| செவ்., 11 ஜூன், 2019, பிற்பகல் 4:58 | |||
ஆத்தித்தி
நான் வீட்டுக்குள் வந்து பார்த்தேன்.
பிறந்து ஒரு ஆண்டும் பத்து மாதமும் ஆன ஒரு பன்னிக்குட்டி 'அப்பா' என்றபடி ஓடி வந்து காலைக் கட்டிக் கொண்டது.
ஆமாம் இது உண்மையில் ஒரு பன்றிக்குட்டிதான்.
நடு வீட்டில் 'ஆயி'யும் 'ஒண்ணூ'உம் இருந்துவிட்டு எந்த கவலையும் இல்லாமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருப்பதை வேறு எப்படி அழைப்பது?!
நான் அடுப்படியில் 'தன்னீ' குடித்துக்கொண்டிருந்த 'அம்மா'வைப் பார்த்தேன்.
அதைக் கவனித்துவிட்ட
பன்னிக்குட்டி என்னை விட்டுவிட்டு குடுகுடுவென்று அவளை நோக்கி ஓடியது.
நான் முடிந்த அளவு மெதுவாக ஓடியும் அது முந்திக்கொண்டுவிட்டது.
முதலில் சென்றடைந்த அது அவளை இறுக கட்டிக்கொண்டு என்னைக் கையால் தள்ளிவிட்டு 'போ' என்றது.
"போம்மா! ஓ அம்மாவ நீயே வச்சிக்கோ!" என்று நான் இருக்கையின் அருகே தரையில் அமர்ந்தேன்.
என் ராஜதந்திரம் வேலை செய்தது.
அது அம்மாவை விட்டுவிட்டு ஓடிவந்து என் பின்புறமாக எனது கழுத்தைக் கட்டிக் கொண்டு என் முதுகில் தொற்றியது.
'உப்புட்டி' என்றது.
சிறிது நேரம் முன்னும் பின்னும் ஆடினேன்.
பிறகு அது இறங்கி முன்னே வந்து நின்று 'தம்மோ' 'பவ்பவ்' என்று குதித்தது.
"நம்ம தங்கம் தெருநாயப் பாத்து கொலச்சத சொல்லுதா" என்று அவள் விளக்கம் கூறினாள்.
அது சுவர் அலமாரியின் இரண்டாம் அடுக்கை எட்டி 'இமோ'வை எடுத்துக்கொண்டு வந்து 'இன்னா' என்று நீட்டியது.
'டீ'யைக் காட்டி 'பாட்டித்தா' என்றது.
தொலைக்காட்சியில் கண்மணி குழந்தை பாடல்கள் பார்த்துக்கொண்டே 'மாமம்' சாப்பிட்டது.
இரண்டு துண்டுகள் சாப்பிட்டுவிட்டு மூன்றாவது துண்டை வாயிலிருந்து துப்பி என் வாயில் ஊட்டியது.
நான் ஒரு குவளையில் 'பாவு' ஊற்றி 'பிக்கியை' அதில் முக்கி கொடுத்தேன்.
தலையை இடவலமாக ஆட்டி 'வேய்ண்டாம்' என்றது.
நான் அது 'சாக்கி' என்று பொய் சொல்லி ஊட்டப் பார்த்தேன்.
அந்த பன்னிக்குட்டி ஏமாறவில்லை.
'போஉம்' என்று உள்ளங்கையை உயர்த்தி கூறியது.
"வேற 'பஅம்' இருக்கா?" என்று கேட்டேன்.
"இல்லையே! இவளுக்கு 'இட்டி' வாங்கிட்டு வாரீங்களா?"
என்று அவள் கேட்டாள்.
"சரி"என்று கூறிவிட்டு
'இண்டி'யின் 'சாயி'யை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல கதவைத்தான் திறந்தேன்,
மின்னல் வேகத்தில் அந்த பன்னிக்குட்டி வெளிய ஓடிவிட்டது.
நான் அதைப் பிடித்து நிறுத்தி தூக்கிக்கொண்டு உள்ளே போக முயன்றேன்.
அது உடலை வில்லாக வளைத்து இரண்டு கால்களையும் காற்றில் ஒருமுறை வலுவாக உதறியது.
பிறகு கைகால்களை உதைத்துக்கொண்டு அழத் தொடங்கியது.
விரிந்த உள்ளங்கையையை வெளிப்பக்கம் நோக்கி காட்டியது.
"உள்ள வா இல்லன்னா 'பாயி'ட்ட புடிச்சு குடுத்துருவேன்" என்று அவள் சுவரில் இருந்த பல்லியைக் காட்டினாள்.
அது இப்போது இன்னும் சத்தமாக அழுதது.
நான் தெருவில் இறங்கி நின்றுகொண்டேன்.
அது கண்களில் கண்ணீருடன் தன் ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் வாயில் வைத்து சூப்ப ஆரம்பித்தது.
'காக்கா' ஒன்று பறந்து சென்றது.
நான் காக்கா 'பாட்டி' ஒரு வரி பாடினேன்.
அது மோவாயைத் தூக்கி கண்களைச் சுருக்கி 'அப்பம்..?' என்றது.
எனக்கு அடுத்த வரி தெரியவில்லை.
நல்லவேளையாக சிற்றுந்து ஒன்று கடந்து போனது 'பச்... டாட்டா...' என்று பன்னிக்குட்டி கையசைத்தது.
தெருவில் போன யாரோ ஒரு பெண்ணை 'அக்கா' என்று கூப்பிட்டது.
அவள் திரும்பி பார்த்தாள்.
அவள் தோளில் ஒரு குழந்தை படுத்திருந்தது.
அதுதான் 'பாப்பா' என்று பன்னிக்குட்டி எனக்கு சொல்லிக்கொடுத்தது.
பிறகு ஒரு 'ஆவு' தனது குட்டிகளுடன் நடந்து போனது.
"அது என்னதுமா?" என்று கேட்டேன்.
'ஆத்தித்தி' என்று கைகளைத் தட்டிக்கொண்டே பெருமையாகக் கூறியது, ஏதோ தான்தான் அதைப் படைத்தது போல!
அதேபோல ஒரு 'கோயி'யும் அதன் 'குச்சி'களும் கடந்து போயின.
ஆட்காட்டி விரலால் மரத்தில் ஒரு இடத்தைச் சுட்டிக்காட்டி 'குயீ' என்றது.
குயிலா குருவியா என்று நான் பார்க்கவில்லை.
இரண்டும் ஒன்றுதானே?!
நான் அதன் கழுத்தில் ஒரு முத்தம் கொடுத்தேன்.
அது கூச்சத்தில் சிரித்துக் கொண்டே நெளிந்தது.
ஒரு 'ஆட்டூ'வில் 'ஆச்சி'யும் 'தாத்தா'வும் 'சின்னா மாமா' வும் வந்து இறங்கினார்கள்.
அது திமிரி கீழே இறங்கி அவர்களிடம் ஓடிச்சென்று இரண்டு கைகளை அகல விரித்தவாறு உயர்த்தி 'ஊக்கு' என்றது.
பன்னிக்குட்டிக்கு தெரிந்த வார்த்தைகள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டுவிட்டதால் இக்கதை இத்துடன் முடிகிறது.
நன்றி!
---------
திருத்து · நீக்கு
Aathimoola Perumal Prakash
ஆத்தித்தி
நான் வீட்டுக்குள் வந்து பார்த்தேன்.
பிறந்து ஒரு ஆண்டும் பத்து மாதமும் ஆன ஒரு பன்னிக்குட்டி 'அப்பா' என்றபடி ஓடி வந்து காலைக் கட்டிக் கொண்டது.
ஆமாம் இது உண்மையில் ஒரு பன்றிக்குட்டிதான்.
நடு வீட்டில் 'ஆயி'யும் 'ஒண்ணூ'உம் இருந்துவிட்டு எந்த கவலையும் இல்லாமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருப்பதை வேறு எப்படி அழைப்பது?!
நான் அடுப்படியில் 'தன்னீ' குடித்துக்கொண்டிருந்த 'அம்மா'வைப் பார்த்தேன்.
அதைக் கவனித்துவிட்ட
பன்னிக்குட்டி என்னை விட்டுவிட்டு குடுகுடுவென்று அவளை நோக்கி ஓடியது.
நான் முடிந்த அளவு மெதுவாக ஓடியும் அது முந்திக்கொண்டுவ
ிட்டது.
முதலில் சென்றடைந்த அது அவளை இறுக கட்டிக்கொண்டு என்னைக் கையால் தள்ளிவிட்டு 'போ' என்றது.
"போம்மா! ஓ அம்மாவ நீயே வச்சிக்கோ!" என்று நான் இருக்கையின் அருகே தரையில் அமர்ந்தேன்.
என் ராஜதந்திரம் வேலை செய்தது.
அது அம்மாவை விட்டுவிட்டு ஓடிவந்து என் பின்புறமாக எனது கழுத்தைக் கட்டிக் கொண்டு என் முதுகில் தொற்றியது.
'உப்புட்டி' என்றது.
சிறிது நேரம் முன்னும் பின்னும் ஆடினேன்.
பிறகு அது இறங்கி 'இமோ'வை எடுத்துக்கொண்டு வந்து 'டீ'யைக் காட்டி 'பாட்டித்தா' என்றது.
கண்மணி குழந்தை பாடல்கள் பார்த்துக்கொண்டே 'மாமம்' சாப்பிட்டது.
இரண்டு துண்டுகள் சாப்பிட்டுவிட்ட
ு மூன்றாவது துண்டை வாயிலிருந்து துப்பி என் வாயில் ஊட்டியது.
நான் ஒரு குவளையில் 'பாவு' ஊற்றி 'பிக்கியை' அதில் முக்கி கொடுத்தேன்.
தலையை இடவலமாக ஆட்டி 'வேய்ண்டாம்' என்றது.
நான் அது 'சாக்கி' என்று பொய் சொல்லி ஊட்டப் பார்த்தேன்.
அந்த பன்னிக்குட்டி ஏமாறவில்லை.
'போஉம்' என்று உள்ளங்கையை உயர்த்தி கூறியது.
"வேற 'பஅம்' இருக்கா?" என்று கேட்டேன்.
"இல்லையே! இவளுக்கு 'இட்டி' வாங்கிட்டு வாரீங்களா?"
என்று அவள் கேட்டாள்.
"சரி"என்று கூறிவிட்டு
'இண்டி'யின் 'சாயி'யை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல கதவைத்தான் திறந்தேன்,
மின்னல் வேகத்தில் அந்த பன்னிக்குட்டி வெளிய ஓடிவிட்டது.
நான் அதைப் பிடித்து நிறுத்தி தூக்கிக்கொண்டு உள்ளே போக முயன்றேன்.
அது உடலை வில்லாக வளைத்து இரண்டு கால்களையும் காற்றில் ஒருமுறை வலுவாக உதறியது.
பிறகு அழத் தொடங்கியது.
விரிந்த உள்ளங்கையையை வெளிப்பக்கம் நோக்கி காட்டியது.
"உள்ள வா இல்லன்னா 'பாயி'ட்ட புடிச்சு குடுத்துருவேன்" என்று அவள் சுவரில் இருந்த பல்லியைக் காட்டினாள்.
அது இப்போது சத்தமாக அழுதது நான் தெருவில் இறங்கி நின்றுகொண்டேன்.
அது தன் ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் வாயில் வைத்து சூப்ப ஆரம்பித்தது.
'காக்கா' ஒன்று பறந்து சென்றது.
நான் காக்கா 'பாட்டி' ஒரு வரி பாடினேன்.
அது மோவாயைத் தூக்கி கண்களைச் சுருக்கி 'அப்பம்..?' என்றது.
எனக்கு அடுத்த வரி தெரியவில்லை.
நல்லவேளையாக சிற்றுந்து ஒன்று கடந்து போனது 'பச்... டாட்டா...' என்று பன்னிக்குட்டி கையசைத்தது.
தெருவில் போன யாரோ ஒரு பெண்ணை 'அக்கா' என்று கூப்பிட்டது.
அவள் திரும்பி பார்த்தாள்.
அவள் தோளில் ஒரு குழந்தை படுத்திருந்தது.
அதன் பெயர் 'பாப்பா' என்று பன்னிக்குட்டி எனக்கு சொல்லிக்கொடுத்தது.
பிறகு ஒரு 'ஆவு' தனது குட்டிகளுடன் நடந்து போனது.
"அது என்னதுமா?" என்று கேட்டேன்.
'ஆத்தித்தி' என்று கைகளைத் தட்டிக்கொண்டே பெருமையாகக் கூறியது.
அதேபோல ஒரு 'கோயி'யும் அதன் 'குச்சி'களும் கடந்து போயின.
ஆட்காட்டி விரலால் மரத்தில் ஒரு இடத்தைச் சுட்டிக்காட்டி 'குயீ' என்றது.
குயிலா குருவியா என்று நான் பார்க்கவில்லை.
இரண்டும் ஒன்றுதானே?!
நான் அதன் கழுத்தில் ஒரு முத்தம் கொடுத்தேன்.
அது கூச்சத்தில் சிரித்துக் கொண்டே நெளிந்தது.
ஒரு 'ஆட்டூ'வில் 'ஆச்சி'யும் 'தாத்தா'வும் 'சின்னா மாமா' வும் வந்து இறங்கினார்கள்.
அது திமிரி கீழே இறங்கி அவர்களிடம் ஓடிச்சென்று இரண்டு கைகளை அகல விரித்தவாறு உயர்த்தி 'ஊக்கு' என்றது.
பன்னிக்குட்டிக்கு தெரிந்த வார்த்தைகள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டுவிட்டதால் இக்கதை இத்துடன் முடிகிறது.
நன்றி!
1 ஜூன், பிற்பகல் 4:06 ·
தனியுரிமை: பொது
படங்களைச் சேர் · சேமி
Mutharasan Venugopal மற்றும் 43 பேர்
சபரிநாதன் பூசுரன்
அட்டகாசம்
1 · அன்பு · பதிலளி · நீக்கு · ஜூன் 1
AK Arasu
1 · அன்பு · பதிலளி · நீக்கு · ஜூன் 1
அசாேக வர்மன்
வாழ்க..
1 · அன்பு · பதிலளி · நீக்கு · ஜூன் 1
Vishnu Shivaa
சிறப்பு
பன்னிக்குட்டியின் புகைப்படமும் ஏற்றி
இருந்தால் கதைக்கு இன்னும் மெருகூட்டியிருக்கலாம்..
திருத்தப்பட்டது · 1 · விரும்பு ·
பதிலளி · நீக்கு · ஜூன் 1
வபிமுமு சக்திவேல்ராசா
இனிமை.
1 · விரும்பு · பதிலளி · நீக்கு ·
ஜூன் 1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக