சனி, 26 செப்டம்பர், 2020
தமிழி மற்றொரு பெயர் குயிலெழுத்து எழுத்துரு பிராமி எழுத்து
aathi1956 <aathi1956@gmail.com>
திங்., 17 செப்., 2018, பிற்பகல் 5:25
பெறுநர்: எனக்கு
குயில் எழுத்து stone-scripts
சங்ககாலத்தில் நடுகல்லில் எழுதப்பட்ட எழுத்தைக் "குயிலெழுத்து" (குயில் எழுத்து)என்று குறிப்பிட்டுள்ளனர்
குயிலுதல் = கல்லில் தோண்டுதல் இந்த எழுத்து காளை ஒருவனின் தாடி போல் இருக்கும் என்றும் பாடல் குறிப்பிடுகிறது
இருங் கவின் இல்லாப் பெரும் புன் தாடி, 5
கடுங்கண், மறவர் பகழி மாய்த்தென,
மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல்,
பெயர் பயம் படரத் தோன்று குயில் எழுத்து
இயைபுடன் நோக்கல் செல்லாது, அசைவுடன்
ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும் - அகநானூறு 297
இந்த எழுத்து இடை (பருமன்) மெல்லிதாக இருக்கும்
நடுகல் அச்சம் தருவதாக இருக்கும்
முதிர்ந்த கல்லில் எழுதப்படும்
இந்த எழுத்தில் பெயரும், பெயராளனால் அடைந்த பயனும், தோன்றுமாறு எழுதப்பட்டிருக்கும்
அந்த வழியில் செல்லும் புதியவர்கள் அதனைப் படிக்காமல் சென்றுவிடுவர்
பொருள் தேடச் செல்லும் தலைவனுக்கு அழில்லாத தாடி இருந்ததாம்
அது குயில்-எழுத்து போல் இருந்ததாம்
குயில் எழுத்தைப் படிக்கால் மக்கள் செல்வது போல, தலைவன் தாடியைப் பார்க்கும் மக்கள் கண்டும் காணாமலும் சென்றுவிடுவார்களாம்
இவ்வாறு பாடல் கூறுவதிலிருந்து குயிலெழுத்து பற்றி நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது
சங்ககாலப் பிராமி - தமிழி - தாமிழி - எழுத்துக்குச்
சங்கப்பாடல் சுட்டும் பெயர்
குயிலெழுத்து
என்பது புலனாகிறது
குயிலெழுத்து - வடிவம்
குயிலெழுத்து - பாறையில்
குயில் எழுத்துப் போல் தாடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக