| செவ்., 23 ஜூலை, 2019, பிற்பகல் 5:51 | |||
ஜெ முருகேசன்
"இலக்கியங்களில் தமிழ்நாடு!!"
- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ.மணியரசன் அவர்கள்.
"தமிழ்நாடு என மொழியின் பெயரில் ஒரு நாடு, ஒரு தேசிய இனம் இருந்ததாக இலக்கியக் குறிப்புகள் இருந்ததற்கான சான்றுகள் :-
“வையக வரைப்பில் தமிழகம் கேட்பப்…”
– புறநானூறு, 168.
“தமிழகப் படுத்த விமிழிசை முரசின்..”
– அகநானூறு, 227.
“தண்டமிழ் வேலித் தமிழ்நாட்டகம் எல்லாம்..”
– பரிபாடல், 410.
“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய..”
– சிலப்பதிகாரம், காட்சிக்காதை, 165.
“தென் தமிழ்நாட்டு அதன் பொதியில்..”
– கம்பராமாயணம், சுக்ரீவன் கூற்று.
“தமிழ்நாட்டில் போனார் ஞானத் தலைவர்”
– சேக்கிழார், பெரிய புராணம், 21 திருநாவுக்கரசு நாயனார் புராணம் பகுதி, பாடல் எண் – 289.
“அரும்பெறல் தமிழ்நாடுற்ற தீங்கினுக்கு”
– பெரிய புராணம், திருஞானசம்பந்தம
ூர்த்தி நாயனார் புராணம் பகுதி, பாடல் எண் – 604.
தொல்காப்பியத்தில் “செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்” என்பது 496-ஆம் நூற்பா. வினாவும் அதற்கான விடையும் தவறில்லாமல் – குழப்பமில்லாமல் இருக்க வேண்டும் என்பது இதன் பொருள். இதற்கு உரை எழுதிய இளம்பூரணர் குழப்பமில்லாத வினாவுக்கும் விடைக்கும் ஓர் எடுத்துக்காட்டு கூறினார்.
“எடுத்துக்காட்டாக, நும்நாடு யாது என்றால் தமிழ்நாடு என்றல்” என்று கூறினார்!
உன் நாடு எது என்றால் சோழ நாடு, பாண்டிய நாடு என்று சொல்வது குழப்பமானது. அப்பெயர்கள் அரச பரம்பரை சார்ந்த ஆட்சிப் பகுதிகள். அவை நாடன்று; தமிழ்நாட்டில் பல்வேறு அரசர்களின் ஆட்சி இருக்கிறது என்ற பொருளில்தான் இந்த எடுத்துக்காட்டை இளம்பூரணர் கூறுகிறார்.
தமிழர் என்ற இனப்பெயர் சங்க இலக்கியம் தொட்டு, பல்வேறு இலக்கியங்களில் காணப்படுகிறது.
“தமிழ் தலை மயங்கிய தலையாலங்கானத்து”
– புறம், 19.
தலையாலங்கானம் என்ற இடத்தில் பாண்டியன் நெடுஞ்செழியன் சேர, சோழ – தமிழ்ப் படைகளை வென்றான். இரு தரப்பிலும் தமிழர்கள் போரிட்டனர். எனவே யார் எந்தப் பக்கம் போரிடுகின்றனர் என்பது குழப்பமாயிருந்தது. இங்கு தமிழ் என்றது தமிழரைக் குறித்தது.
“செறிகழல் வேந்தன் தென்தமிழ் ஆற்றல்
அறியாது மலைந்த ஆரிய மன்னர்” என்று “தமிழ்” என்பதைத் தமிழர் என்ற பொருளில் கூறினார் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள்.
அதன்பிறகு – வந்த அப்பர் (திருநாவுக்கரசர்) “ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்” என்று ஆரியரும், தமிழரும் வெவ்வேறு இரு இனத்தார் என்பதைத் தெளிவாகக் கூறினார். பூதத்தாழ்வார் “இருந்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன், பெருந்தமிழன் நல்லேன் பெரிது” என்று தன்னைப் பெருந்தமிழனாகக் கூறி பெருமைப்பட்டார்."
ஜெ முருகேசன்
“பாரததேசம்”
என்ற பெயரில் ஒரு தேசம் இருந்ததாக இதிகாசச்சான்று, புராணச்சான்று, வரலாற்றுச் சான்று எதுவுமில்லை!
- ஐயா பெ.மணியரசன்.
Aathimoola Perumal Prakash
?m=0
இலக்கியத்தில் தமிழர்நாடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக