செவ்வாய், 29 செப்டம்பர், 2020

சார்வாகன் மருத்துவர் தொழுநோய் புதுமுயற்சி அறுவைசிகிச்சை பார்ப்பனர் தமிழர் இலக்கியம்

aathi1956 வெள்., 21 டிச., 2018, முற்பகல் 8:51 பெறுநர்: எனக்கு பாண்டிய ராசன் சட்டத்தரணி சார்வாகன் என்று இலக்கிய வட்டத்தில் அறியப்பட்ட மருத்துவர் ஹரி ஸ்ரீனிவாசன் -- நினைவு நாள் இன்று (7 செப்டம்பர் 1929 - 21 திசம்பர் 2015 ) ஒரு தொழுநோய் மருத்துவர் மற்றும் தமிழ் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் தமிழகத்தின் வேலூரில் 1923ஆம் ஆண்டு பிறந்தவர் 1954 ஆண்டிலிருந்து ஆறு ஆண்டுகள் இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்தார். இலண்டனில் திருமணம் நடந்தது. எண்பதுகளில் மூன்று ஆண்டுகள் போர்ட்லண்ட் நகரில் இருந்தார். சரி, யார் இந்த ஹரி சீனிவாசன்? மருத்துவர் ஹரி சீனிவாசன் அப்படி என்ன செய்துவிட்டார்? இந்த விநோத மனிதர் கிட்டத்தட்ட 65 ஆண்டுகளைத் தொழுநோய் சிகிச்சைக்காக அர்ப்பணித்திருந்தவர். உலகின் தலைசிறந்த கை, கால் விரல்கள் சீரமைப்பு அறுவைச் சிகிச்சை வல்லுநராகத் திகழ்ந்தவர். தொழுநோயிலிருந்து குணமடைந்த பின்னரும் மடங்கிய விரல்கள் நேராகாமல், உணர்ச்சி திரும்பாமல், செயலற்ற நிலையில் இருக்கும் விரல்களுக்கு அவர் கண்டுபிடித்த அறுவைச் சிகிச்சை முறை பலருக்குப் புத்துயிர் கொடுத்து இயங்க வைத்தது. இப்புதிய கர சீரமைப்பு அறுவைச் சிகிச்சை முறைக்கு ஐநா சபையின் அங்கமான உலக சுகாதார அமைப்பு ‘சீனிவாசன் முறை’ (SRINIVASAN TECHNIQUE) என்று அவரது பெயரையே சூட்டியது. உலக சுகாதார மையத்தின் சார்பாக உலகெங்கும் தொழுநோய் அறுவைச் சிகிச்சை முகாம்கள் நடத்தி ஆயிரக்கணக்கானவர ்களின் தொழுநோய்க் கறைகளைத் துடைத்தழித்தவர் ஹரி சீனிவாசன் இவருக்கு 1984 இல் இந்திய அரசால் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. இவரது தாத்தா கிருஷ்ணய்யர் வேலூரில் காவல்துறையில் தமிழ் சுருக்கெழுத்தராக இருந்தார். அவர் பெரியதொரு நூலகத்தை வைத்திருந்தார்.அந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களை சிறிய வயதில் படித்து தனது படிப்பு ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார். எழுத்தில் ஆர்வம் கொண்ட இவர் கவிதைகளையும் சிறுகதைகளையும் சிற்றிதழ்களில் எழுதியுள்ளார். இவரின் கனவுக்கதை’ என்னும் சிறுகதை 1971-ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக ‘இலக்கியச் சிந்தனை’ பரிசு பெற்றது. இவருடைய சிறுகதைகள் சில, ஆங்கில மொழிபெயர்ப்பாகி வெளியாகியிருக்கின்றன.இவர் எழுத்துக்கள் தொகுப்பாக 41 சிறுகதைகள் மற்றும் 3 குறுநாவல்கள் என 500 பக்கங்களுடன் சார்வாகன் கதைகள் என்ற பெயரில் புத்தகமாக நற்றிணை பதிப்பகத்தால் வெளியீடப்பட்டுள்ளது. # எமது புகழ் வணக்கம்... #நாம்_தமிழர் . 1 மணி நேரம் · கண்டுபிடிப்பு சாதனை புலம்பெயர் புலத்தமிழர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக