சனி, 26 செப்டம்பர், 2020

சைவம் என்றால் vegetarian அல்ல சிவமதம்

 

aathi1956 aathi1956@gmail.com

ஞாயி., 16 செப்., 2018, பிற்பகல் 1:05
பெறுநர்: எனக்கு
கூர்ங்கோட்டவர்
சைவம் சொல்லாய்வு
______________
சிவனை வணங்குவதால் தான் சைவம் என்ற பெயர் வந்ததே ஒழிய மரக்கறி உணவுக்கும் சைவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பழைய பதிவுகளில் கூறியிருந்தேன். மேலும் பழைய பதிவுகளில் விஷ்ணு வணங்குவது வைஷ்ணவம் என்பது போல் தான் சிவனை வணங்குவது சைவம் என்பதையும் கூறியிருந்தேன். காஷ்மீர் சைவர்கள் என்றாலே அவர்கள் ஊன் உணவு உண்பவர்கள் மாறாக காஷ்மீர் வைணவரே மரக்கறி உணவு உண்பவர் என்பதையும் ஆதாரத்துடன் பழைய பதிவுகளில் காட்டியிருதேன்.
இப்போது சில புது தகவல்களை பார்ப்போம். Vegetarian என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான வடசொல் சைவ அல்ல. மாறாக ஷாஹாரி என்றாலே மரக்கறி உண்போர் ஆவர். அதே போலவே மாண்ஷாஹாரி என்றாலே வடசொல்லில் Non-Vegetarian என்பதற்கு இணையான சொல். ஆக சைவம் என்ற சமயம் சார்ந்த சொல்லுக்கும் உணவுப்பழக்கத்துக்கும் யாதொரு தொடர்புமில்லை.
அடுத்ததாக நாயன்மாரில் ஒருவரான அதிபத்த நாயனார் தினமும் கடலில் பிடித்த மீனை படையலாக கொண்டே சிவனை வணங்கி வந்தார். ஆனால் பிராமணிய தாக்கத்தால் இப்போது தங்கத்தில் மீன் செய்து அதை சிவனுக்கு படையலாக கொடுத்து சிவனையே ஏமாற்றி வருகின்றனர். அதிபத்தர் சிவனை மீன் படையலோடு வழிபட்டது 12ஆம் நூற்றாண்டு எழுதப்பட்ட பெரிய புராணம் வரை குறிக்கப்பட்டுள்ளது. எனில் அதிபத்தர் காலமான ஆறாம் நூற்றாண்டு முதல் பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை சைவர்கள் ஊன் படையல் மூலம் சிவனை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என அனுமானிக்க முடியும். அவ்வழக்கம் சைவ சமயத்தாரால் எதிர்க்கப்பட்டிருந்தால் மீன் படையல் கொண்டு சிவனை வணங்குவதை சேக்கிழார் தன் நூல்களில் சேர்த்திருக்கவே மாட்டார்.
சில தமிழ்ச்சாதிகள் தாங்கள் மரக்கறி உணவு மட்டுந்தான் உண்போம் என்பதை 20ஆம் நூற்றாண்டு தொடக்க கால பொதுப்புத்திக்கு ஏற்ப தங்களை மேன்மையாக காட்டிக்கொள்ள அண்டப்புழுகு புழுகினர் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. எங்கத்தெருவிலுள்ள சைவச்செட்டியார் கார்காத்த வெள்ளாளர் எல்லாரும் சுடலைமாடனுக்கு சேவலை வெட்டி குறுதியை அப்படியே குடித்து தான் சாமக்கொடை சாமி ஆடுவர்.
மேலுள்ள எல்லாவற்றையும் என் பழைய பதிவுகளையும் வைத்து பார்க்கும் போது சைவர்கள் ஊன் உணவு உண்போரே சைவம் என்ற சமயச்சொல்லுக்கும் மரக்கறி உணவுக்கும் யாதொரு தொடர்புமில்லை என்பதை தெளிவாகவே காட்டுகிறது.- தென்காசி சுப்பிரமணியன் (Rajasubramanian Sundaram Muthiah )
___________________
Dedicated to பந்தல் ராஜா , Ravi Subramanian ,
வெ.பார்கவன் தமிழன், சுப்ரமணி ஜி ,
Ayyanar Sankarpillai Karthi Sankarpillai

Kathiwakkam Baskaran Magan Naveenan
இலங்கையில் மரக்கறி, மச்சம் என்ற சொல்லே வழக்கில் உள்ளது

Aathimoola Perumal Prakash
சிவன் பிள்ளைக்கறி (கன்றுக்கறி) கேட்டதையும் சேர்த்திருக்கலாம்.

Jeeva Mano
சைவம் என்றால் உண்ணாமை(விரதம்) என்ற பொருளில் மலேசியா தமிழர் வழக்கில் உள்ளது. திருக்குறள் குறள் எண்:255
"உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு".
சைவம் என்றால் உண்ணாமை, அது மரக்கறி கூட உண்ணக்கூடாது. இது தமிழ் சித்தர் நெறி. பொது மக்களுக்கு அன்று, தவம் உடையார்க்கு.

சொல்லாய்வு அசைவம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக