சனி, 26 செப்டம்பர், 2020
கட்டபொம்மன் கெட்டிபொம்மு உண்மை வரலாறு தொடர் 7 8 9
aathi1956 <aathi1956@gmail.com>
திங்., 10 செப்., 2018, பிற்பகல் 6:30
பெறுநர்: எனக்கு
கயவாளி கட்டபொம்மன் – பகுதி 7
திசெம்பர் 26, 2015தமிழன்
காட்டிக்கொடுத்த கட்டப்பொம்மன்!
காட்ர கட்டப் பிரமையாவின் மகன் (வெறும்) கட்டப் பிரமையா. தந்தையை விட சூழ்ச்சிக்காரன். நேரடியாகப் போரிடாமல் மறைந்திருந்து தாக்குவதில் பெத்த கெட்டிக்காரன். (வழிப்பறி, கொள்ளையடிக்கிறப்போ நேரடியா மோதினா மொகரைய பேத்துருவாய்ங்கெல்ல..)
இந்த கெட்டிக்காரன் என்பதைத்தான் அவன்சார்ந்த கம்பளத்தார் தெலுங்கு வழக்கில் கெட்டிப்பொம்மு என அழைத்தனர். அது மருவி கட்டப்பொம்மன் ஆனது. இவனே ஆதி கட்டப்பொம்மன். அதாவது படத்தில் நாம் பார்த்த கட்டப் பொம்மனின் கொள்ளுப்பாட்டன். கட்டப்பொம்மன் சரி. அதென்ன வீரபாண்டிய கட்டப்பொம்மன்?
இளம் பஞ்சபாண்டியர்கள் பகைவர்களாக இல்லாவிடினும் அவர்கள் தமிழினம் என்பது ஒருபக்கம் உறுத்திக் கொண்டிருந்தது. இன்றைக்கில்லை என்றாலும் என்றாவது ‘எம்மண்ணில் உனக்கென்ன வேலை? போடா கொல்டி’ என உதைத்து விரட்டினால் என்ன செய்வது?
தயங்கவே இல்லை. நாயக்கப் பேரரசிடம் போட்டுக் கொடுத்தான். வஞ்சனையால் காட்டிக் கொடுக்கப்பட்டு அம்மாவீரர்கள் அம்மண்ணில் வீழ்த்தப்பட்டார்கள். வீழ்த்தப்பட்ட இடம் கட்டப்பொம்மனுக்கே கிடைத்தது. அந்த இடத்தைச் சுற்றிலும் தன் கம்பளத்து இனத்தவரை குடியேற்றினான். பாளையம் உருவாயிற்று. தன் முன்னோரில் ஒருவனான பாஞ்சாலன் என்பவனின் நினைவாக அந்தப் பாளையத்திற்கு பாஞ்சாலங்குறிச்சி எனப் பெயரிட்டான்.
பாளையத்திற்கு தலைநகர் ஒன்று வேண்டுமல்லவா? இளம்பஞ்ச பாண்டியர்கள் வீழ்த்தப்பட்ட அந்த இடம் ஜெகவீரபாண்டியபுரம் என அழைக்கப்பட்டது. அதையே தன் தலைநகராக்கினான். தன் பெயரையும் ஜெகவீரபாண்டிய கட்டப் பொம்மன் என வைத்துக் கொண்டான்.
அக்காலத்தில் போரில் வெற்றி கொண்ட வீரனொருவன் வெல்லப்பட்ட வீரனின் பெயரை சூட்டிக் கொள்வது மரபு. இங்கே காட்டிக்கொடுத்த கட்டப் பொம்மனுக்கு தமிழின வரலாற்றின் மேன்மை மிகுந்த பாண்டியர்களின் பட்டம் போய்ச்சேர்ந்தது தமிழின வரலாற்றின் மிகப்பெரும் சாபக்கேடு!
1709ல் பட்டமேற்ற கட்டப்பொம்மன் 1736 வரை ஆட்சி புரிந்தான். இவன்காலத்தில் நாயக்கப் பேரரசு வலுவிழக்கத் துவங்கியது. தட்டிக்கேட்க யாருமில்லா தைரியத்தில் தன் கம்பளத்தார்களைக் கொண்டு பெரும்படை நிறுவிக் கொண்டான். பெரும்படையுடன் பக்கத்துப் பாளையங்களில் புகுந்து கொள்ளையடிக்கத் துவங்கினான். மற்ற பாளையங்கள் திருப்பித் தாக்குவதில் இருந்து தப்பிக்க ஆங்காங்கே கோட்டை கொத்தளங்களை நிறுவிக் கொண்டான்.
அந்த நாளில் தென்பாண்டி நாட்டில் இருந்த தெலுங்குப் பாளையங்களுக்கு எல்லாம் எட்டைய புர பாளையமே தலைமை தாங்கி நின்றது. பரம்பரை எதிரியான கட்டப் பொம்மனுக்கு அது பெருத்த அவமானமாகவே இருந்து வந்தது. அதற்கும் ஒரு வேலை செய்தான்.
அனைத்து தெலுங்குப் பாளையத்தில் இருக்கும் கம்பளத்தாரின் குலதெய்வம் ஜக்கம்மா. ஜக்கம்மாவுக்கு பாஞ்சாலங்குறிச்சியில் ஒரு மிகப் பெரிய கோவில் எடுத்தான். அந்தக் கோவிலுக்கு தலைமைப் பூசாரியாகவும் தானே ஆகினான். ஜக்கம்மாவை வணங்க வருபவர்கள் பூசாரியின் காலிலும் விழுந்து வணங்கலாகினர். தெலுங்குப் பாளையங்களின் தலைமையும் தானாக கட்டப் பொம்மனுக்கு வந்து சேர்ந்தது.
அடித்த கொள்ளை, செய்த ஃப்ராடுத்தனம் அத்தனையையும் அந்த ஜக்கம்மா கோவிலால் மறைந்து நின்றது.
-தொடரும்
கயவாளி கட்டபொம்மன் – பகுதி 8
திசெம்பர் 26, 2015தமிழன்
சின்ன நவாபு கட்டபொம்மன்!
திருமலை நாயக்கன் பரம்பரை நாங்கள்.. வீரபாண்டிய கட்டபொம்மன் பரம்பரை நாங்கள்.. தெலுங்கு வெண்ணைவெட்டிகள் பக்கங்களில் பார்த்தீர்களானால் இதே ரீதியில்தான் ஆண்ட பரம்பரை பேன்ட பரம்பரை வசனங்களால் நிரப்பப் பட்டிருக்கும். சரி. அப்பேர்ப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் பரம்பரை பெருமை எத்தகையது?
ஜெகவீர பாண்டிய கட்டபொம்மன் என பெயரை மாற்றி வைத்துக்கொண்ட கட்ட பிரமையா 1709முதல் 1736வரை பாஞ்சாலங்குறிச்சிக்கு பாளையக்காரனாக இருந்தான். (அதாவது படத்தில் நாம் பார்த்த கட்டபொம்மனின் கொள்ளுப் பாட்டன்!)
இந்தக் காலத்தில் நாயக்க மன்னர்கள் நொண்டிக் குதிரைகள் ஆகத் துவங்கினர். நாயக்க மன்னர்கள் வலுவற்று இருந்ததை அறிந்த பல பாளையங்கள் வரி செலுத்தாமல் தவணை சொல்லி தட்டிக்கழித்து வந்தன. தென்பாண்டி நாட்டு மறவர் பாளையங்கள் ஒரு படி மேலே போய் போடா வெண்ணை என நாயக்க மேலாண்மையை உதறித் தள்ளிவிட்டு சுதந்திரமாக ஆட்சி நடத்தினர்.
இந்த நிலையில் ஆற்காடு நவாபின் ஆதிக்கம் துவங்கியது. ஆற்காடு நவாபின் பிரதிநிதியாக வரி வசூலிக்க வந்த சாதிக்கானுக்கு கப்பம் தர அப்பகுதி பாளையக்காரர்கள் மறுத்து விட்டனர்.
இந்நிலையில் ஆற்காடு நவாபின் பிரதிநிதி சாதிக்கானுக்கு அபயகரம் நீட்டிய ‘தன்மானச்சிங்கம்’ யார் தெரியுமா? பேண்ட பரம்பரையின் முன்னோடி ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்தான்!
பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரனான முதலாம் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் தன் படைகளைக் கொண்டே மற்ற பாளையக்காரர்களிடம் வரி வசூலித்து சாதிக்கானுக்கு அளித்தான்.
இந்த மாமா வேலைக்கு பரிசாக கட்டபொம்மனுக்கு சாதிக்கான் அளித்த வெகுமதி என்ன தெரியுமா?
“இனிமேல் வசூலாகும் கப்பத்தொகையில் ஆறில் ஒரு பங்கை நீயே வைத்துக்கொண்டு மீதி ஐந்து பங்கை இரண்டு தவணைகளில் அனுப்பி வா!” என்று கூறி ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் கழுத்தில் சாதிக்கான் ஒரு விலை உயர்ந்த மணிமாலையை அணிவித்தானாம். அத்துடன் அவனுக்கு தென்னாட்டின் சின்ன நவாபு என்ற பட்டத்தையும் அளித்தானாம்!
இவைகள் எல்லாம் தெலுங்கர்களின் எதிர்பாளர்கள் எழுதிய கட்டுக்கதைகள் அல்ல. கட்டபொம்மனைப் புகழ்ந்து காவியமாக படைக்கப்பட்ட ‘வீரபாண்டியம்‘ எனும் நூலில் உள்ளவை!
நன்றி –
கயவாளி கட்டபொம்மன் – பகுதி 9
திசெம்பர் 26, 2015தமிழன்
பச்சோந்திப் கட்டப்பொம்மன் பரம்பரை!
காட்டியும், தன் படைகளைக் கூட்டியும் கொடுத்த ஒரு ‘மானமிகு’ பரம்பரையைத்தான் வடுகர்கள் தங்களின் ஆதர்ச புருச கட்டப்பொம்மன் பரம்பரையாக போற்றிப் புகழ்ந்து வழிபட்டு வருகின்றனர். பிஆர் பந்துலு நாயக்கன் தயாரிப்பில் ஒரு படத்தை எடுத்து சுதந்திரப் போராட்ட வீரனாகவும் கட்டமைத்து விட்டனர்.
உண்மையில், இவர்கள் வாயாலேயே வடைசுட்டு காட்டிய கடைசிக் கட்டப்பொம்மனின் பெருமை எத்தகையது என்றால் அவன் ஒரு டானுக்கெல்லாம் டான். டன்டனக்கா டான்! அவன் பரம்பரையில் தோன்றிய அத்தனை டுபாக்கூர்களின் மொத்தப் ஃபிராடையும் விஞ்சியவன். ஃபிராடுக்கெல்லாம் ஃபிராடு! அவனைப் பற்றி பின்னால் விரிவாகப் பார்ப்போம்.
ஆற்காடு நவாபுக்கு காட்டிக் கொடுத்ததால் பெருதற்கரிய பெரும் பட்டமாம் ‘தென்னாட்டின் சின்ன நவாபு’ பட்டம் பெற்ற, முதலாம் ஜெகவீரபாண்டியனாக பெயர் மாற்றி வைத்துக் கொண்டிருந்த, படத்தில் நாம் பார்த்த கட்டப் பொம்மனின் கொள்ளுப்பாட்டன் கட்டப்பிரமையா 1736ம் ஆண்டு மான்டான். அவனுக்குப் பிறகு அவன் மகன் பொல்லாப் பாண்டிய கட்டப் பொம்மன் பட்டத்திற்கு வந்தான்.
அதென்ன பொல்லாப் பாண்டிய? முதலாம் ஜெகவீரபாண்டியனாக பெயர் மாற்றி வைத்துக் கொண்டிருந்த கட்டப்பிரமையாவிற்குப் பிறகு அவன் வம்சத்தில் பட்டத்திற்கு வந்த அனைவரும் ‘வீரபாண்டிய’ எனும் பின்னொட்டை பல்கலைக் கழகத்தில் படித்து வாங்கிய பட்டத்தைப் போல் வைத்துக் கொண்டனர். சமீபகாலம் வரை கூட தமிழக அரசியலில் தங்களுக்குச் சம்மந்தமே இல்லாத தமிழ்ப் பெயரை வைத்துக் கொண்டு குறளி வித்தை காட்டும் வடுகர்களின் உருமாறி பச்சோந்தித் தனம் கட்டப்பிரமையா காலத்திலேயே துவங்கியிருக்கிறது போலும்.
படத்தில் நாம் பார்த்த கட்டப்பொம்மனின் தாத்தா இந்த பொல்லாப் பாண்டிய கட்டப்பொம்மன் காலத்தில் மராட்டியர்களின் படையெடுப்பு நிகழ்ந்தது. ஒரு புறம் நவாபுகள் வீழ்ச்சியடைய மறுபுறம் மராட்டியர்கள் வெற்றிக் கொடி நாட்டி வந்தனர்.
தர்ம சங்கடம் பொல்லாப் பாண்டியனுக்கு.. தன் பரம்பரைக்கு சின்ன நவாபு பட்டம் வழங்கி சிறப்பித்த ஆற்காடு நவாபுகள் பக்கம் சாய்வதா? இல்லை வெற்றி முரசு கொட்டி வரும் மராட்டியர்கள் பக்கம் சாய்வதா? தான் சார்ந்த பக்கம் தோற்று விட்டால் அதன் பின்பு தன் பதவி? சிவலோகப் பதவிதான்!
குழம்பவில்லை. பிராடுத்தனம் மரபணு வழியே கடத்தப்பட்டு அவன் ரத்தத்தில் ஊறி இருந்தது. எளிமையாக ஒரு முடிவெடுத்தான். ஆற்காடு பிரதிநிதி சாதிக்கானுக்கு ஒரு சிறிய படைப்பிரிவை உதவிக்கு அனுப்பினான். மறுபுறம், மராட்டிய தளபதி முராரிராவுடன் இரகசியமாகத் தொடர்பு கொண்டு சாதிக்கானின் படைபலத்தையும் போர்த்திட்டங்களையும் போட்டுக் கொடுத்தான். எவன் வென்றாலும் நமக்கு ஆபத்தில்லை. செய்த உதவியைக் காரணம் காட்டி தப்பித்துக் கொள்ளலாம். ராசதந்திரம்!
போரில் சாதிக்கான் தோற்றான். சாதிக்கானின் அண்ணன் சந்தாசாகிப் திருச்சிராப்பள்ளி கோட்டைக்குள்ளிருந்து போரிட்டுக் கொண்டிருந்தான். மராட்டியர்கள் எவ்வளவோ முயன்றும் அவனை வெளியில் இழுக்க முடியவில்லை. போரில் தோற்ற சாதிக்கானின் தலையை வெட்டி கோட்டைக்குள்ளிருந்த சந்தாசாகிப்பிற்கு அனுப்பி வைத்தான் முராரி ராவ். எதிர்பார்த்த படியே வெளியில் வந்து போரிட்டு தோல்வியடைந்தான். சந்தாசாகிப் ஆண்ட அனைத்து நிலப்பகுதியும் மராட்டியர் வசமானது.
அந்த நிலப்பகுதிகளில் வரிவசூலிக்க மராட்டிய பிரதிநிதியாக திருநெல்வேலிச் சீமைக்கு வந்து சேர்ந்தவன் அப்பாஜிராவ். மராட்டியர் ஆட்சி இன்னும் உறுதியாக நிலைபெறாததால் தென்பாண்டி நாட்டுப் பாளையங்கள் கப்பம் கட்ட மறுதளித்தன. இரண்டொரு தெலுங்குப் பாளையங்கள் கூட வரி கொடுக்க இசையவில்லை.
ஆனால், இதனைப் போன்று கப்பம் வசூலிக்க வருபவர்களுக்கு உதவுவதற்கென்றே ஒரு ‘வனங்காமுடிப்’ பரம்பரை பாஞ்சாலங்குறிச்சியில் இருந்தது. அப்பாஜிராவைச் சந்தித்து முராரிராவுக்கு செய்த உதவிகளைக் காரணம்காட்டி அப்பாஜிராவின் அல்லக்கையானான் பொல்லாப் பாண்டிய கட்டப்பொம்மன். மற்ற பாளையங்களில் வரி வசூலித்து அதில் ஒரு பகுதி தரகுப் பணத்தை தான் வைத்துக் கொண்டு மீதியை மராட்டியர்களுக்குச் செலுத்தும் ‘கமிஷன் ஏஜென்ட்’ அதிகாரத்தை பொல்லாப் பாண்டியனுக்கு மராட்டியர்கள் அளித்தனர்.
மராட்டியர்களின் சார்பாக கப்பம் வசூலிக்க மேல்படாகை தமிழர் பாளையங்களுக்குள் ஆவலுடன் நுழைந்த பொல்லாப் பாண்டியனின் படைகளுக்கு மூக்கை உடைத்து அனுப்பின தமிழர் பாளையங்கள். அவமானமடைந்த பொல்லாப்பாண்டியன் ஒரு பெரும் படையை அனுப்பி வைக்குமாறு திருச்சியிலிருந்த முராரிராவுக்கு, அப்பாஜிராவ் மூலம் கடிதம் எழுதினான். ஆனால், இயற்கை வேறு விதமாக இருந்தது.
இந்த நேரத்தில் இரண்டு லட்சம் போர் வீரர்களும்,என்பதனாயிரம் குதிரை வீரர்களுடனும் நிஜாம் உல்முகின் தென்னாட்டின் மீது படையெடுத்தான். மராட்டியர்கள் விழிபிதுங்கி நின்றனர். இந்த லட்சனத்தில் பொல்லாப் பாண்டியனுக்கு எங்கிருந்து படையனுப்புவது? சாமியே சைக்கிளில் போகும் போது பூசாரிக்குப் புல்லட்டா?
உல்முகின் படையெடுப்பை தாக்குப் பிடிக்க முடியாத மராட்டியர் கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு ஓடினர். மீன்டும் தென்னகம் ஆர்காடு நவாப் வசமாகியது. முகமதலி திருச்சிக் கோட்டையில் அமர்ந்தான். அன்வர்கான் என்பவனை திருநெல்வேலிச்சீமைக்கு வரி வசூலிக்க அனுப்பி வைத்தான் முகமதலி. இந்த நேரத்திலும் அன்வர்கனின் முதல் அடிமையாக உருமாறி வரிவசூலிக்க உதவி நின்ற ஆபத்பாந்தவன் அதே பொல்லாப் பாண்டிய கட்டப் பொம்மன்தான். வித்தியாசமான பிறவிதான்!
அடுத்த சில ஆண்டுகளில் தென்னாட்டு அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து பிரஞ்சுக் காரர்களுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையேயான நேரடி யுத்தம் வரை வந்து நின்றது. இரு நாடுகளும் போருக்கு ஆகும் செலவை இங்கேயே வரியாக ஈட்டிக் கொள்ள முடிவெடுத்தன. பிரஞ்சுக்காரர்களுக்கு வரி வசூலிக்க திருநெல்வேலிக்கு வந்து சேர்ந்தவன் கனகராய முதலியார். அவனை பாஞ்சாலங்குறிச்சிக்கே அழைத்துச் சென்று விருந்தளித்து குளிர்வித்தான் பொல்லாப்பாண்டிய கட்டப்பொம்மன்.
கனகராயமுதலியார் அங்கிருந்தபடியே பிரஞ்சுத்தளபதி டூப்ளேக்கு ஒரு கடிதம் எழுதினான். அக்கடிதத்தில் “தென்பாண்டி நாட்டில் பிரஞ்சுப்பேரரசை வளர்த்து பிரஞ்சுக் கொடியைப் பறக்க விடுவதற்கு மிகவும் உதவ பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் பொல்லாப்பாண்டிய கட்டப் பொம்மன் காத்திருக்கிறார். முகமதலியையும், ஆங்கிலேயரையும் வென்று திருச்சிக் கோட்டையைக் கைப்பற்றும் வரை அந்த உதவிகள் மிகவும் இரகசியமாக இருக்க வேண்டுமென கட்டப்பொம்ம நாயக்கர் கேட்டுக் கொள்கிறார்” என குறிப்பிட்டு இருக்கிறார்.
கனகராய முதலியார் எழுதிய அந்தக் கடிதம் இன்றைக்கும் எழும்பூர் ஆவணக் காப்பகத்தில் இருப்பதாக தமிழ்வாணன் குறிப்பிட்டிருக்கிறார்!
நன்றி – https://www.facebook.com/anpezhil/posts/920971071314807
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக