திங்கள், 28 செப்டம்பர், 2020

வன்னியத்தேவன் சேதுபதி வீரம் பற்றி இராமப்பய்யன் அம்மானை

aathi1956 திங்., 3 டிச., 2018, பிற்பகல் 7:00 பெறுநர்: எனக்கு Muniraj Vanathirayar வன்னியத்தேவன் ••••••••••••••••••••••••• சேதுபதியின் மருகனும் படைத்தலைவனுமாகிய வன்னியத்தேவன் வீரத்தின் விளைநிலம், வெற்றித் திருமகள் அவன் தோள்களை அலங்கரித்தாள். இராணுவத் தந்திரம் மிக்கவன், எதிரிகளை வலுவில் தாக்கி அழிக்கும் வல்லமை பெற்றவன். வன்னியென்றாலே நாயக்கர் படையினர்க்கு நடுக்கம் ஏற்படும். இராமப்பய்யனுடன் நடந்த மூன்று போர்களிலும் அவனே வெற்றி பெற்றான். இராமேசுவரம் தீவில் நடந்த ஆறு மோதல்களிலும் மறவர் படையும் நாயக்கர் படையும் வியப்புறச் சண்டை செய்தான், மறவர்படை சோர்வுற்றபொழுதும் பலம் குன்றிய போதும் ‘புலியை நரிபாய்ந்து போகும்மா’ என்று தனக்கே உரித்தான போர்க் குரலை யெழுப்பி வலுவூட்டியவன். வெற்றிகொண்டு வன்னி வீரியங்கள் பேசிவந்தான் கோட்டை புகுந்தான் கோடையிடி வன்னியுந்தான் (846-850) நிற்தூளியாக்கி நின்றானே வன்னியுந்தான் (1484) என்று அவன் வீரம் பேசப்படுகிறது. மேலும் இராமப்பய்யன் சேதுபதியைத் தோற்கடிக்கப் பரங்கியர்கள் உதவியை நாடியதைக் கேள்வியுற்ற வன்னி, பரங்கியும் பார்ப்பானும் பாரமோ என்று சொல்லி வீரியங்கள் பேசி வன்னி வீரவாள் கைப்பிடித்துப் (வரி 1550 - 1551) பரங்கியர்களைத் தாக்கவே, அவர்கள் கண்ணுக்கு மெட்டாமல் கருங்கடலிலோடினர் காண் (வரி 1574) என்று அம்மானை இசைக்கின்றது. வைசூரி நோயால் வாடிய நிலையிலும் கடைசி முறையாக ‘ஆனைத் திரளில் ஆளி சிங்கம் புகுந்தாப் போல்’ எதிரிகளைக் கலக்குகிறான் வன்னி. படைத் தலைவனாகிய தன்னுடைய சாவுக்குப் பிறகு எதிரியைச் சேதுபதியால் சமாளிக்க முடியாது என்று எடுத்துக்கூறியும் சரணடையக் கூறியும் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கச் சொல்கிறான் வன்னி. போர் வேண்டாமென்று உரைத்தது அவனது அரசு உத்தியையும், வீணாகப் போர் வீரர்களை உயிர் இழக்காமல் காப்பாற்றியதையும் தெரிவிக்கும். ஒரு படைத் தலைவனுக்குரிய அனைத்துச் சிறப்புகளையும் கொண்டவனாகத் திகழ்ந்தவன் வன்னியத்தேவன். கதைப்பாடலின் தலைவனாக இராமப்பய்யன் இருந்தும், பொய்யுரைக்காமல் உண்மையை எடுத்துரைத்து வன்னியனை மக்கள் மறவாதிருக்கும் படி செய்து விட்டது இராமப்பய்யன் அம்மானை எனலாம். நன்றி. திரு.புஷ்பம். அவர்கள். தமிழ் இணைய கல்வி கழகம். அன்பன். கி.ச.முனிராஜ் வாணாதிராயன். நாயக்கர் இலக்கியம் வன்னியர் மறவர் தேவர் பட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக