Satchithananthan Palanisamy
சிங்களவர்/இந்திய வம்சாவளி/ஈழத் தமிழர்களும்,சாதியமும்!
( # மிகச் # சுருக்கமாக ) 02.
# குறிப்பு :
சாதியம் பற்றிய சிறு கட்டுரை என்றாலும், அனைத்து சாதிகளையும் பற்றிய விளக்கமும் இங்கே நான் கொடுக்கவில்லை.
அதேவேளை கொழும்பில் இப்போது புதிய பேசு பொருளாக உள்ள இரண்டு இந்திய வம்சாவளி சாதிகள், அவர்களின் கலாச்சார மண்டபங்கள்...., அதுபோலவே ஈழத்திலும், சிங்களவர் மத்தியிலும் அரசியலாகிவிட்ட # சில சாதிய விசயஙகளைப் பற்றி மட்டுமே விளக்குகிறேன்.
அரசியலும் சாதியமும்!
<><><><><><><><><><>
(நேற்றைய தொடர்ச்சி...)
# முக்குலத்தோர் என்ற
# கள்ளர் # மறவர் # அகமுடையர் :
1. கள்ளர்:
மன்னர் காலத்திலிருந்து களவை தம் குலத்தொழிலாகக் கொண்டவர்கள்!
2. மறவர்:
மன்னர் காலத்தில் இருந்து பரம்பரையாக அநேகமாக போர்ப்படைகளில் இருந்தோர்!
3.அகமுடையோர்:
இந்த சாதி மன்னர் காலத்தில் இருக்கவில்லை.
இவர்கள் அன்று கோயில்களில் குற்றேவல் (கொடுக்கப்படும் வேலைகளை மட்டும்) செய்தோராவர்.
இவர்களில் தேவர்,பிள்ளைமார
்,உடையார் போன்ற பிரிவுகளும் அடக்கம்.
இதுதவிர வெகுசிலர் நில உரிமையாளர்களாகவும் இருந்தனர்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால்..த
ிருட்டை பரம்பரை தொழிலாகக் கொண்ட கள்ளரும் எப்படி இந்த முக்குலத்தோர் ஆனார்கள் என்பதே!
இந்த கள்ளர்,மறவர்,அகமுடையர் பற்றி இன்னும் ஒரு சுவாரஸ்யமும் உள்ளது.
அது...
"கள்ளர் மறவர் கணத்ததோர் அகம்படியர்...மெல்ல மெல்ல வந்து வெள்ளாளர் ஆனாராம்", என்ற பழமொழியே அது!
அதாவது
கள்ளர் திருடமுடியாமல் போக-
மறவர் போர்த்தொழில் இழக்க-
அகமுடையர் குற்றேவல் தொழில் இழக்க...
பிறகு மெல்ல மெல்ல வேளாண்மையில் ஈடுபட்டு வெள்ளாளர் ஆனார்களாம்!
(வெள்ளாளர் என்று தம்மை மாற்றிக் கொண்டவர்கள் என்று பொருள்)
ஆக...இவர்கள் பரம்பரை என்று பெருமைப்படவோ...ஒருவர் பதிலிறுத்தவாறு..டி என் ஏ பெருமையும் கொள்ளமுடியாத இக்கட்டான நிலை உள்ளது.
# களவுத் # தொழில் # மரபணு என்று பெருமைப்படவும் முடியுமோ?
இதெல்லாம் ஒருபுறமிருக்க இன்றைய இந்த நவீன உலகில் யார்தான் அவரவர் பரம்பரைத் தொழிலைச் செய்கிறார்கள்?
இன்றைய செட்டியார் தெரு நிலைமையை எடுத்துக்கொண்டா
ல்கூட அன்று இங்கு வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்த செட்டியார்கள் இன்று இங்கு இல்லை.
அதன்பிறகு இங்கு முன்னிலை வகித்த மொட்டை வெள்ளாளர் கையில் இருந்த நகைத் தொழிலில் ஒருபகுதி இப்போது முக்குலத்தோர் கைக்குள்ளும் வந்துள்ளது. இப்போது சிலர் சப்பாத்து கடைகூட வைத்துள்ளனர் என்றால் அவர்களை அருந்ததியர்(சக்கிலியர்) பட்டியலில் சேர்க்கலாமா?
இந்த நிலையில் # பரம்பரைத் #தொழில்--
# பரம்பரை # சாதி என்று சாதிப்பது எவ்வகையிலேனும் பொருத்தமாகுமோ?
ஆறுநாட்டு வேளாளர்!
<><><><><><><><><><>
தமிழகத்தில் மன்னர் காலத்தில்...ஆறு நாடுகளில் தொழில் சார்ந்து சிறு சிறு குழுக்களாக பிரிந்து வாழ்ந்த இவர்கள் அன்று தம்மை # ஆறுநாட்டு
# வேளாளர் என்று அடையாளபடுத்திக்
கொண்டனர்.
காலப்போக்கில் இவர்கள் சிதம்பரம்,கடலூர் மாவட்டத்தில் ஒன்றிணைந்ததோடு அதன் பின்னர் திருச்சி மண்ணச்சநல்லூர் போன்ற இன்னும் சில பகுதிகளிலும் வியாபித்தனர்.
# ஆறுநாடு என்பது பின்னர் மருவி
# ஆறநாட்டு ஆகியதும் உண்டு.
அந்த ஆறு நாடுகளும் பின்வருமாறு:
1.பாச்சூர்(குறிஞ்சிப்பாடி)
2.திருப்புடையூர்(படையூர்)
3.மேல் வள்ளுவ நாடு(மேல அரும்பட்டு)
4.கீழ் வள்ளுவ நாடு(கீழ அரும்பட்டு)
5.ஆமூர் நாடு(திருவாமூர்)
6.கரிகாலி நாடு(கருங்குலி)
இவர்களில் கடல் சார்ந்து இருந்தோர் தம்மை # நீர் #வேளாளர் என்று அழைத்துக் கொண்டனர்.
இதைப் பார்க்கும்போது இந்த வேளாளர் வேளாண்மை மட்டுமன்றி
# மீன்பிடித்தலும் செய்தனரா? அவர்கள்
# மீனவர் ஆகவும் இருந்தனரா? என்ற கேள்வியும் எழுவது நியாயமே!
அதுமட்டுமல்லாது # வள்ளுவ # நாட்டில் வாழ்ந்தனர் எனும்போது....
ஆதி திராவிடர் என்ற பறையர் சமூகமும் தங்களை # வள்ளுவர் #பரம்பரை என்று உரிமை கோரும்போது.....
இந்த வெள்ளாளர் ஜாதிக்கும் பறையர் ஜாதிக்கும் உறவு இருந்ததா? என்ற கேள்வியும் எழுகிறதே!
வெள்ளாளர் இலங்கை வந்தபோது ஆரம்பத்தில் வேளாண்மையிலும் சிலர் தோட்டத் தொழிலிலும் ஈடுபட்டாலும் பிறகு மெல்ல மெல்ல ஏனைய வியாபாரங்களிலும்...அதிலும் குறிப்பாக பலசரக்கு,இரும்பு,துணி வியாபாரம்..அதற்கெல்லாம் மேலாக நகை வியாபாரத்தில் ஈடுபட்டனர்.
இந்த சமூகம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்ட காரணம்..
*மிகவும் பொறுமைசாலிகள்!
*சிக்கனக்காரர்கள்.
*சேமிப்பாளர்கள்.
முன்னாளில் இவர்களுக்கு
# புளிச்சக்கீரை என்று ஒரு பட்டப்பெயர் இருந்தது.
அந்தக் கீரையில் இவர்களுக்கு அதிக விருப்பம் என்று சொல்வதற்கு மேல்...
கீரையை தாளித்து இரண்டு மூன்று நாட்களுக்கு உண்டு # செலவைச்
# சிக்கனம் பண்ணியதே இதற்குக் காரணமாம்!
*ஆண்களில் எல்லோரும் அந்த நாட்களில் மீசை தாடியை மழுங்க மழித்து விடுவதால் இவர்களை #மொட்டை #வெள்ளாளர் என்றும் கூறுவதுண்டு.
இவர்களே மலைநாட்டின் அநேக நகரங்களிலும் குறிப்பாக கொழும்பில் அன்று வியாபாரத்தில் கோலோச்சியதோடு முதல் முதலாக கொழும்பில் #ஆறுநாட்டு #வேளாளர் மண்டபமும் கட்டினர்.
இது நடந்தது பல வருடங்களுக்கு முன்பு.
அதெல்லாம் பழங்கதையாகி--இன்று பல விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் ஒரு புதிய அத்தியாயம்--பொத
ு ஒற்றுமை இந்திய வம்சாவளித் தமிழரிடையே மெல்ல மெல்ல பலமடைந்து வந்த நிலையிலேயே இன்று புதிதாக ஒரு
#ஜாதி #கலாச்சாரம் உருவானால் அது ஒட்டுமொத்த தமிழினத்தையும்--அதிலும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழரிடையே பெரும் பிளவுக்கு வழி கோலும்,
அதுவே பிரித்தாளும் பெரும்பான்மை இன அரசியல்வாதிகளுக்கு சாதகமாகும் என்பதே இன்றைய பெருவாரியான தமிழர்களின் கவலையாகும்!
சிங்களவர்:
<><><><><>
கண்டிய நிலவுடைமை (ரதல்ல பரம்பராவ) ஜமீன்தார் வம்சமான நாயக்க பரம்பரையே தொடர்ந்து நாட்டை ஆண்டதும்....
அவர்களின் ஆளுமையின் கீழ் கரையோரச் சிங்களவர்கள்(குறிப்பாக. ..கராவ என்ற மீனவர் சமூகம்) இரண்டாம் பட்சமாக நடத்தப்பட்டமையின் ஆத்திரமே கராவ சமூகத்தின் ரோஹன விஜேவீரவை ஆயுதம் தூக்கத் தூண்டியதில் ஒரு முக்கிய மறைமுகக் காரணமாக அமைந்தது.
அதனால் நாடு முழுவதும் சுமார் 70 ஆயிரம் சிங்கள இளையோர் கொன்றொழிக்கப்பட்டதும்,
இதற்கு... இன்னுமொரு ஒடுக்கப்பட்ட பிரிவில் வந்த பிரதமரானவரும்--
அதன் பிறகு ஜனாதிபதியான பிரேமதாசவே காரணம் ஆகியதும் துரதிருஷ்டமே!
ஆனாலும் அதே சாதியமே இன்று அவரது மகனான சஜித்துக்கு எதிராக பாவிக்கப்படும் பரிதாபகரமான ஒரு அரசியல் ஆயுதமாகியுள்ளதை என்னவென்று சொல்வது?
ஈழத்து சாதிகளும் அரசியலும்!
<><><><><><><><><><><><><><>
1940 களில் நேரு இலங்கை வந்தபோது சிங்கள, யாழ்ப்பாணத் தலைவர்கள்,இந்தி
ய முஸ்லிம் வியாபாரிகளால் அவர் வரவேற்கப்பட்டார்.
திரு/திருமதி பொன்னம்பலமும் அதில் முக்கியமானவர்கள்.
நேரு பொன்னம்பலத்திடம் "இலங்கையின் சிங்கள அரசுக்கு அப்பாலும். .. பாரம்பரிய தொடர்பு உள்ள ஈழத் தமிழர்,இந்தியத் தமிழர், இந்திய மத்திரசு போன்றோரும் இணைந்து செயல்பட்டால்... மொழியால் ஒன்றுபடும் தமிழர் பிரச்சினைகள் பலவற்றுக்கும் இலகுவான தீர்வு காணலாமே" என்ற யோசனைக்கு ஜிஜி பதிலளிக்காமல் மழுப்பினார்.
இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது யாழ்ப்பாண உயர் சாதி மேலாதிக்கமும், இலங்கை சிங்கள உயர்சாதி மேலாதிக்கவாத ஒற்றுமையுமாகும்.
இதற்கு அன்று ஜிஜி க்கு தூண்டுகோலாயிருந்தவர் பிரபல தொழிற்சங்கவாதி ஏ இ குணசிங்க ஆவார்.
மேலும், இந்தியாவில் இருந்து இலங்கை வந்தோர் #கீழ் சாதிக்காரர்கள்--அவர்களோடு எப்படி இணைவது? என்ற ஜிஜி யின் சாதிய இழிமனமும் இதற்கு முக்கிய காரணம்.
அன்று விட்ட பிழை இன்று மொத்த இலங்கைத் தமிழரையும் அலைக்கழிப்பது இதன் காரணமாகவன்றோ?
(இதை ஏற்கனவே எனது #வேர்ப் #பிரச்சினை கட்டுரையில் தெளிவாக விளக்கிவிட்டதால் ஏனையவற்றைத் தவிர்க்கிறேன்)
தமிழரசுக் கட்சியும்/ போராளிக் குழுக்களும்/ சாதியமும்!
<><><><><><><><><><><>
அன்றைய நாளில் யாழ்ப்பாணத்தில் சாதிய பிளவுகளின் விளைவுகளை இங்கே புதிதாக நான் கூறித்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை.
உயர்சாதி மேட்டுக்குடிகளுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கிடையே நடந்த இழுபறியும் அரசியல் காட்டிக்கொடுப்புகள், மற்றும் மதமாற்றங்களுக்கும் காரணமாயிருந்தன, அதனாலேயே இடதுசாரிகள்-- உதாரணமாக சண்முகதாசன்/கந்தசாமி போன்ற இன்னும் பலரும் உருவாகியது யாவரும் அறிவர்.
தமிழரசுக் கட்சியில் அது வெளியே தெரியாவிடிலும்....
புதிதாக தலையெடுத்த ஆயுதக் குழுக்கள் தமிழரசுக் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களதும் சிங்கள மேட்டுக்குடிகளதும் உறவே தமது முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையா
க உள்ளது என்று எண்ணத் தலைப்பட்டனர்.
சிவகுமாரனுக்குப் பிறகு போராட முன்வந்த கரையாரான பிரபாகரன் மனதிலும் இந்த சந்தேகம் வலுவாக இருந்ததை மறுக்க முடியாது.
நலவர்,கரையார் பொருத்ததான அக்கா மங்கையர்க்கரசி அமிர்தலிங்கத்தின் மனக்கிடக்கை அல்லது ஆத்திரத்தை வட்டுக்கோட்டை மாநாட்டுக்குப் போய் அமிர்தலிங்கம் அண்ணர் வீட்டில் தங்கியிருந்த என்னால் அன்று அறிய முடிந்தது.
ஈபிஆர்எல்எஃப் பத்மநாபா, ஏறாவூர் நவாஸ் இன்னும் பலரும்கூட இப்படியான சாதி வசவுகளுக்கு உள்ளாகினர்.
இதற்குள் தீவான் வேற்றுமைகளும் இருந்தன.
பிரபாகரனின் தமிழீழ விடுதலைப் புலிகளில் கரையார் சமூகத்தவர் பலம் பெற்றதற்குக்கூட இந்த சாதீயச் சிக்கலும் ஒரு காரணம் இல்லை என்று யாராவது கூறமுடியுமா?
மலையகத்திலிருந்து கிளிநொச்சி, வன்னிப்பகுதிக்கு குடியேறிய மலையகத்தவரில் ஒடுக்கப்பட்ட பிரிவினரே அதிகம்.
இயற்கையாகவே ஏற்பட்டிருந்த சாதிய தாழ்வுச்சிக்கலும் புலிகளில் போராளிகளாக இணைய அவர்களைத் தூண்டியது என்பது உண்மை.
இந்த நிலையில் ஒரு கட்டுப்பாடான இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் இனி தமிழருக்குள்/ தமது படைக்குள்-- சாதியம் எவ்வகையிலும் ஊடுறுவக்கூடாது என்ற பிரபாகரனின் நேர்த்தியான கணிப்பால் அங்கு சாதீயமே தூர்ந்துபோய் ஒரு புதிய சமுதாயம் உருவாகி வந்ததை யாவரும் அறிவர்.
வடக்கில் அந்த நிலை என்றால் கிழக்கில் நான் கண்டது...
சாதியத்தால் சமூகத்தில் பின்னாலிருந்து இயக்கத்தில் இணைந்து மூன்றாம் நிலை பதவியில் இருந்த ஒரு சில போராளிகளிடம் தம்மை அவமதிப்பு செய்த உயர்சாதிக் காரர்மீது இருந்த வன்மம் இரு சமூக பிரச்சினைகளின்ப
ோது நாசூக்காக/மறைமுகமாக --மிகச் சிலவேளைகளில் வெளிப்பட்டது.
இதை சில உயர்சாதிக்காரர்களே என்னோடு பகிர்ந்துமுள்ளனர். கருணாவுக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.
சமூகம் சார்ந்த சில நியாயமற்ற சம்பவங்களையும்-- நானும் நேரடியாகவே அறிவேன், எனினும் அவை இப்போது தேவையற்றது.
தவிர அன்றைய அவர்களது பொது நிர்வாகத்தில் அவை எந்த பாதிப்பையும் கொண்டுவரவில்லை.
பொதுவாக வடக்கிலும் கிழக்கிலும் சகல துறைகளிலும், சகல விதங்களிலும் இருந்த அந்த கட்டுப்பாடு...
ஆலய அளவில் இப்போது ஆங்காங்கே வடக்கு கிழக்கில் இலேசாக தலை தூக்குகின்றன.
அதாவது '"சாதீய ரீதியான ஆலய நிர்வாகங்கள்'"
என்ற அளவில் மட்டுமே!
எனினும் அது ஒரு பெரும் பாதிப்பாக இங்கே காணப்படவில்லை.
அதேவேளை பொதுவான திருமண/கலாசார மண்டபங்கள் இருந்தாலும். .. சில போராளிகள்/சமூக /அரசியல் தலைவர்கள்/ நேர்மையாளர்கள்/
பெயர்களில் அவை உன்ளனவே ஒழிய..
கொழும்பு வியாபாரத் தமிழர்போல
சாதியின் பெயரால் எந்தவொரு மண்டபமோ...
வேறெதுவுமே வடக்கு கிழக்கில் இல்லை.
அதற்கு முக்கிய காரணமாக நான் கண்டது--அனுபவிப்பது...
இங்கே கல்வியறிவின் வீதம் அதிகமாயுள்ளதாகும்!
அந்தளவில் பிறப்பால் நான் ஒரு மலையகத்தவனாக இருந்தாலும்..
இவ்வகையான கலாச்சார சாதிய கேலித்தனம்/கோமாளித்தனம் இல்லாத இந்த மண்ணில் இருப்பது எனக்கும் மிகப் பெருமையே!
இங்கே நான் குறிப்பிட விரும்பும் மற்றுமொரு விடயம்....
மலையகத்திலோ..மட்டக்களப்பிலோ...
யாழ்ப்பாணத்திலோ...
உயர் சாதிக்காரர்கள் என்போரிடம்
குடிப்பழக்கம் அதிகமாக இல்லாததும்
அவர்களிடையே சேமிப்பு பழக்கம் அதிகமாக இருப்பதும் அவர்களை முன்னேற்றும் ஒரு முக்கிய காரணமாக இருக்கும்போது...
இந்த ஒடுக்கப்பட்ட அல்லது தலித் பிரிவு மக்களிடையே அவை இல்லாதிருப்பதானது....
அவர்களால் பிறருக்கு சவால் விடுத்து முன்னேற முடியாது முட்டுக்கட்டை போடுகிறது என்பதை மனசாட்சியோடு ஏற்பார்களா?
நன்றி :
நான்....
உங்களில் ஒருவன்...
ப.சச்சிதானந்தன்.