வெள்ளி, 13 நவம்பர், 2020

தம்பிதுரை தெலுங்கர் நாயக்கர் மத்தியில் பிரச்சாரம் விகடன்

 

aathi1956 aathi1956@gmail.com

சனி, 23 மார்., 2019, பிற்பகல் 12:28
பெறுநர்: எனக்கு
ஏப்ரல் 18-ம் தேதி, தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்காக, தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள், மற்ற கட்சிகளோடு கூட்டணி அமைத்து, தேர்தலைச் சந்திக்க ஜரூராகத் தயாராகிவிட்டார்கள். கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், வேடசந்தூர், மணப்பாறை, விராலிமலை உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியிருக்கின்றன. அ.தி.மு.க சார்பில் மறுபடியும் தம்பிதுரையே வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
அ.ம.மு.க சார்பில், அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளர் தங்கவேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். தி.மு.க கூட்டணியில் கரூர் நாடாளுமன்றத் தொகுதி, காங்கிரஸ் கட்சிக்கு தாரைவார்க்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தக் கட்சி இன்னமும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. இந்நிலையில், அ.தி.மு.க வேட்பாளரான தம்பிதுரை, இன்று ஜரூராக பிரசாரத்தை எல்லோருக்கும் முன்பாக தொடங்கிவிட்டார். அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பாக, சென்டிமென்டாக கோடாங்கிப்பட்டி என்ற கிராமத்தில் இருக்கும் பட்டாளம்மன், முத்தாளம்மன் என்ற இரண்டு கோயில்களில் வழிப்பட்டுவிட்டுதான் பிரசாரத்தைத் தொடங்குவார். 'சென்டிமென்டாக அது வொர்க் அவுட் ஆகும்' என்று அவர் அதில் நம்பிக்கை வைத்திருக்கிறார்.
இந்த முறையும் இன்று பட்டாளம்மன், முத்தாளம்மன் கோயில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தியவர், வானவேடிக்கை அதிர பிரசாரத்தைத் தொடங்கினார். கோடாங்கிப்பட்டி  ஆதிதிராவிடர் காலனி, சின்ன கோடாங்கிப்பட்டி, ஒத்தையூர், பால்வார்ப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மட்டும் இன்று பிரசாரம் செய்தார். தம்பிதுரையை ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்றனர். அவர்களின் தட்டுகளில் 20 ரூபாய்களைப் போட்டார். 'இவ்வளதானா?' என்று பார்த்த பெண்களை, 'அவர் அவ்வளவு போடுறதே பெருசு' என்று அ.தி.மு.க-வினர் சமாளித்தனர். அத்தனை இடங்களிலும், "உங்க ஊர்ல தண்ணி பிரச்னை தலைவிரிச்சாடுதுன்னு சொன்னீங்க. சமீபத்தில், கலெக்டர், பி.டி.ஓ-வை எல்லாம் அழைச்சுட்டு வந்து, தண்ணி பிரச்னையைத் தீர்க்க முயற்சிபண்ணினேன்.
அ.தி.மு.க-வால்தான் உங்க ஊரு தண்ணி பிரச்னையை முழுமையா தீர்க்க முடியும். அதனால், இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். வேறு யாராலும் தண்ணி பிரச்னையைத் தீர்க்க முடியாது. தயவுசெய்து, மற்றவர்களின் பொய்ப் பிரசாரங்களை நம்ப வேண்டாம்" என்று பேசினார். ஒத்தையூர் பகுதியிலும் இதே ரீதியில் பேசி வாக்குகள் சேகரித்தார். அப்போது, தொண்டர் ஒருவர் தம்பிதுரையின் காதில் ஏதோ சொல்ல, ஞாபகம் வந்தவராக, தெலுங்கில் பேசி வாக்குகள் கேட்டார். அந்த ஊரில் வசிக்கும் அனைவரும் தெலுங்கு பேசும் நாயக்கர்கள் என்பதால், தம்பிதுரை தெலுங்கில் பேசி ஓட்டுக் கேட்டதாகச் சொல்லப்பட்டது.

வந்தேறி அடையாளமறைப்பு உருமறைப்பு தேர்தல் வேட்பாளர் அதிமுக
பதவி அமைச்சர்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக