திங்கள், 28 செப்டம்பர், 2020

பாவலரேறு தமிழ்த்தாய் வாழ்த்து

aathi1956 திங்., 3 டிச., 2018, முற்பகல் 8:28 பெறுநர்: எனக்கு Anbu Anbalagan தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் அன்னை மொழியே அழகார்ந்த செந்தமிழே! முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே! கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில் மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே! தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே! இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே ! நற்கணக்கே! மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே சிந்தா மணிச்சுடரே! செங்கை செறிவளையே! தந்த வடமொழிக்கும் தாயாகி நின்றவளே! சிந்து மணற்பரப்பில் சிற்றில் விளையாடி முந்தை எகுபதியர் மூத்த சுமேரியத்தார் செந்திரு நாவில் சிரித்த இளங்கன்னீ ! சிந்துங் கலைவடிவே ! சீர்த்த கடற்கோளில் நந்தாக் கதிரொளியே! நாடகத்துப் பண்ணியலே ! வந்த குடிமரபோர் வாழ்த்தி வணங்குவமே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக