| திங்., 29 ஜூலை, 2019, முற்பகல் 11:28 | |||
அழகன் தமிழன்
வேங்கட மலைத்தொடர் வடபெண்ணை ஆறு வரை தொடர்ந்து நிற்கிறது.ஆகவே தமிழரின் தொல்காப்பியர் கால வட எல்லை வட பெண்ணை ஆறு வரையாகும்.
தேவாரப் பாடல் பெற்ற தலங்களான 276 தளங்களுள் 271 தளங்கள் தொல்காப்பியர் கால தமிழ்த் தேசத்துள் அமைந்துள்ளன.
தொண்டை நாடு (32),
நடு நாடு (22),
காவிரியாற்றின் வட கரை (63),
காவிரியாற்றின் தென் கரை(128),
பாண்டிய நாடு (14),
கொங்கு நாடு (7),
மலை நாடு (1),
துளுவ நாடு (1),
ஈழ நாடு (2),
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட காவிரி தென்கரைத் தலமான திருவிடைவாய் மற்றும் திருக்கிளியன்னவூர் ஆகிய இடங்களையும் சேர்த்து 271 சிவன் கோயில்கள் தமிழ்த்தேசத்திற்குள் அடங்கும்.
தொல்காப்பியர் கால தமிழர் எல்லைக்கு அப்பாற்ட்ட கோவில்கள் ஐந்தே ஐந்து தான்.அவை,
வட நாட்டுத் தலங்கள் பட்டியல்:-
1)ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில்
2)இந்திரநீல பருப்பதம்
3)அநேகதங்காபதம்
4)கேதார்நாத் கோயில்
5)கயிலை மலை.
அதே போல் 108 திவ்விய தேச தளங்களுள் 96 தமிழ்த்தேச எல்லைக்குள் இருக்கின்றன.
சோழநாட்டு திருப்பதிகள் - 40
தொண்டைநாட்டு திருப்பதிகள் - 23
நடுநாட்டு திருப்பதிகள் - 2
நில உலகில் காணமுடியாத திருப்பதிகள் - 2
பாண்டியநாட்டுத் திருப்பதிகள் - 18
மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
பத்தே பத்து தான் தமிழ்த்தேச எல்லைக்கு அப்பால் உள்ளன.
வடநாட்டு திருப்பதிகள் - 10
அவை,
97)அகோபிலம் (சிங்கவேள்குன்றம்), ஆந்திரம்
98,திருவயோத்தி, உத்தரப் பிரதேசம்
99,நைமிசாரண்யம், உத்தரப் பிரதேசம்
100,முக்திநாத், நேபாளம்
101,பத்ரிகாச்ரமம், உத்தராகண்ட்
102,தேவப்ரயாகை, உத்தராகண்ட்
103,திருப்பிரிதி, உத்தராகண்ட்
104,திருத்துவாரகை, குஜராத்
105,வடமதுரை, டெல்லி
106,ஆயர்பாடி, டெல்லி
107,திருப்பாற்கடல் (புவியில் இல்லை)
108)பரமபதம் நாதன் திருவடி
2 மணி நேரம் முன்பு · Facebook for Android · பொது · - மொபைல் பதிவேற்றங்கள்
முழு அளவில் காட்டு ·
செய்தியாக அனுப்பு ·
வரைபடம் கோயில் கோவில் மதம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக