சனி, 26 செப்டம்பர், 2020
வைரவேல் ஆயுதம் குட்டியான குடுவை வடிவம் படம்
சிவக்குமார் பாலசுப்ரமணியன், 6 புதிய படங்களை ஆல்பத்தில் சேர்த்துள்ளார்: Antiques .
வைரவேல் (vajra) என அறியப்படும் போர்க்கருவி இன்று என் கைகளை வந்தடைந்தது. இந்தக் கருவி வீசி எறிந்தால் மின்னல் வேகத்தில் சென்று குறிப்பார்த்த இலக்கை மிகவும் துல்லியமாக தாக்கும் திறன் படைத்தது. இதன் வடிவமைப்பு நடுவில் எடைக்கூட்டப்பட்டு இருமுனைகளும் காற்றை கிழித்துக்கொண்ட
ு சுழன்றுகொண்டே சென்று இலக்கைத் தாக்கும். சுழன்றுகொண்டே செல்லும் இந்தக்கருவி காற்றுத்தடை ஏற்படுத்தி வேகம் குறையாமல் இருக்க இறகுகள் போன்று காற்று புகுந்து வெளியேறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் வைர வேல் என்பது கிரேக்க இறக்குமதியாகவும் கணிக்கப்படுகிறது. அதனை சீயசு எனும் இந்த கிரேக்க வேந்தனிடம் காணலாம். ஆனால் இணைக்கப்பட்டுள்ள படத்தில் அது இடது கையில் இருக்கும் ஈட்டியல்ல, வலது கையில் வைத்திருப்பதாகும். இந்த வைர(vajra) வேல் இன்றும் நேபாளம் மற்றும் திபெத் நாடுகளில் புத்தமத குறிப்புகளில் உள்ளது.
இந்த வைரவேல் கீழ்கண்ட பல மத மற்றும் பல புராண கதைகளுடன் தொடர்புடையதாகும்
1. சைவம்/வைசனவம்/சநாதன மதங்களில் - தேவர்களின் தலைவன் இந்திரனின் மின்னல் ஆயுதம்(போர்க்கர
ுவி) இந்த வைரவேல் எனப்படும் வச்சராயுதமாகும்
2. கிரேக்கப் புராணங்களின் முதல் கடவுள்(அரசன்) சீயசும்(Zeus) இடி உண்டாக்குபவன்(God of thunder) என்ற பெயரில் அறியப்பட்டு மின்னல் கருவியாக வச்சிரா(vajra) வைத்திருக்கிறான். மேலே இந்திரன் எனக்குறிப்பிட்டவனும் கிரேக்க இறக்குமதியாகவே நான் எண்ணுகிறேன்
3. புத்த மதத்திலும் வச்சிரா ஒரு முக்கிய பொருளாக கருதப்படுகிறது. இது மன ஒருநிலைப்படுத்துதலில் பயன்படுத்தப்படுகிறது
4. முடிவாக முருகன் என்ற இந்த தமிழ் கடவுளுக்கும் வச்சிரவேல் அல்லது வைரவேல் தொடர்புடையதாகிறது
சரி இப்போது வச்சிரம்(வஜ்ரா) என்றால் சமசுகிருத மொழியில் வைரம் என்று அறியப்படுகிறது.
இதையே புராணங்களில் மின்னலுடன் ஒப்பப்படுகிறது
மின்னல் அதன் ஒளிக்காகவோ அல்லது திறனுக்காகவோ ஒப்பிடப்பட்டிரு
க்கலாம். அல்லது இந்த வச்சிரவேல்/
ஆயுதத்தில் இருக்கும் வைர வடிவினை குறிப்பிடுவதாக இருக்கலாம் அல்லது வைரம் இந்த வச்சிர வேலின் நுணியில் வைக்கப் பட்டிருந்திருக்கலாம்
இந்த கருவி வெறும் 2-7 அங்குலத்தில் இருப்பதால் இதில் உண்மையான வைரத்தின் பங்கும் இருந்திருக்கலாம்
வைரத்தை வைத்து தாக்கும் அளவிற்கு என்ன தேவை இருந்திருக்கும்?!
அல்லது இந்த சிறிய கருவி கைகள் கொண்டு வீசியெறிய ஒரு வீசும் போர்கருவியாகவோ அல்லது கைகளில் பற்றி ஒருவரை கட்டியணைத்து பின் மண்டையை பிளக்கவோ பயன்பட்டிருக்கலாம்
சிலர் உங்கள் குழந்தைப் பருவத்தில் எருமைமாட்டுக் கொம்பில் இருந்து பெற்ற கொழுப்பினை(மஞ்சை) ஒட்டுப்பசையாக புத்தகங்களுக்கு அட்டைப்போடும் போது வச்சிரம் என ஒன்றை அழைத்ததற்கும் மேலே நான் கூறியதற்கும் தொடர்புண்டு. காரணம் அந்த மாட்டுக்கொம்பின் கொழுப்பு காய்ந்து வைரம் போன்று கெட்டிப்படும் என்பதால் அதை ஒட்டுப் பச்சையாகவும் வச்சிரம் என்றும் அழைப்பர்.
பின் வரும் காலங்களில் இந்த கருவியை பயன்படுத்தி செய்முறை விளக்கத்தையும் விழியமாக உங்களுடன் பகிரவுள்ளேன். இணைந்திருங்கள்
இந்த வைரவேல் பித்தளை இரும்பு வெள்ளி செம்பு என பல உலோகக் கலவைகளில் செய்யப்பட்டன. என் கைகளில் இருப்பது வெள்ளியால் செய்யப்பட்ட ஒரு வைரவேலாகும்
21 பிப்ரவரி, AM 6:31
ஆயுதம் வேல் முருகன் வஜ்ராயுதம் புகைப்படம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக