சனி, 26 செப்டம்பர், 2020
மாற்றுத்திறனாளி பணி நியமனம் சோழர் பாடகர் கோவில்
aathi1956 <aathi1956@gmail.com>
செவ்., 18 செப்., 2018, முற்பகல் 10:14
பெறுநர்: எனக்கு
Logan K Nathan
கண்பார்வை அற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்த சோழர் அரசாணை.
இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு இட ஒதுக்கீடு மூலம் வேலை வாய்ப்பினை வழங்குகிறது. ஆனால் 800 ஆண்டுகளுக்கு முன்பே சோழ அரசாங்கத்தால் இது நடை முறைப் படுத்தப்பட்டுள்ளது. விழுப்புரம் அருகே உள்ள திருவாமாத்தூரில் உள்ள "அபிராமேசுவரர் கோவில்" கல்வெட்டில் இருந்து இந்த தகவலை தெரிந்து கொள்ள முடிகிறது.
இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் இக்கோவிலில் திருப்பதிகங்கள் பாடுவதற்கு 16 பார்வையற்றவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் கோவிலுக்கு வந்து செல்வதற்கு உதவியாக இருவர் நியமிக்கப்பட்டு
ள்ளனர். அவர்கள் இருவரையும் "கண் காட்டுவார்" எனக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இந்த பதினெட்டு பேருக்கும் ஊதியமாக நெல் வழங்கப்பட்டு உள்ளது.
இடவொதுக்கீடு வேலைவாய்ப்பு அரசாங்கவேலை ஊனமுற்றோர் குருடர் பார்வையற்றோர் கல்வெட்டு சோழன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக