ of the Brahml script used circa 250 BC in Sri Lanka.
On the reverse there are seven letters running along the edge of this disk. In the middle, there is a symbol of a turtle. The size of the letters is 3×3 mm. The diameter of the disk is 1.6 cm.
The word raya here can be derived from Skt. raja, which means ‘the king’. In Prakrit this word appears in a slightly different form. For instance, rana was used in the Bovattegala cave inscription (ASCAR 1950:28) to describe the same meaning as Skt. raja. The word raya in the present inscription may have been used as an alternative form of the Prakrit word rana. Usually,the persons who bear the epithet raja were affiliated to the contemporary politico-economic sphere of Sri Lanka. There are two prominent examples, which can be cited here to confirm this statement. The first one is the term Pacina raja that appeared in the cave inscription at Ambulambe in the Matale District (ASCAR 1911-12:121). The second example is coming from the Yatahalena Vihara of the Kegalle District (CJSG. 11:203).
ADVERTISEMENT
REPORT THIS AD
3. muka pahana The seal of…………muka Location : Akurugoda, Tissamaharama in the Hambantota District Context : un-stratified Medium : terracotta Present location : Brig. B. Munasinghe collection
This is a fragmentary baked clay object in an oval shape in its original state. The diameter of this object is 3.5cm and 9mm in its maximum thickness. The details are only visible on one side of it, which was flattened and smoothened. On this surface there is a figure of lion placed in his sitting posture facing right. The letters are indicated below the figure of the seated lion. Only five letters remain in the legend. According to the space allowed in the object there would have been another two letters at the beginning of the legend but now they are missing due to the fragmentary nature of the object.
The remaining letters of the legend can be read as… .mukapahana. I suppose that the existing part of the legend can be divided as ……. muka and pahana. The word pasana can be derived from Sanskrit word pasana, which can be used to decribe the earthly substance (Ibid: 624). It was a usual practice in the historical period of Sri Lanka describing the objects made out of rock or rocky substance as pahana. For instance the moonstone was termed in the classical literature as sandakadapahana (Nanamoli (ed) 1971). The incomplete first part of the entire legend may have been the adjective for its successive word pahana.
According to the paleography, the letters of this clay object can be ascribed to the first century AD. The extension and the slightly curved nature of the lower part of the vertical lines of the letters is one of particular characteristic shown by the script at that time (for example, see Paranavitana 1983: 39 p.). Especially the letter ka in the present inscription is showing such development in its form.
4.’Sivaha ‘-belongs to Siva Location:Akurugoda, Tissamaharama in the Hambantota District. Context: un-stratified Medium:metal (lead) Present location:Brgd. B. Munasinghe collection
This coin is 1.3 cm in its diameter. The letters are 4×3 mm in its size. A figure of a fish is placed in the middle of the obverse of the object facing right. This figure is mounted by an elaborated decoration of flower petals running round the edge of the coin. On the reverse side there is a representation of three triangular icons connected with their horizontal lines. The legend is placed below this figure. These three triangular icons may represent the holy Trikutas (Three Mountains) of the Hindus. The legend of this coin can be read as ‘Sivaha‘.
Siva is a god of Trimurti of the Hindus. According to the Puranas the god Siva is responsible for the destruction of the present world (Stutley 1985:131). From the beginning of the second century BC, there is evidence to understand that the name of this god had been used by the people as their personal name.
5. Majjhimaha belongs to Majjhima. Location: Akurugoda, Tissamaharama in the Hambantota District. Context : un-stratified Medium : metal (lead) Present location : Brgd. B. Munasinghe collection
This coin is 1.3cm in its diameter. The obverse of the coin contains a figure of a lion in its standing posture. Its tail is uplifted and the front paw is raised. The six of the letters are 4×3 mm.
On the reverse there is a dot placed on the centre of the coin.
The legend indicated in the reverse of the object can be read as Majjhimaha. This word is used here as a personal name. It is derived form Sanskrit word madhyama, which means ‘middle’,or ‘medium’. The word Majjhima has been used by the people throughout the history in its distinct forms. Even in the modem Sinhala language the word maddyama is used in its modem form as a personal name (see, Maddumabandara, Hevamadduma etc.).
6.’nata Atapanaya ‘ belongs to Atrapani, a dancer Location: Akurugoda, Tissamaharama in the Hambantota district. Context: un-stratified Medium: metal (lead) Present location: Brgd. Munasinghe collection.
To a nobody who has not studied anc ient script or langauge, it reads Nata- Ata Panaya- Perhaps eight of these pieces made up a Panaya [ A piece of eight], an ancient value or money. But the explanantion given by Dr Raj Somadeva is.
This is a coin circular in shape. The diameter of it is about 1.07cms. The reverse of this coin is depicting a human figure in a standing posture. The obverse of the coin contains a legend written in Brahmi characters. The letters of this small inscription can be read as nata atapanaya and belongs to the period between 250-100 BC. This word ‘Atapanaya’ seems to be a proper name. But it is rather an unusual name in the early Prakit language of Sri Lanka. It is important to look at the last syllable of this word. The word terminating with the consonant ‘nata Atapanaya belongs to Atrapani, a dancer Location: Akurugoda, Tissamaharama in the Hambantota district. Context: unstratified Medium: metal (lead)
Advertisements
REPORT THIS AD
Share this:
25 THOUGHTS ON “INSCRIBED – COIN LIKE PIECES OF SRI LANKA.”
Raja
2014/12/04
7:47 am
Hi Sir
I want one coin from your collection. Can you sale that for me?
Reply
sirimunasiha
2014/12/04
10:24 am
What coin type do you want?. Do you collect and do you any coins.etc
Reply
Raja
2014/12/19
9:47 pm
//What coin type do you want?//
I want only one coin from this post. I am not a coin collector. But the coin which has the text “Raya Cinta nama” is what I want.
If you have any similar types of coins which have “Raya Cinta nama” means I want those also. Can you send your mailid to this address.
smrajasubramanian@gmail.com
Raja
2015/01/05
1:04 pm
Did you see my message?
Can you draw the letters in the coin which have “Raya Cinta Nama” and upload here?
The letter “ra” is not clear to see. Can you maximize the letter and upload?
Thanks.
Reply
Raja
2015/01/05
1:18 pm
Please upload the coin number 5 which was mentioned in this post. The coin which have the letters “Majjhimaha”.
May I know how much letters were used to mention the name “Majjhimaha”?
Probably I guess 4 letters. Ma Jhi Ma ha. Is it right?
I want this coin also. Reply me if you like to sale that coins to me. If you not interested to sale that coins please mention here and upload that picture.
Thanks.
Reply
sirimunasiha
2015/01/05
5:26 pm
I am attaching the first coin Cinathirana but the other coin is at the Colombo Museum so I am attaching the readings of another coin off Raja Wickremasinghe collection
On Mon, Jan 5, 2015 at 1:48 PM, Ancient Sri Lankan coins wrote:
>
Reply
Raja
2015/01/08
6:12 pm
Ok. Thanks for the info sir.
//I am attaching the first coin Cinathirana //
means are there more coins with Cinathirana? I hope so.
//but the other coin is at the Colombo Museum //
Can you say that Coin Number and book name sir? Totally How much coins with the name Cinathirana?
// I am attaching the readings of another coin off Raja Wickremasinghe collection //
I am not able to view it sir. May I know where is that coin? Did you send any mail to me?
I have one coin’s picture which have the Letters Ma Ji Ma Ha. But that coin reverse is Elephant. But the coin you mentioned is with Lion and Ma Ji Ma Ha. Can you say that Coin Number and book name for the coin which have Ma Ji Ma Ha and Lion sir?
Thanks.
sirimunasiha
2015/01/11
11:13 pm
I only know of one coin like piece with this sub king perhaps from the south,
Raja
2015/01/12
8:37 pm
Ok Sir Thanks.
Raja
2015/01/08
6:15 pm
Ok. Thanks for the info sir.
//I am attaching the first coin Cinathirana //
means are there more coins with Cinathirana? I hope so.
//but the other coin is at the Colombo Museum //
Can you say that Coin Number and book name sir? Totally How much coins with the name Cinathirana?
// I am attaching the readings of another coin off Raja Wickremasinghe collection //
I am not able to view it sir. May I know where is that coin? Did you send any mail to me?
I have one coin’s picture which have the Letters Ma Ji Ma Ha. But that coin reverse is Elephant. But the coin you mentioned is with Lion and Ma Ji Ma Ha. Can you say that Coin Number and book name for the coin which have Ma Ji Ma Ha and Lion sir?
Thanks.
Reply
Raja
2015/01/22
12:55 am
Sir,
Please reply me whether you like to sale this coin ( Cinathirana ).
Thanks.
Reply
sirimunasiha
2015/01/22
8:09 am
Its at the Colombo Museum
Reply
Raja
2015/01/23
12:46 am
Oh Ok Great Sir. Thanks. Is there any coin number to trace exact place of the coin in that Mueseum?
sirimunasiha
2015/01/23
8:29 am
Sorry You misunderstood me, I gave it to the director incharge of coins Senerath Wickremasinghe ,he is doing his P hD and has not returned them yet
On Fri, Jan 23, 2015 at 1:16 AM, Ancient Sri Lankan coins wrote:
>
Raja
2015/01/27
5:05 am
Oh Ok. Thanks Sir.
Reply
Raja
2017/04/27
4:03 am
Hi Again Sir,
Did he returned the coin? If not means can you give me his contact number? Please send to my below mail. smrajasubramanian@gmail.com
I want this coin or its enlarged photo letter by letter.
Reply
sirimunasiha
2017/05/09
7:10 am
Sorry I dont remember, which coin are you talking about?
Reply
Raja
2017/06/29
3:36 am
The coin which have letters Cinathirana. Below is the link.
Raja
2017/07/25
11:43 pm
Any update in this coin sir?
Raja
2017/11/24
5:11 pm
Are you there?
Raja
2018/08/31
2:18 am
Hi Sir,
May I use this coin photo in my book?
Reply
sirimunasiha
2019/10/09
6:55 pm
Please do.
Reply
Raja
2019/10/10
4:45 am
Thanks Sir. Senerath Wickremasinghe returned the coin to you sir? If means can you sale me the coin?
Raja
2019/10/10
11:21 pm
In which university and batch Senarath Wickramasinghe did PH.D. Sir?
Raja
2018/08/31
2:19 am
Senerath Wickremasinghe returned the coin to you sir? If means can you sale me the coin?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக