| செவ்., 30 ஏப்., 2019, பிற்பகல் 10:05 | |||
Thiruchchelvam Kathiravelippillai, Ganeshamoorthy Jeyapragash மற்றும்
40 பேருடன் இருக்கிறார்.
தொடர் – 14
திருக்கோணமலை மாவட்டத்தின் வடபுறத்தே தென்னவன்மரபுஅடி ஊர் உள்ளது.
திருக்கோணமலை மாவட்டத்தினை முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைத்து வடக்கு
கிழக்கு இணைப்பினை மேற்கொள்கின்ற ஊர் தென்னவன்மரபுஅடி ஆகும். 1824 ஆம்
ஆண்டு ஆங்கிலேயரின் கணக்கெடுப்பில் தமிழ் ஊர் எனப் பதியப்பட்ட
ஊராகும்.முழுமையாக தமிழ் மக்கள் வசித்த ஊர்.
1984 ஆண்டு டிசம்பர் மாதம் மூன்றாம் நாள் அதிகாலை வேளையில் நாய்கள்
குரைக்கும் சத்தம் ஊரைச்சுற்றிவரக் கேட்டுக்கொண்டிருந்தது.
1984 ஆம் ஆண்டு டிசம்பர் இரண்டாம் நாள் இரவு புல்மோட்டை நகரத்தில்
இருக்கின்ற கடைகள் சிலவற்றில் நுகர்ச்சிப்பொருட்களை விடுதலைப்புலிகள்
கொள்வனவு செய்து சென்றிருந்தார்கள். இக்கொள்வனவிற்கு தென்னவன்
மரபுஅடியில் வசித்த சில தமிழ் இளைஞர்களும் புல்மோட்டையில் வசித்த சில
முஸ்லிம் இளைஞர்களும் உதவினார்கள். பலத்த அச்சம் நிலவிய நாள் அது.
1984 டிசம்பர் ஓராம் நாள் கொக்கிளாய் ஊர் விடுதலைப்புலிகளால்
தாக்கப்பட்டு 11 சிங்கள ஊர்காவல் படையினர் கொல்லப்பட்டனர்.(அதில் சில
பொது மக்களும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது)
1984 நம்பர் 11 ஆம் நாள் டொலர்பாம் என்ற சிங்களக் குடியேற்ற ஊரிலிருந்து
33 சிங்களப் பொதுமக்கள் மற்றும் ஊர்காவல் படையினர் கொல்லப்பட்டனர்.
1984 டிசம்பர் 30 ஆம் நாள் கென்ற்பாம் என்ற சிங்கள குடியேற்ற ஊரில்29
பேரும் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டிருந்தார்கள்.
இம் மூன்று தாக்குதல்களினால் புல்மோட்டை, தென்னவன்மரபுஅடி ஆகிய ஊர்கள்
அச்சத்தில் இருந்தன. அவ்வாறான நிலையில் புல்மோட்டைக்கு துணிகரமாக வந்த
விடுதலைப் புலிகள் அங்குள்ள முஸ்லிம் மக்களின் கடைகளில் பொருட்களைக்
கொள்வனவு செய்து சென்றார்கள்.
புல்மோட்டை முஸ்லிம் மக்கள் அனைத்து தமிழ் விடுதலை இயக்கங்களுடனும்
நல்லுறவை தொடர்ந்து பேணிவந்திருந்தனர். அங்கு ஆட்சியாளர்களினால் தமிழ்
முஸ்லிம் மக்களிடையே விரிசலை ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது என்பதனை
மறுக்கமுடியாது. புல்மோட்டையிலுள்ள முஸ்லிம் மக்கள் பேசுகின்ற மொழியினை
வைத்து அவர்கள் தமிழ் மக்களா அல்லது முஸ்லிம் மக்களா என இன்றும்
பிரித்தறியா முடியாத நிலை உள்ளமையானது அங்கு தமிழ்பேசும் மக்களின் உறவின்
ஆழத்தினைப் புரிந்து கொள்வதற்கான சான்றாகும்.
நாய்களின் குரைத்தல் ஒலி தென்னவன்மரபுஅடி ஊரின் நடுவிலும் உரத்து
ஒலித்தது. ஊர்மக்களின் ஒவ்வொரு வீட்டுக் கதவுகளும் தட்டப்பட்டு
பதவிசிறிபுர பகுதியில் இருந்து வந்த ஆயுததாரிகளால் எழுப்பப்பட்டனர்.
அனேகமாக வயது வேறுபாடின்றி, ஆண்பெண் என்ற பால் வேறுபாடின்றி சிறுவர்
முதியோர் என்ற பேதம்இன்றி அனைவரும் துன்புறுத்தப்பட்டனர். கையிலிருந்த
துப்பாக்கிகளால் தாக்கப்பட்டனர். சிலர் உயிரச்சம் காரணமாக தப்பிப்பதற்காக
அருகிலிருந்த காடுகளை நோக்கி ஓடியபோது துப்பாக்கியால் சுடப்பட்டனர்.
அன்று முழுவதும் அவ்வூர் அல்லோலகல்லோப்பட்டது. தென்வன்மரபுஅடி ஊரில்
அன்றைய நாள் 15 பேரை காடையர்கள் சுட்டுக்கொன்றனர். 12 பேர் காயமடைந்தனர்.
தென்னவன்மரபுஅடி என்ற ஊருக்கு அருகாமையில் இருந்த ஊரான “அமரவயல்“
(இவ்வூரின் பெயர் தற்போது திருக்கோணமலை மாவட்டத்தில் வசிக்கின்ற பலருக்கு
அப்படியொரு தமிழ் ஊர் இருந்ததா? என்பதே தெரியாமல் உள்ளது என்பதே உண்மை)
என்ற ஊர் வரை இத்தாக்குதல் நீண்டிருந்தது. இவ்விரு ஊர்களில் வசித்த
மக்களை உடனடியாக வெளியேற வேண்டும் என காடையர்கள் அச்சமூட்டினர். அப்போது
இவ்வூர்களின் விதானையாராக பணியாற்றிய சி.வைரமுத்து என்பவரின்
ஆலோசனையினடிப்படையில் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் நாலாம் நாள் ஆண்டாண்டு
காலமாக தாம் வாழ்ந்த மண்ண விட்டு வடக்கு நோக்கி இரவிரவாக காட்டுவழியால்
தமது கைகளால் கொண்டு செல்லக் கூடிய பொருட்களை எடுத்தக்கொண்டு சென்று
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள “பொன்னகர்“ என்ற ஊரில் வசிக்கத்
தொடங்கினார்கள். இன்றுவரை பொன்னகரில் தான் அநேகமான தென்னவன் மரபுஅடி
மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அன்றைய நாள் தாக்குதலின் நிறைவில் புல்மோட்டைக்கு வந்த காடையர்கள்
பொருட்கள் விற்பனை செய்த முஸ்லிம் மக்களை அச்சுறுத்திச் சென்றனர். ஆனால்
அவர்களை தாக்குவதற்கு தலைமையேற்று வந்தவர் இடமளிக்கவில்லை என
தெரிவிக்கப்படுகிறது.
வடக்கினையும் கிழக்கினையும் பிரிப்பதற்கான நிகழ்ச்சிநிரலின் முதலாவது அடி
வெற்றிகரமாக ஆட்சியாளர்களால் காடையர்கள் மூலமாக நிவர்த்திக் கப்பட்டது.
அச்சமூட்டுதல், பிரித்தாளுதல் , ஒருசாராரை தமது கைக்குள் வைத்திருத்தல்
போன்ற பல்வேறு தந்திரோபாயங்களை கையாண்டனர் ஆண்ட ஆட்சியாளர்கள். வடக்கு
கிழக்கு மக்களது பலத்தினை குறைப்பதற்காக தென்னவன்மரபுஅடி ஊரிலிருந்து
மக்களை வெளியேற்றியதுடன் மணலாறு என்ற பாரிய குடிறயேற்றத்தினை
நடைமுறைப்படுத்துவதற்கான திட்டத்தினை செயற்படுத்தத் தொடங்கினர்.
விவசாய அபிவிருத்தி என்ற போர்வையே மணலாறு (வெலிஓயா) குடியேற்றத்திற்கும்
பயன்படுத்தப்பட்டது.
திருமலை காவலன்
தொடருங்கள்
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · மேலும் · 22 ஆக., 2018
Sasitharan Kandiah
புல்மோட்டை மக்கள் ஏனைய பிரதேசங்களை விட தமிழ் மக்களோடு அந்நியோன்னியம்
கொண்டவர்கள். சிறந்த தமிழ் உச்சரிப்பு கொண்ட மக்கள். ஆனால் இப்போது
அவர்கள் மனங்களிலும் எதிர்மறையான எண்ணங்களை சில கட்சிகள் விதைக்கின்றன.
7 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · மேலும் · 22 ஆக., 2018
Gunapala Vijayaratnam
ஒரு தலைமுறை கடந்து வந்த பாதை .புதிய தலைமுறை அறிந்துகொள்ள வேண்டிய ஆவணங்கள்
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · மேலும் · 23 ஆக., 2018
Sounthararajan Muthucumar
ஈரோஸ் இயக்கத்தில் பல இஸ்லாமிய தோழர்கள் முக்கிய பொறுப்பில் இருந்திருக்கின்றார்கள்
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · மேலும் · 24 ஆக., 2018
A M Geeth Geeth
ஈரோஸில் மட்டுமல்ல தோழரே
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · மேலும் · 24 ஆக., 2018
Sounthararajan Muthucumar
Amgeeth Geeth ஈரோஸ் அமைப்பில் பாராளுமன்ற உறுப்பினராகவும்
நிறைவேற்றுக்குழு உறுப்பினராவும் இருந்திருக்கின்றார்கள் ஏனைய
இயக்கங்களிலும் இஸ்லாமிய உறுப்பினர்கள் இருந்திருக்கின்றார் இதில்
முதல்மையான இயக்கம் ஈரோஸ்தான்
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · மேலும் · 24 ஆக., 2018
A M Geeth Geeth
Sounthararajan Muthucumar உண்மைதான்
Siva Murugupillai
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இதேமாதிரி அவர்கள் பேசும் தமிழில் இருந்து
பிரித்துக்காணமுடியதாத அளவிற்கே தமிழ் முஸ்லீம் மக்களின் பேச்சு எழுத்தத்
தமிழ் அமைந்துள்ளது. உதாரணத்திற்கு திருவல்லிக்கேணி( சென்னை
அண்ணாசாலையில் உள்ள சாந்தி தியேட்டரின் பின்புறமாக அமைந்த இடம்). 2016
இல் எனது அவதானிப்புகள் ஆய்வுகளை மேற்கொள்ள சில மணி நேரம்
தென்னவன்மரபுஅடி என்ற ஊரின் ஊடு திருகோணமலையில் இருந்து முல்லைத்திவிற்கு
பயணம் செய்தேன். எனது பயணம் பதவிசிறிபுர ஊடாக கொகிளாயை அடைந்து
முல்லைத்திவு வரை விரிந்தது இந்த பயணத்தின் இறுதியல் எல்லாவற்றையும்
இழந்து விட்ட் வெறுமையை மட்டும் உணர்ந்தேன் வடக்கையும் கிழக்கையும்
பிரிப்பதற்கான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் ஏற்புடையதல்ல இதனைத்
தடுப்பதற்கான ஆயுத நடவடிக்கையினை இதன் எதிர் வினைகளை சமாளிக்கும்
தயாரிப்புக்களின் பின்பு மக்களை அணிதிரட்டிய பின்பு செயற்படுத்தியிருக்க
வேண்டும் அன்றேல் (//...தென்னவன்மரபுஅடி என்ற ஊருக்கு அருகாமையில் இருந்த
ஊரான “அமரவயல்“ (இவ்வூரின் பெயர் தற்போது திருக்கோணமலை மாவட்டத்தில்
வசிக்கின்ற பலருக்கு அப்படியொரு தமிழ் ஊர் இருந்ததா? என்பதே தெரியாமல்
உள்ளது என்பதே உண்மை...//) அமரவயல் காணாமல் போனதைப் போல் இன்று பகுதியாக
தென்னவன்மரபுஅடி யும் பகுதியாக காணாமல் இருப்பதைப் போல் முழுமையாக
காணாமல் போய்விடும் வலிக்கின்றது இதயம். வேறு என்ன சொல்ல. தொடருங்கள்
சகோதரரே வாழ்த்துகள் தங்கள் பதிவுகளுக்கு.
திருத்தப்பட்டது ·

உரையாடல் விவாதம் ஆயுதக்குழு ஒற்றுமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக