கார்த்திகேயன் சேதுராசன்
உண்மையான பேராசிரியர் .மக்களின் பிரச்சினைகளை எந்தவித சமரசமும் இல்லாமல் கடைசி வரை போராடுபவர்.
நம்மாழ்வாருக்கு பிறகு காவிரி ஆற்று படுகையில் ஒற்றை ஆளாக கிராமகிராமமாக சென்று மீத்தேன் எரிவாயு திட்டங்கள் எவ்வளவு பேராபத்தை விளைவிக்கும் என எளிய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தியவர்.ஒஎன்ஜிசி மற்றும் இதர எண்ணெய் நிறுவனங்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்.
உண்மையான தமிழ்தேசிய போராளி.என்ன கொடுமை என்னவென்றால் ஊடக வெளிச்சத்தில் உள்ள தலைவர்கள் அனைவரும் மக்களுக்கான போராளிகள் என்ற பின்பம் மட்டுமே உருவாக்கபட்டுள்ளது.
ஆனால் ஊடக வெளிச்சம் படாமல் பல வருடங்களாக தமிழ்தேசிய தளத்தில் இயங்கி வந்தவர். திராவிட கோட்பாடு தமிழினம் என்ற இனவரையரையை மறுக்கிறது.நாம் திராவிடர் அல்ல நாம் தமிழர்கள் என்று 2009க்கு முன்பே முழங்கி வருபவர்.அவரது தமிழின உணர்வை,தமிழ்தேசிய உணர்வை, அவரது ஆய்வுகள் மூலமாக அவர் எழுதிய புத்தகங்கள் மூலமாக அறியலாம்.
அவர் எழுதிய நூல்களில் மிக முக்கியமான ஆய்வு நூலாக நான் கருதுவது"தகர்ந்து போன தன்னாட்சி கணவுகள்" -இந்த புத்தகத்தில் இந்தியா எவ்வாறு தேசிய இன போராட்டங்களை சிதைத்து தனது வரைபடத்தை தக்க வைத்துக்கொண்டு உள்ளது என விவரித்து இருப்பார்.
"ஈழம்-இந்தியம் -இறையாண்மை " இந்த நூலில் இறையாண்மை என்றால் என்னவென்று எளிய பாமர மக்கள் கூட புரியும் அளவில் எழுதிய அரசியல் நாலாகும்.
மேலும்"மீத்தேன் அகதிகள்" என்ற நூல் எழுதியதற்காக வழக்குகளையும் சந்தித்து கொண்டு உள்ளார். நிலத்தடி நீர் அனைத்தும் அரசுடமையாக்கப்படும் என்றும் ஆறுகள் அனைத்தும் கார்பரேட் மயமாக்கப்பட்டு நிலத்தடி நீர் உபயோகிக்க மீட்டர் பொருத்தப்பட்டு தனியாருக்கோ அல்லது அரசுக்கோ வரி செலுத்தும் சூழல் உருவாகும் என ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே கட்டுரை எழுதியவர்.
தமிழினத்தில் இவர் ஒரு தீர்கதரிசி.தமிழினத்தின் சொத்து .கல்லூரி காலகட்டத்தில் இவரது வகுப்பை ஒரு முறை உட்கார்ந்து கவனிப்பது என்பது நமக்கு கிடைத்த வரம்.வரலாற்று பாடங்கள் நடத்தும் போது தமிழினத்தின் வரலாறுகளையும் தமிழினத்தின் தற்கால பிரச்சனைகளையும் சேர்த்தே நடத்துவார்.எவ்வளவு பெரிய தறுதலையாக இருந்தாலும் இவரது வகுப்பில் ஒரு முறை அமர்ந்தால் பொறுப்புள்ள மாணவனாக மட்டும் அல்லாமல் சிறந்த தமிழனாக வலம் வருவான்.
ஊடகத்தில் தற்போது நாம் பார்க்கும் தலைவர்கள் எத்தனை நல்ல குடிமகன்களை நாட்டிற்கு கொடுத்து உள்ளனர் என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனால் வகுப்பறையில் இவரது பாடம் நடத்தியதால் பல தமிழ்தேசிய சிந்தனை கொண்ட குடிமக்களை தமிழ்நாட்டிற்கு அர்பணித்தவர்.
ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு மேல் பேராசிரியராக பணியாற்றி இச்சமுகத்திற்கு சிறந்த தமிழர்களை உருவாக்கி கொடுத்தவர் ஐயா.செயராமன் அவர்கள். பணியில் இருக்கும் காலத்தில் இருந்து இந்த நிமிடம் வரை எந்த ஒரு மக்கள் போராட்டத்தையும் முன் நின்றவர். பணம்,புகழ் எதுவற்றிற்கும் ஆசைபடாதவர்.
எந்தவித போராடத்திலும் தன்னை முன்னிலை படுத்தாமல் மக்களின் பிரச்சினைகளை முன்னிலை படுத்தியவர்.
ஈழப்போராட்டத்தில் இவரது பங்கு மகத்தானது.இவரது phd project கூட ஈழம் தேசிய இன விடுதலை வரையறைக்குள் வருகிறது என்பதை நிறுவியது.
இந்த வயதில் கூட மக்களுக்காக சிறைவாசம் அனுபவத்து கொண்டு உள்ளார் பேராசிரியர் ஐயா செயராமன். எதற்காக இம்மண்ணை அந்நிய முதலாளிகளிடம் இருந்தும்,கார்ப்பரேட் களிடம் இருந்தும்,எண்ணெய் நிறுவனங்கள் போன்ற வல்லூறுகளிடம் இருந்து பாதுகாக்க ஏராளமான வழக்குகளை சந்தித்து கொண்டு உள்ளார்.
கதிராமங்களம் கிராமத்திற்காக இரண்டாவது முறை கைதாகி உள்ளார்.
நாம் அனைவரும் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்த நாளை தான் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம்.அவர் சிறந்த ஆசிரியரா என்பது நமக்கு தெரியாது பார்த்ததும் இல்லை.
ஆனால் தமிழினத்தில் பிறந்த அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் பேராசிரியர் ஐயா. த.செயராமன் அவர்கள் நல்ல முன்னோடி நல்ல எடுத்துக்காட்டாக பணியாற்றியவர்.
தயவுசெய்து இவரது விடுதலைக்காக குரல் கொடுங்கள்.
10 மணி நேரம் முன்பு · Messenger இலிருந்து அனுப்பியது

இனம் புத்தகம் நாசகார திட்டம் மீத்தேன் ஹைட்ரோகார்பன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக