ஞாயிறு, 15 நவம்பர், 2020

பாண்டியர் நீர்மேலாண்மை பற்றி

 

aathi tamil aathi1956@gmail.com

செவ்., 9 ஜூலை, 2019, பிற்பகல் 1:02
பெறுநர்: எனக்கு
Subramanian Kumar , Ramesh Dhandapani மற்றும் 2 பேருடன் இருக்கிறார்.
பாண்டியர் ஆட்சியில் ஏரி வெட்டிய பூதங்கள்!
கண்ணனை போல் கறுத்த வருணனே கடல்நீரை சூரியக் கதிர்களால் அள்ளி அவன் சங்கொலி போல் இடியால் முழக்கி அவன் உடல் போல் மேகங்களை கறுப்பாக்கி அவன் அம்புபோல் மழைத்துளிகளை பொழி. நல்லவர்கள் வாழட்டும்;
நானும் நீராடி மகிழ்கிறேன்' என்பதை'ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறிஊழி முதல்வன் உருவம்போல்மெய் கறுத்துப்பாழியந் தோளுடைப் பத்மநாபன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல்நின்றுஅதிர்ந்து தாழாதே சாரங்கமுதைத்த சரமழை போல்... ' என்பாள் ஆண்டாள்.
தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் துணை கண்காணிப்பாளர் கி.ஸ்ரீதரனுடன் பாண்டிய நாட்டு கல்வெட்டுகளை படிப்போம்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையை தலைமையிடமாக்கி தென் தமிழகத்தை பெருமையுடன் ஆண்டோர் முற்கால பாண்டியர்கள்.
அவர்களின் காலத்தில் இருந்தே நீர்நிலைகள் உருவாக்கப்பட்ட செய்திகளை கூறும் மடைக் கல்வெட்டுகள் நிறைய கிடைக்கின்றன.
பிற்கால பாண்டியர்களும் தங்களின் வரலாறு சொல்லும் செப்பேடுகளில் பூதங்களின் துணையோடு பெரிய ஏரிகளை தோற்றுவித்ததாக பெருமை பேசுகின்றனர். பாண்டிய மன்னர்களுக்கு கீழ் நிர்வாகம் செய்த நாடு கிழவர்களும் அதையே சொல்கின்றனர்.பரந்து விரிந்து கிடக்கும் பாண்டிய நாட்டுக்கு தண்ணீரை வார்க்கும் சேவையை வைகை உப்பாறு, குண்டாறு, சுருளியாறு, வெள்ளாறு, விரிகளியாறு, தாமிரபரணி என்ற ஆறுகள் செய்கின்றன.
இவை தவிர தண்பொருந்தம் நட்டாறு, வீரபாண்டியன் பாலாறு, பராக்கிரம பாண்டிய பேராறு, ஸ்ரீவல்லவ பேராறு, வாசுதேவப்பேராறு, வீரகேரளன் பிலாறு, முடிகொண்ட சோழப்பேராறு, தியாகன்சிறிய பேராறு என்னும் மன்னர்கள் உருவாக்கிய ஆறுகளும் இருந்ததை பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுகள் சுட்டுகின்றன.
அதேபோல பராக்கிரம பாண்டியன் கால்வாய் அரிகேசரி வாய்க்கால் திருநாராயண வாய்க்கால், சேரன்மாதேவி வாய்க்கால், பரமேஸ்வர வாய்க்கால், ராமதேவ வாய்க்கால் என மன்னர்களின் பெயர்களில் நீர்க்கால்களும் இருந்தன.
எல்லாவற்றையும் நோக்கும்போது மிகக்குறைந்த ஆறுகளில் ஓடி வரும் நீரை ஏரி, குளங்களில் நிரப்பினால் மட்டுமே கோடையிலும் வாடையிலும் தண்ணீர் கிடைக்கும் என்ற நிலை பாண்டியர்களுக்க
ு.இதனால் ஏரிகளையும் குளங்களையும் நிறைய வெட்டியுள்ளனர். அவை பற்றிய கல்வெட்டுகள் பாண்டிய நாடெங்கும் விரவிக் கிடக்கின்றன. அவற்றில் மன்னர்கள் மற்றும் அவர்களின் வழிவந்தோர் பெயர் பொறித்த கல்வெட்டு சொல்லும் செய்திகளை இன்று பார்க்கலாம்.
வைகை கரையில் நின்றசீர் நெடுமாறன் அமைத்த நீர் மதகு அழிவுக்குள்ளாகிய செய்தியை வைகை ஆற்றில் துணி துவைக்க பயன்படுத்தப்பட்ட மடைப்பலகை கல்லில் இருந்த வட்டெழுத்து தான் காட்டிக் கொடுத்தது.
அதேபோல் திண்டுக்கல் மாவட்டம், ராமநாதபுரம் பாறைக் கல்வெட்டால் தான் அங்கு இரண்டாம் வரகுணன் காலத்தில் ஏரி வெட்டப்பட்ட செய்தியே வெளியே தெரிந்தது.
மதுரை மாவட்டத்தில் உள்ள நத்தத்தின் தென்பகுதியில் முற்கால பாண்டியர் காலத்தில் துவாரபதி நாட்டு தலைவராக விளங்கிய வேளாளன் ஒருவன் கண்மாய் வெட்டியதும் மடைகளை உருவாக்கியதையும் வட்டெழுத்து கல்வெட்டு கூறுகிறது.
திருமங்கலம் ஒன்றியத்தில் உள்ள உறப்பனுார் கிராமத்திலும் முற்கால பாண்டியர்கள் உருவாக்கிய கண்மாய் 2000 ஏக்கர் நிலத்துக்கு பாசன வசதியை வழங்கியது. இப்போதும் இந்த கண்மாய் ஒன்பது ஏரிகளுக்கு நீரை வழங்குகிறது.அதற்கேற்ப இந்த ஏரியின் உள்வாய் பகுதியில் ஏணி போன்ற அமைப்புடைய கல்மடைகள் உள்ளன. நடு கல்மடையில் உள்ள தமிழ் கிரந்த கல்வெட்டில் ஸ்ரீவீரநாராயணன் ஸ்ரீகரிவரமல்லன் என்ற முற்கால பாண்டியனின் பெயரும் பட்டப்பெயரும் உள்ளன. இவர் பெயர் பொறித்த கல்வெட்டுகள் பல இடங்களில் கிடைக்கின்றன.
நெல்லை பகுதியில் தாமிரபரணி ஆற்றையொட்டி திருவழுதிவளநாடு, ஸ்ரீவல்லபவளநாடு, பராந்தகவளநாடு என பல பகுதிகளுக்கு வளநாடுகள் என்ற பெயரை முற்கால பாண்டியர்கள் சூட்டியுள்ளனர்.
அங்கிருந்த நாட்டார் வேளாண் குடிகளுக்கு ஏரி, குளங்களை வெட்டியுள்ளனர். அரசர்கள் உருவாக்கிய குளங்களுக்கு சாட்சியாக மாடக்குளம் கண்மாய், மாறனுார் பெருங்குளம், இருப்பைக்குடி வள்ளைக்குளம், கொழுவூர் அரசங்குளம், நெல்மலி பெருங்குளம், பள்ளிக்குறிச்சிக்குளம், ஸ்ரீவில்லிபுத்துார் பராங்குசப் புத்துார் பெருங்குளம் என்னும் நீர்நிலை சார்ந்த ஊர்களே உள்ளன.
இதை வைத்தே மாடக்குளக்கீழ், வேலுார் குளக்கீழ், குன்றத்துார் குளக்கீழ், ராஜசிங்க பெருங்குளக்கீழ், வீரநாராயணக் குளக்கீழ் என நாட்டுப்பிரிவை பிரிக்க குளக்கீழ் என்ற சொல்லாடலை பயன்படுத்தியுள்
ளனர்.
வேளாண்மைக்கு உதவும் குளங்களிலும் கண்மாய்கள் எனப்படும் ஏரிகளிலும் நீரை முறையாக பங்கிட்டு பாய்ச்சும் வகையில் மதகு, மடை, துாம்பு, குமுளி, புதவம், கலிங்கு, மடுப்பு உள்ளிட்ட அமைப்புகளை ஏற்படுத்தி உள்ளனர்.
அதிலிருந்து நீர் பாய பராக்கிரம பாண்டியன் பேராறு வீரபாண்டியன் கால் ஸ்ரீவல்லவப் பேராறு, வாசுதேவப் பேராறு, தியாகன்சிறிய பேராறு, கிழவனேரி, புள்ளனேரி, கலியனேரி என பல நீர்ப்பாசன வாய்க்கால்கள் உள்ளிட்ட அமைப்புகளை தங்களின் பெயரால் அரசர்களும் அரசு அதிகாரிகளும் ஏற்படுத்தினர்.
வரலாற்றில் ஏரி, குளங்கள்மதுரைக்கு அருகில் உள்ள திருவாதவூரில் உள்ள குளத்தை பாஞ்சாலராஜன் கட்டியதும் அதற்கு மடை அமைத்ததையும் அங்குள்ள கல்வெட்டு விளக்குகிறது.
அங்குள்ள மடைத்துாண் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தைச் சேர்ந்த பராக்கிரம சிங்கதேவன் கட்டியதை அதிலுள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.ம
ேலவளவு பரம்பு கண்மாய் பாறையில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் 21ம் ஆட்சியாண்டு கல்வெட்டு; சக்கரக்கையன் என்பவர் கரையில் கல் பதித்து கலிங்கு நட்டு குளத்தை பாதுகாத்த செய்தி உள்ளது.
திருவாதவூருக்கு அருகில் உள்ள ஆமூர் கண்மாய்க்கு இடையில் கிடைத்த கல்வெட்டில் 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்து உள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்த
ுாரில் உள்ள ஏரியான பராங்குசப் பேரேரி பற்றிய வட்டெழுத்து கல்வெட்டு பள்ளிகொண்ட பெருமாள் என்றழைக்கப்படும் வடபத்திரசாயி கோவிலில் உள்ளது.
இரண்டாம் ராஜசிம்மனின் காலத்தைச் சேர்ந்த இதில் ஸ்ரீவில்லிபுத்த
ுாருக்கு பராங்குசப்புத்துார் என்ற பெயர் இருந்ததை தெரிவிக்கிறது.ப
ின்வந்த சோழர்களும் இந்த ஏரியின் நீர்த்தொட்டியை ஏழு கண் அமைப்புடன் அனைத்து பகுதிகளுக்கும் நீர் பாய்ச்சும் வசதியுடன் செய்துள்ளனர்.
துாம்பு வழியாக வெளியேறும் நீர் வேகத்தை கட்டுப்படுத்த நடப்பட்டுள்ள கல்லில் இந்த தகவல் உள்ளது. இதில் தண்டுடன் கூடிய தாமரை மலர் மீது அமர்ந்த விநாயகரின் புடைப்புச் சிற்பம் உள்ளது.
ராஜ துரோகம்புரவேரிக் குளத்தை அனுபவித்து வந்த ஒருவர் அதற்கான கடமைகளை செய்யாமலும் குடிமை வரிகளை செலுத்தாமலும் இருந்துள்ளார். அவர் ராஜ துரோகம், ஊர்த் துரோகம் செய்ததாக அறிவித்து குளத்தை சொக்கலிங்கபுரத்தில் உள்ள அழகிய சோழீஸ்வரமுடையாருக்கு ஊர்ச் சபையினர் நிலவிலை பிரமாணம் செய்து கொடுத்துள்ளனர்.
இப்படியாக பாண்டிய நாட்டு கண்மாய்களில் எல்லாம் கலிங்கு மடை மதகுகளை செய்து கொடுத்தோர் கரை அமைத்தோர் சீர் செய்தோரின் பெயர்கள் கல்வெட்டுகளாக பொறிக்கப்பட்டு உள்ளன.
கண்மாய்களில் மூழ்கிக் கிடக்கும் கல்வெட்டுகளில் தேங்கிக் கிடக்கும் சுவாரஸ்யமான கதைகளை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.- நடுவூர் சிவா naduvoorsiva@gmail.com
- தினமலர்
20 மணி நேரம் · பொது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக