சனி, 26 செப்டம்பர், 2020

அழகுமுத்துகோன் தெலுங்கர் என்று நூல்

 

aathi1956 aathi1956@gmail.com

சனி, 15 செப்., 2018, பிற்பகல் 1:43
பெறுநர்: எனக்கு
நிலா. வேங்கடவன் , மா.சாந்தகுமார் தமிழர் மற்றும் 9 பேருடன் இருக்கிறார்.
அழகு முத்துக்கோன்...!
00000000000000000000000000000000000000
அழகு முத்துக் கோன் தமிழ் பாளையக்கரர?தெலுங்குப் பாளையக்காரா?வரலாறு சொல்லும் உண்மை என்ன?-Eagandan Nambi Eagandan
அழகு முத்துக்கோன் ஒரு பாளையக்காரன் அல்ல.எட்டையாபுரம் தெலுங்குப் பாளையக்காரன் எட்டப்பநாயக்கனிடம் படைவீரனாக செயல்பட்டார்.கான்சாகிப் என்ற யூசுப்கானால் சுட்டுக் கொல்லப்பட்டார்.அழகுமுத்துக்கோன் தமிழரே .-R Shunmugaraj
தூய தமிழரை தன்னினமாக்கி தமிழரை அழிப்பதை வாடிக்கையாக கொண்டது வடுக இனம்..அழகுக்கோன் இனம் தமிழினம். - தமிழ்நாடு தமிழர் கூட்டாட்சி
000000000000000000000000000000000000000
{ “இவ்வளவு காலமாக,அழகு முத்துக்கோன், அழகான தமிழ்ப் பெயராக இருக்கிறதே, தமிழனாக இருப்பான் என்று நினைத்தேன். ஆனால், நேற்றுத்தான் (2018.09.13) அவன் வரலாறு படித்தேன். அவன் ஒரு பச்சைத் தெலுங்கன்! இதில் என்ன வியப்பு என்றால், அவன் அப்பன் பெயர் ‘முத்து’. இவன் பெயர் ‘அழகு முத்து’.முத்து என்பவன் விசய நகரத்திலிருந்து வருகிறான். அப்ப, அங்கு வரைக்கும் தமிழ்ப்பகுதியாக
வே இருந்திருக்கிறது.இன்றும் பல அழகிய தமிழ்ப் பெயர்களை தெலுங்கர்கள் கொண்டுள்ளார்கள்...”-அருட்கண்ணனார்.}
1700-வாக்கில் முத்து என்பான், விசயநகரத்திலிருந்து சிறு கூட்டத்தோடு வருகிறான். மதுரை திருமலை நாய்க்கனுடைய பேரன் ‘முத்துக் கிருட்டிண வீரப்ப நாய்க்கர்’ ஆட்சிக்காலத்தில் வருகிறான். மன்னனைச் சந்திக்கும் முன்,அழகர் கோயிலில் ஓரிரவு தங்குகிறான். அப்பொழுது கொள்ளையடிக்க வந்த கள்ளர்களில் சிலரைக் கொல்கிறான். இச்செய்தி மன்னனுக்கும் போகிறது. மன்னனை முத்து சந்திக்கும் போது, அவன் வீரத்தைப் பாராட்டி, தென்காசி பாளையத்தில் அடிக்கடி கலகம் நடக்கிறது என்பதால் அதை அடக்க, தென்காசிப் பாளையம்’ சிற்றரசன் ‘அழகர் கோனுக்கு’த் தளபதியாய் (முத்துவை) அனுப்பி வைக்கிறான். அந்தப்பகுதிப் பெயரை ஒட்டி, இவனும் தன் பெயரை ‘முத்துக் கோன்’ என்று அழைத்துக் கொள்கிறான்! (’இந்த வீரபாண்டிய’ கட்டபொம்மு போல)
அங்கு தளபதியாய் போன முத்து என்கிற முத்துக்கோன், அங்கேயும் கள்ளர் இருவரைக் கொலை செய்கிறான். அதைத்தொடர்ந்து மதுரை மன்னன், இவனுக்கென்று ஒரு பாளையம், எட்டப்பன் ஆட்சிப்பகுதியில் உருவாக்கி (இன்று மாவட்டங்களை உருவாக்குவது போல்) அதன் பாளையக்காரனாக அமர்த்தம் செய்கிறான். அந்தப் பாளையத்திற்கு கூடுதல் படை வேண்டுமென்றாலோ, நிதிவேண்டுமென்றாலோ அவர் எட்டப்பனிடம்தான் போகவேண்டும்.எட்
டப்பனுக்குத் தேவையென்றால் மன்னனிடம் போகவேண்டும். மன்னன் > சிற்றரசர் > பாளையம் என்ற அமைப்பு முறை.
முத்துக்கோனுக்காக உருவாக்கப்பட்ட பாளையத்தின் பெயர் ‘காத்தாலங்குளம்’. கழுகுமலைக்குப் பக்கத்தில் இன்றைக்கும் அந்த ஊர் இருக்கிறது, எட்டையபுரம் வட்டாரத்தில் உள்ளது. அவன் தளபதியாய் போனது ‘தென்காசிப் பாளையம்’.இவனுடைய மகன் தான் ‘அழகு முத்துக் கோன்’.
இலக்கு:
விசயநகரப் பகுதியிலிருந்து இங்கு வந்த முத்து சொல்கிறான்: ‘நான் எந்த இலக்கும் இல்லாமல் தெற்கு திசை நோக்கி வந்தேன். மதுரைக்கு வந்ததற்கப்புறம்தான், விசய நகர சாம்ராச்சியத்தை எதிரிகளிடமிருந்
து காப்பாற்றி நிலைநாட்டவேண்டு
மென்று எனக்கு ஒரு இலக்கு கிடைத்தது...!’
அழகு முத்துக் கோன் காலத்தில், எட்டயபுரம் சிற்றரசனாக ‘குமார எட்டப்பன்’ இருக்கிறான். ஆங்கில அரசுக்கு கப்பம் கட்டமறுத்து, தன் எல்லைகளில் படைகளை நிறுத்தி எதிரிகளிடமிருந்து நாட்டைக்காத்து வருகிறான். அவன் படைத்தளபதிகளில் ஒருவன் , ஆங்கிலப்படைத்தளபதி கான்சாகிப் என்கிற மருதநாயகத்திற்க
ு காட்டிக்கொடுப்பானாக மாற எட்டயபுரம் கான்சாகிப் வசமாகிறது. அப்பத்தான் குமார எட்டப்பன், அழகு முத்துக்கோனிடம் படை உதவி கேட்கிறான். ‘என் அப்பாவை பாளையத்து சிற்றரசனாக்கிய எட்டையபுரம் சிற்றரசுக்கு நான் கடமைப் பட்டுள்ளேன் ..’ என்று சொல்லி, நாங்கள் வந்து எட்டயபுரத்திற்குப் பக்கத்திலுள்ள ‘பெத்த நாயக்கன் பேட்டை’ என்ற இடத்தில் படையோடு காத்திருக்கிறோம், நீங்கள் அதற்கு எதிர் திசையிலிருந்து படையோடு வாருங்கள், எட்டையபுரத்தை மீட்டுவிடலாம் என்று செய்தி அனுப்பிவிட்டு, ஒரு முன்னூறு பேர் கொண்ட படையுடன் வந்து இரவு அங்கு தங்குகிறான். விடிந்தவுடன் படை நகர்வை மேற்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு இரவு தூங்கப் போகிறான்.
இவன் தூங்குகிற நேரத்தில் இரவோடு இரவாக கான்சாகிப் இவர்களைத் தாக்கி சுற்றி வளைத்துவிடுகிறான். அந்தக் கட்டத்தில் 264 படைவீரர்களும் இவனது ஆறு தளபதிகளும் சரணடைகிறமாதிரி ஆகிவிட்டது.அந்த 264 வீரர்களுடைய ஒரு கை, ஒரு காலை வெட்டுகிறான், கான்சாகிப்.இந்த ஆறு தளபதிகளை, இவனுக்கு வலது பக்கமும் இடது பக்கமும் பீரங்கி வாயில் வைத்துக் கட்டுகிறான்.அழக
ு முத்துக்கோனையும் பீரங்கி வாயில் வைத்துக் கட்டுகிறான். ஒழுங்கா, மன்னிப்புக் கேட்டு, கப்பம் கட்டுவதென்றால் விட்டுவிடுகிறேன், இல்லையென்றால் சுட்டுவிடுவேன் என்கிறான், கான்சாகிப். அவன் சுட்டுவிடு என்கிறான், சுட்டுத்தள்ளுகிறான்.
அழகு முத்துக்கோனை சுற்றிவளைத்த இடம், பெத்தநாய்க்கனூர், பீரங்கிவாயில் வைத்து சுட்ட இடம் ‘நடுக்காட்டூர்’.ஆக, அழகு முத்துக்கோன் தெலுங்கனாக இருந்தாலும் ஆங்கிலேயனிடம் சரணடையாமல் செத்துப்போகிறான், அவ்வளவுதான் அதிலுள்ள செய்தி
.
என்ன உரிமை கொண்டாடுகிறார்கள் என்றால், கட்டபொம்மன் தான் தன்முதலாக ஆங்கிலேயருக்கு எதிராக் குரல் கொடுத்தவன் என்று ஒரு காலம் பரப்பிக் கொண்டிருந்தார்க
ள்.அவன் காலம் ,(கட்ட பொம்மனைத்) தூக்கில் போட்டது 1799.அதற்கு முன்னாடியே 1767 வாக்கிலே பூலித்தேவன் போரிட்டுச் சாகிறார்.இந்த அழகு முத்துக்கோன்,இவ்விருவருக்கும் முன்னரே, சுட்டுக் கொல்லப்படுகிறார். அதனாலே, முதல் இந்திய விடுதலைப் போராளி என்று கதை விடுகிறார்கள்.
ஆனால், உண்மை என்ன? அழகு முத்துக்கோன், தெலுங்கு பாளையங்களின் சார்பாக, அவன் அப்பன் வழியில்/மொழியில் தெலுங்கு சாம்ராச்சியத்தைத் தக்கவைப்பதற்காக, ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய ஒரு தெலுங்கன், அவ்வளவுதான்.
அவனுடைய நோக்கம் தெலுங்கு சாம்ராச்சியத்தை நிலைநாட்டவேண்டும், விடக்கூடாது! என்பதே!!விசயநகரசாம்ராச்சியத்தை வேரறுக்க அந்நியர்களை விடமாட்டோம் என்றுதான் சொல்லவும் செய்கிறான்: “விசய நகர சாம்ராச்சியம் இந்த மக்களைக் காப்பாற்றுவதற்காக அமைக்கப்பட்ட சாம்ராச்சியம்! நாட்டை சீரழித்த அந்நிய முசுலீம்களிடமிர
ுந்து இந்த தென்னக மக்களை,பாண்டிய மண்டல மக்களை காப்பாற்றவே விசயநகரசாம்ராச்சியம் தன்னுடைய சாம்ராச்சியத்தை இங்கு நிறுவியது.”
இது அப்படியே “தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்றுவதற்காகவே அமைந்த திராவிட இயக்கத்தை, திராவிட அரசாங்கத்தை நாங்கள் தொடர்ந்து காப்போம்...!” எனும் இன்றைய திராவிடர் கூற்றுப்போலவே இல்லை!? அதே வசனம்!!
என்ன, அழகு முத்துக்கோன் என்பவர் (தமிழ்க்) கோனார் என்று சிலபேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வரலாற்று நூலில் என்ன எழுதுகிறார் என்றால், திருமலை நாய்க்கரும் முத்துவும் (அழகு முத்துக்கோன் அப்பா) பெருமாளை (கண்ணபிரானை) வணங்குகிற ஒரே கோத்திரம், அதாவது ஒரே இனம், தெலுங்கர் இனம் என்கிறார்.
இந்நூலுள் காணப்படும் இன்னுமொரு நுட்பமான செய்தி: அந்த தெலுங்கு மன்னர்களுக்கு , மன்னர் வாழ்த்துச் சொல்லும் போது, “பாண்டி மண்டலம் வாழ்க! மாமன்னர் முத்துக் கிருட்டிண வீரப்ப நாய்க்கர் வாழ்க” என்றே சொல்ல வேண்டும். எவ்வளவு நுட்பமான ஏற்பாடு. எப்படி, ‘வீரபாண்டிபுரம்’ - வீர பாண்டியன் - வீரபாண்டிய கட்ட பொம்(மு)மன் என்றானதோ, அப்படி இந்த தெலுங்கன்களுக்கு “பாண்டி மண்டலம்” என்ற அடையாளம் இருக்க வேண்டும்.
‘நாங்கள் யாரு? பாண்டி மண்டலத்து மன்னர்!” என்று முகவரி, இந்த மண்ணைச் சேர்ந்தவர் மாதிரியே ஆளவேண்டும்! இஃது, இன்று நேற்றில்லை, ஐநூறு ஆண்டாக, இந்த முறையைக் கடைபிடித்து வந்துள்ளார்கள். ஆக, இந்த மண்ணுக்கு உரியவர்கள் நாங்கள் என்கிற மாதிரி முகவரியெல்லாம் போட்டுக்கொள்வோம்! ஆனால், மொழி மட்டும் தெலுங்காக , சமற்கிருதமாக மாற்றிக் கொள்வோம்!! எவ்வளவு கொடிய நஞ்சு?
பார்வை நூல்:
நூல்: வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு.
ஆசிரியர்: இதயம் பேசுகிறது மா.முருகன்.
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் / 2001 வெளியீடு.வெளியிட்டவரும் ஒரு தெலுங்கன் தான் . வெளியிட்டவர் பெயர்: (பதிப்பக உரிமையாளர்) இராசசேகர் நாய்க்கர் -விளாத்தி குளம்(தெலுங்கர் மிகுதியாக உள்ள ஊர்/தொகுதி] இதே தெலுங்கர், இன்னுமிரு பதிப்பகங்கள் வைத்துள்ளார். அதில் ஒரு கிளை பதிப்பகத்தின் பெயர், நம்பினால் நம்புங்கள் - :- “நாம் தமிழர் பதிப்பகம்!”
என்னத்தைச் சொல்ல! எதிரியின் எந்த நுட்பத்தைத்தான் இந்தத் தமிழன் முழுமையாக அறிந்து வைத்துள்ளான்??
-அருள்நிலா.
2018.09.15
12 மணி நேரம் · பொது

கோனார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக